சென்னை: தீபாவளி ரிலீஸ் படங்கள் என்றாலே பாக்ஸ் ஆபீஸில் யார் முந்தப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும். இந்த முறை சூர்யாவின் சீன், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2, ரன்பீர் கபூர் - யஷ் நடித்த ராமாயணா என 3 பெரிய படங்கள் வசூல் கணக்கில் கவனம் ஈர்த்துள்ளன. ஆனால் முதல் நாள் வசூல் நிலவரத்தை பார்த்தால் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரிகிறது. சூர்யாவின் சீன் நல்ல ஓப்பனிங்கை கொடுத்திருக்கிறது. நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களைத் தியேட்டருக்கு வரவழைக்கவில்லை. அதே நேரத்தில் ராமாயணா மட்டும் தனி ரேஞ்சில் வசூல் வேட்டையை தொடங்கியிருக்கிறது.
முதலில் சூர்யாவின் சீன் படத்தை பற்றிப் பார்க்கலாம். ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் இந்த படத்தில் நஸ்ரியா, நஸ்லென் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மலையாளத்தில் ரோமாஞ்சம், ஆவேஷம் படங்களை இயக்கி பிரபலமான ஜீத்து மாதவன் தமிழில் இயக்குநராக அறிமுகமாகியிருப்பதால் படத்துக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்ப்பு இருந்தது. அதோடு சூர்யாவும் இந்த வருஷம் ஏற்கனவே 2 ஹிட் படங்களை கொடுத்த நிலையில், 3வது படமாக சீன் வெளியாகியிருக்கிறது.
நவம்பர் 6-ம் தேதி வெளியான இப்படம் முதல் நாளில் இந்தியாவில் ரூ.19.15 கோடி நெட் வசூல் செய்துள்ளதாக Sacnilk வெளியிட்டு இருக்கிறது . இந்திய மொத்த வசூல் ரூ.22.25 கோடி. வெளிநாடுகளில் கிடைத்த சுமார் ரூ.12 கோடி வசூலையும் சேர்த்தால் உலகளவில் முதல் நாளில் ரூ.34.25 கோடி வசூல் செய்திருக்கிறது. இதில் தமிழ் ரிலீஸ் மட்டும் ரூ.16.15 இதனால் சூர்யாவின் இந்த ஆண்டின் 3 படங்களிலேயே சீன் படத்துக்கு நல்ல முதல் நாள் தொடக்கம் கிடைத்திருக்கிறது. கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படங்களின் ஓப்பனிங் வசூலைவிடவும் சீன் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தீபாவளி விடுமுறை, ரசிகர்களின் எதிர்பார்ப்பு, படத்துக்கு கிடைத்த ஆரம்ப வரவேற்பு ஆகியவை அடுத்தடுத்த நாட்களில் வசூலை உயர்த்துமா என்பதுதான் இப்போது கவனிக்க வேண்டிய விஷயம். இன்னொரு பக்கம் நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கியிருக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் முதல் நாள் வசூல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. முதல் பாகம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. அதோடு பிரம்மாண்டமான பட்ஜெட், பெரிய நட்சத்திர கூட்டணி என படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விஷயங்களும் இருந்தன. ஆனால் முதல் நாள் வசூல் கணக்கு வேறுவிதமாக இருக்கிறது. Sacnilk வெளியிட்டுள்ள தகவல்படி, இந்தியாவில் இப்படம் ரூ.1.88 கோடி நெட் வசூல் செய்துள்ளது. இந்திய மொத்த வசூல் ரூ.2.15 கோடி. இதில் தமிழ் ரிலீஸ் ரூ.1.75 கோடியும், தெலுங்கு ரிலீஸ் ரூ.13 லட்சமும் வசூல் செய்திருக்கிறது. இதுதான் இப்போது முக்கியமான விவாதமாக மாறியிருக்கிறது. ஒரே நாளில் வெளியான சீன் படத்துடன் ஒப்பிடும்போது மூக்குத்தி அம்மன் 2-ன் தொடக்க வசூல் மிகவும் குறைவாக இருக்கிறது. குறிப்பாக தமிழ் ரிலீஸ் மட்டும் பார்த்தாலும் இரண்டு படங்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்த இரண்டு படங்களையும் தாண்டி வசூலில் பெரிய அளவில் பேசப்படுவது ராமாயணா. ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடித்துள்ள இந்தப படத்தை நிதேஷ் திவாரி இயக்கியிருக்கிறார். இந்திய அளவில் பல மொழிகளில் வெளியான இந்த படம் நவம்பர் 5-ம் தேதியே திரைக்கு வந்துவிட்டது. அதாவது சீன், மூக்குத்தி அம்மன் 2 படங்கள் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாகவே ராமாயணா தனது வசூல் வேட்டையை தொடங்கிவிட்டது. படத்தின் முதல் நாள் வசூல் தொடர்பாக தயாரிப்புத் தரப்பு ரூ.155 கோடி உலகளாவிய வசூல் என அறிவித்துள்ளது. ஆனால் Sacnilk வெளியிட்ட தகவலில் உலகளாவிய வசூல் சுமார் ரூ.128.75 கோடியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ.64.85 கோடி நெட் வசூலும், ரூ.77.50 கோடி மொத்த வசூலும் கிடைத்ததாக அந்த டிராக்கர் தெரிவித்துள்ளது. மொத்தத்தில் இந்த தீபாவளி ரிலீஸில் சூர்யாவின் சீன் தமிழ் படங்களுக்கான வசூல் போட்டியில் நல்ல தொடக்கத்தை பெற்றிருக்கிறது. நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 மட்டும் முதல் நாளில் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லை. ஆனால் ராமாயணா இந்திய அளவிலான பிரம்மாண்ட வெளியீட்டின் பலனைப் பயன்படுத்தி மிகப்பெரிய வசூல் அள்ளி இருக்கிறது.நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2
ராமாயணா வசூல்