சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்வு முறைகேடு விவாகரத்து தொடர்ந்து மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்தி வரும் போராட்டத்தில் பல பிரபலங்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்ற இந்த மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட விஜய் டிவி சீரியல் நடிகையையும் தொகுப்பாளியுமான கல்யாணி முதல்வர் விஜய் குறித்து பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதில் கல்யாணி பேசும்போது, சார் உங்களை நம்பி தானே ஓட்டு போட்டோம்? என்னோட கணவரும் ஒரு டாக்டர். அவர் நீட் தேர்வு எழுதாமல் தான் டாக்டர் ஆனார். நீட் இல்லை என்றால் இன்னும் நிறைய டாக்டர்கள் உருவாகுவார்கள். அதனால் நீட்டை கண்டிப்பாக தடை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். மேலும் இன்றைய ஜென்சி பசங்களுக்கு நீங்கள் ஆதரவாக நிற்க வேண்டும்.
நடிகை கல்யாணி பேட்டி
எங்களுக்காக கொஞ்சம் பேசினால் நல்லா இருக்கும். நாங்கள் உங்களை நம்பி தான் ஓட்டு போட்டோம்? இப்படி ஒரு போராட்டம் நடக்கும்போது நீங்களும் எங்களுக்காக நின்றால் இன்னும் நல்லா இருக்கும் என்று முதல்வரிடம் நேரடியாக கோரிக்கை வைத்திருக்கிறார்.
அடியோடு மாறுது.. மகளிருக்கு மாதம் ரூ.2500! விஜய் போட்டு வைத்திருக்கும் மெகா ப்ளான்! யார் பெயர்?
நடிகை கல்யாணி வேறு யாருமில்லை சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர்தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் உட்பட ஒரு சில சீரியல்களில் நடித்திருந்தார். அந்த சீரியலில் தான் நடிகர் ரச்சிதா மகாலட்சுமி அறிமுகமானார். அதற்குப் பிறகு அவர் சரவணன் மீனாட்சி சீரியல் நடித்து பெரிய அளவில் பெயர் வாங்கினார். ஆனால் இந்த பிரிவோம் சந்திப்போம் சீரியலில் கதாநாயகி கல்யாணி தான்.
அதுபோல அவர் பல நிகழ்ச்சிகளையும் அந்த நேரத்தில் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு பெரிதாக அவர் சீரியல்களில் நடிக்கவில்லை என்றாலும் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பாலியல் தொந்தரவுகள் போன்ற விஷயங்களை பேசியது கூட சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அது மட்டுமல்லாமல் கல்யாணி பல திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். ஜெயம் படத்தில் சதாவின் தங்கச்சியாக நடித்தது இவர்தான். மீண்டும் சாதித்த விஜய்.. ஜனநாயகன் 4 நாளில் எத்தனை கோடி வசூல் தெரியுமா? ஞாயிற்றுக்கிழமை எகிறிய மவுசுநடிகை கல்யாணி ஆரம்ப காலம்
இந்த நிலையில் இப்போது அவர் சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ஏற்கனவே மாணவர் போராட்டம் நடந்த இடத்தில் நடிகை சனம் ஷெட்டி பேசிய விஷயங்கள் கூட விவாதத்தை ஏற்படுத்தியது. நான் தளபதி விஜய்யின் ரசிகை, ஜனநாயகன் பாத்துட்டு தான் இங்க வந்திருக்கிறேன் என்று அவர் சொன்னதும் கூட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது அவரிடம் இருந்த மைக்கை பிடுங்கி விட்டார்கள் என்று சனம் ஆவேசமாக பேசியிருந்தார். இந்த பஞ்சாயத்துக்கு மத்தியில் இப்போது சின்னத்திரை நடிகை கல்யாணியும் பேசியிருக்கிறார்.