சேயோன் படத்தில் சீமான்.. வேட்டி சட்டையில் மாஸ் என்ட்ரி.. சிவகார்த்திகேயன் படத்துக்கு புது ட்விஸ்ட்

  • சென்னை: சிவகார்த்திகேயன் படம் என்றாலே ஒரு பக்கம் காமெடி, இன்னொரு பக்கம் ஆக்சன், அதற்கு நடுவில் செம மாஸ் தருணம் இருக்கும். ஆனால் இந்த முறை சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் பட குழு கொடுத்திருக்கும் சர்ப்ரைஸ் கொஞ்சம் வேற லெவலில் இருக்கிறது. இந்த படத்தில் சீமான் நடிக்கிறாராம் என்று கடந்த சில வாரங்களாகவே தகவல் சுற்றிக் கொண்டிருந்த நிலையில் அதை இப்போது அதிகாரப்பூர்வமாக்கும் வகையில் சீமான் வரும் புது வீடியோவை பட குழு வெளியிட்டு இருக்கிறது.

    Advertisement

    சேயோன் படத்தில் சீமான்

    அதுவும் சாதாரண அறிமுக வீடியோ கிடையாது. வேட்டி சட்டை அணிந்தபடி கிராமத்து பெரியவர் மாதிரியான தோற்றத்தில் சீமான் வருகிறார். சீமான் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அரசியல் மேடைகள்தான். அதற்கு முன்பு அவர் பல படங்களை இயக்கி, நடித்து இருந்தாலும் சமீப காலமாக அவர் மைக்கை பிடித்து நீளமான பேச்சு, அரசியல் விமர்சனம், தமிழர் அரசியல் என ஒரு முழு அரசியல் மோடில் அவரை பார்த்து பழகிவிட்ட ரசிகர்களுக்கு இப்போது action என்று சொல்லி சினிமா களத்தில் அவர் நிற்பது சுவாரஸ்யமான விஷயமாக மாறி இருக்கிறது.

    Advertisement

    சீமான் பற்றிய தகவல்கள்

    இந்த தலைமுறையினருக்கு அவருடைய பல படங்கள் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் இப்போது அவரை லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்கு சேயோன் படத்தில் பார்ப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தான். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். பாக்யஸ்ரீ போஸ் கதாநாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

    சீமான் கெட்டப்

    அதாவது கமல் தயாரிப்பு + சிவகார்த்திகேயன் ஹீரோ + சீமான் நடிப்பு + சந்தோஷ் நாராயணன் இசை காம்பினேஷனை பார்த்தாலே படத்துக்கு எதிர்பார்ப்பு ஏறாமல் இருக்குமா? பட குழு வெளியிட்டுள்ள வீடியோவில் சீமான் முழுக்க முழுக்க கிராமத்து லுக்கில் வருகிறார். வெள்ளை வேஷ்டியில் கம்பீரமான மீசையுடன் அவரைப் பார்க்கும்போது இது அரசியல் மேடையா? இல்ல சேயோன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டா? என்று ஒரு நிமிடம் குழம்பு வைக்கும் அளவுக்கு இருக்கிறது.

    Advertisement

    ரசிகர்களின் எதிர்பார்ப்பு

    படத்தில் சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் முக்கியத்துவம் சீமானுக்கும் இருக்கும் என்றே தெரிகிறது. படத்தில் அவருடைய கேரக்டர் என்ன என்பது மட்டும் இன்னும் அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை. சேயோன் என்ற தலைப்பு ஏற்கனவே ரசிகர்களிடம் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தின் கதைகள் குறித்து முழு விவரங்கள் இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. மதுரை வாழ்வியலை மையமாகக் கொண்ட கிராமத்து பின்னணியில் படம் உருவாகி வருகிறது. முருகன் குறித்த கருத்துக்களை அரசியல் மேடைகளில் தொடர்ந்து பேசி வரும் சீமான் சேயோன் படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடம் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    English Summary

    Seeman: A Sivakarthikeyan film typically features a blend of comedy and action, punctuated by high-octane 'mass' moments. However, the team behind his upcoming movie *Sayon* has sprung a surprise that takes things to a whole new level. While rumors about Seeman appearing in the film had been circulating for weeks, the production team has now officially confirmed it by releasing a new video featuring him.