“என்னை அடிச்சிட்டான்!” அழுதுகொண்டே வீடியோ போட்ட செல்வராகவன்.. இப்படி மாறிட்டாரே?

  • சென்னை: இயக்குநர் செல்வராகவன் என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அவருடைய முகமும், படங்களில் அவர் காட்டும் வித்தியாசமான நடிப்பும்தான். ஆனால், அதே செல்வராகவன் தனது மகனுடன் செல்லமாக விளையாடி, அழுதுகொண்டே ஒரு வீடியோ வெளியிட்டால் எப்படி இருக்கும்? அப்படியொரு வீடியோவைப் பார்த்துதான் இப்போது ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    Advertisement

    செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருக்கிறார். அதில், "என்ன ரிஷி அடிச்சுட்டான்.. ரிஷி அடிச்சிட்டான்" என்று அழுதுகொண்டே சொல்கிறார். இதைப் பார்த்ததும், கேப்ஷனைப் படிக்காத ரசிகர்களுக்கு என்னடா இது, செல்வராகவனுக்கு என்ன ஆச்சு, யாராவது அவரை அடித்துவிட்டார்களா என்று பதறிப்போகும் அளவுக்கு அந்த வீடியோ இருக்கிறது. ஆனால், அதன் பிறகுதான் தெரிகிறது, அவரை அடித்தது வேறு யாருமில்லை, அவருடைய மகன் ரிஷிதான்.

    Advertisement

    செல்வராகவன் வெளியிட்ட வீடியோ

    மகனுடன் விளையாடும்போது நடந்த ஒரு செல்லமான சம்பவத்தைத்தான் செல்வராகவன் இப்படி வீடியோவாகப் பகிர்ந்திருக்கிறார். இதற்காகவே ரசிகர்கள் அவருடைய பதிவின் கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர். படங்களில் பார்த்த செல்வராகவனுக்கும், வீட்டில் மகனுடன் விளையாடும் செல்வராகவனுக்கும் எவ்வளவு வித்தியாசம் என்று பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.

    செல்வராகவன் ஸ்பெஷல்

    செல்வராகவன் என்றாலே காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் நினைவுக்கு வரும். காதல், வலி, கோபம், மனதுக்குள் இருக்கும் போராட்டம் என மனிதர்களின் உணர்ச்சிகளை வித்தியாசமான கோணத்தில் காட்டுவதில் அவருக்கு என்று தனி பாணி இருக்கிறது. அதேபோல, சாணிக் காயிதம், பீஸ்ட் போன்ற படங்களில் நடிகராகவும் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார்.

    Advertisement

    குறிப்பாக, அவருடைய முகபாவனைகளும் வசன உச்சரிப்பும் சில நேரங்களில் பார்ப்பவர்களுக்கே ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்திவிடும். அதனால்தான் இந்த வீடியோவைப் பார்க்கும் ரசிகர்களுக்கு, திரையில் இவ்வளவு டெரராக இருக்கும் செல்வராகவனா இப்படி குழந்தை மாதிரி அழுது விளையாடுகிறார் என்ற ஆச்சரியம் வருகிறது.

    மதுரையில் தனுஷ் கைக்கு வந்த வேல்.. கோவிலில் 18 அடி அரிவாள்.. அரசியலா? அன்பா?

    தனுஷ் சொன்ன வார்த்தை

    செல்வராகவனுக்கும் நடிகர் தனுஷுக்கும் இடையிலான உறவு சினிமா ரசிகர்களுக்குத் தெரிந்ததுதான். அண்ணன், தம்பி என்ற உறவைத் தாண்டி, இருவரும் இணைந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். தனுஷின் திரைப்பயணத்தில் செல்வராகவனின் பங்களிப்பும் முக்கியமானது. தனுஷ் ஒரு பேட்டியில், செல்வராகவன் மிகவும் கண்டிப்பானவர் என்றும், அவருடன் பணியாற்றும்போது அவருடைய நடிப்பு குறித்த விமர்சனங்களால் தான் வெறுப்பேற்றப்பட்டதாகவும் பேசியிருந்தார்.

    Advertisement
    அரசியல் பேச்சு ஒருபக்கம்... தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜை நேரில் அழைத்து தனுஷ் செய்த காரியம்!

    ராயன் படத்தில் செல்வராகவனை நடிக்க வைத்தபோது, அவரிடம் நடிப்பைப் பற்றி விமர்சனம் செய்து அவரைத் திருப்பி வெறுப்பேற்றியதாகவும் தனுஷ் கூறியிருந்தார். அண்ணனிடம் அனுபவித்ததைப் படப்பிடிப்பில் திருப்பிச் செய்துகொண்டதாக அவர் சொன்ன விஷயம் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இப்படி தம்பியிடமே கண்டிப்பான அண்ணனாக இருந்த செல்வராகவனை, இப்போது மகனிடம் செல்லமாக அடிவாங்கியதாக அழுதுகொண்டிருக்கும் அப்பாவாகப் பார்க்கும்போது ரசிகர்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

    செல்வராகவனின் இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்களும், "இப்படியொரு இன்னசென்ட் அப்பாவா இவர்?", "படத்தில் பயமுறுத்துறவருக்கு வீட்டில் இதுதான் வேலையா?" என்று தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். மகன் ரிஷியுடன் அவர் செய்திருக்கும் இந்தச் செல்லமான விளையாட்டு, செல்வராகவனின் இன்னொரு பக்கத்தை ரசிகர்களுக்குக் காட்டியிருக்கிறது.

    English Summary

    Selvaraghavan: When one thinks of director Selvaraghavan, what usually comes to mind first is his face and the distinctive acting style he displays in films. But what if that very same Selvaraghavan were to release a video of himself playfully interacting with his son—while shedding tears? Fans are currently amazed after seeing just such a video.