தீபாவளி நாளில் எகிறிய சீன் வசூல்.. ஒரே நாளில் ரூ.23 கோடி! 3 நாட்களில் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

  • சென்னை: இந்த தீபாவளிக்கு சூர்யா ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்திருக்கிறது. ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சீன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் நாளில் கிடைத்த ஓப்பனிங், இரண்டாவது நாளில் அதிகரித்த வசூல் என தொடர்ந்து கவனம் ஈர்த்த இந்த படம், தீபாவளி நாளான ஞாயிற்றுக்கிழமையும் வசூலில் பெரிய முன்னேற்றம் அடைந்திருக்கிறது. 3வது நாளில் மட்டும் இந்தியாவில் ரூ.23 கோடிக்கும் அதிகமாக நெட் வசூல் பெற்றிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

    Advertisement

    சூர்யா நடிப்பில் இந்த வருஷம் ஏற்கனவே கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆகிய படங்கள் வெளியாகியிருந்தன. அந்த 2 படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. பல தோல்வி படங்களுக்கு பிறகு 2 வெற்றி படங்கள் வரிசையாக கிடைத்தது. அதே வரிசையில் 3வது படமாக சீன் வெளியாகியிருக்கிறது. மலையாளத்தில் ரோமாஞ்சம், ஆவேஷம் போன்ற படங்களை இயக்கிய ஜீத்து மாதவன் இந்த படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இதனால் மலையாள சினிமா ரசிகர்கள் மத்தியிலும் படத்துக்கு முன்கூட்டியே எதிர்பார்ப்பு இருந்தது.

    Advertisement

    தீபாவளி நாளில் வசூல்

    நவம்பர் 6-ம் தேதி வெளியான சீன் படம் முதல் நாளில் இந்தியாவில் ரூ.19.15 கோடி நெட் வசூல் செய்ததாக படங்களின் வசூல் நிலவரங்களை தெரிவிக்கவும் Sacnilk வெளியிட்டு இருக்கிறது . இரண்டாவது நாளான சனிக்கிழமை இந்த தொகை ரூ.20.35 கோடியாக உயர்ந்தது. இப்போது தீபாவளி நாளான நவம்பர் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மட்டும் ரூ.23.25 கோடி நெட் வசூல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதாவது ஒவ்வொரு நாளும் வசூல் அதிகரித்துக் கொண்டே சென்றிருக்கிறது. முதல் நாளைவிட இரண்டாவது நாளில் வசூல் உயர்ந்தது. அதைவிட 3வது நாளில் இன்னும் அதிகமாக வசூல் கிடைத்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்தியாவில் ரூ.27 கோடி மொத்த வசூல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    3 நாட்களில் மொத்த வசூல்

    முதல் மூன்று நாட்களின் வசூலை சேர்த்து பார்த்தால் சீன் படத்தின் இந்திய நெட் வசூல் ரூ.62.75 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் மொத்த வசூல் ரூ.72.90 கோடி. வெளிநாடுகளிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மூன்றாவது நாளில் மட்டும் வெளிநாடுகளில் சுமார் ரூ.10 கோடி வசூல் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் மூன்று நாட்களில் வெளிநாட்டு மொத்த வசூல் ரூ.43.75 கோடியாக உயர்ந்துள்ளது. இந்திய மற்றும் வெளிநாட்டு வசூலை சேர்த்துப் பார்த்தால் உலகளவில் ரூ.116.65 கோடி மொத்த வசூலை சீன் படம் கடந்துள்ளது. அதாவது வெளியான மூன்றாவது நாளிலேயே ரூ.100 கோடி மைல்கல்லைத் தாண்டியிருக்கிறது.

    Advertisement

    கேரளாவிலும் நல்ல வரவேற்பு

    இந்த படத்தின் வசூலில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகித்தாலும், கேரளாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதற்கு ஜீத்து மாதவனின் இயக்கமும், நஸ்ரியா, நஸ்லென் போன்ற மலையாள பிரபலங்களின் நடிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். குறிப்பாக மலையாளத்தில் ஏற்கனவே ரசிகர்களைக் கவர்ந்த இயக்குநர் என்பதால், அவருடைய தமிழ் படத்தை பார்க்கும் ஆர்வமும் அங்கு இருந்திருக்கிறது.

    படத்தில் சூர்யா கண் பார்வையற்ற காவல் அதிகாரி இன்பராஜ் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். ஒரு சீரியல் கில்லர் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டிய சூழலில், அவரிடம் நஸ்ரியா வேலைக்கு வருகிறார். அதற்குப் பிறகு என்ன ஆனது என்பதுதான் கதை. நஸ்லென், லால், ஆனந்த்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் வழக்கமான கதாபாத்திரங்களில் இருந்து சற்று வித்தியாசமான இந்த வேடமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.

    Advertisement

    சூர்யாவிற்கு இந்த வருஷம் 3வது படமாக வெளியான சீன், முதல் மூன்று நாட்களிலேயே நல்ல வசூல் வேகத்தை காட்டியிருக்கிறது. தீபாவளி போட்டியில் ராமாயணா, மூக்குத்தி அம்மன் 2 போன்ற படங்கள் இருந்தாலும், தமிழில் சீன் தனக்கான ரசிகர் கூட்டத்தை திரையரங்குகளுக்கு அழைத்து வந்திருக்கிறது. இனி வரும் நாட்களிலும் இதே வரவேற்பு தொடர்ந்தால் சூர்யாவின் இந்த படத்துக்கு இன்னும் பெரிய வசூல் மைல்கற்கள் காத்திருக்கலாம்.

    English Summary

    Scene collections: The film Scene , starring Suriya and directed by Jeethu Madhavan, has been released in theaters and is receiving a positive response. After a strong opening on its first day and an increase in collections on the second, the film saw a significant boost in earnings on Sunday, which coincided with Diwali. Reports indicate that the film garnered a net collection of over ₹23 crore in India on its third day alone.