விஜய்க்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டது தப்பா போச்சு.. கரண்ட் பில் பிரச்சனை! சீரியல் நடிகை உருக்கமான போஸ்ட்

  • சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்தில் தொடக்கத்தில் இருந்து அவருக்கு ஆதரவாக சோசியல் மீடியாவில் தொடர்ந்து சின்னத்திரை பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்து வந்தனர். அதில் ஒருவர் தான் வைஷாலி தனிகா. தற்போது அவர் விஜய்க்கு ஆதரவு கொடுத்து வீடியோ வெளியிட்டது தவறாக போய்விட்டது என்பது போல ஒரு உருக்கமான வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    Advertisement

    விஜய்க்கு சப்போர்ட்

    விஜய் அரசியலில் என்ட்ரி ஆனதும் ஆரம்பத்திலிருந்து வைஷாலி விஜய்க்கு ஆதரவாக போஸ்ட் போட்டுக் கொண்டிருந்தார். அதிலும் எலக்சன் சமயத்தில் வைஷாலினியும் அவருடைய கணவரும் விஜயின் டிரஸ் கோடில் உடை அணிந்து வாக்கு செலுத்தி விட்டு வந்து வீடியோக்காக வெளியிட்டனர். இதனாலே எங்களுடைய சப்போர்ட் விஜய்க்கு தான் என்பது போலத்தான் அவர்கள் ஆரம்பத்தில் இருந்து செய்து வந்தனர்.

    Advertisement

    அது போல விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற திட்டத்திற்கு கையெழுத்து போட்டதும் சந்தோஷமாக வீடியோ வெளியிட்ட அதே வைஷாலி தற்போது எங்களுக்கு ஏற்கனவே வந்த தொகையை விட இப்போது அதிகமாக பில் வருகிறது என்று ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

    சீரியல் நடிகை வைஷாலி தனிகா

    வைஷாலி சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். முத்தழகு, கோகுலத்தில் சீதை, பொம்ம குட்டி அம்மாவுக்கு, மகாநதி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளவர். மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் தன்னுடைய கணவருடன் கலந்து கொண்டு இருந்தார். அவர்தான் விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்வது போல கடந்த 2026 சட்டமன்ற பேரவை தேர்தலில் வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

    Advertisement

    உருக்கமான வீடியோ

    இதன் நிலையில் சில மாதங்களுக்கு பிறகு விஜய் முதல் கையெழுத்து போட்ட போது தான் சந்தோஷமாக பேசிய வீடியோவை இப்போது மீண்டும் பகிர்ந்து வைஷாலி உருக்கமாக பேசி இருக்கிறார். அதில் நான் தான் இந்த வீடியோவில் பேசியிருக்கிறேன். ஆனால் இப்போது சில மாதங்களாக நடக்கிற சூழ்நிலை சரியாக இல்லை. 200 யூனிட் இலவசம் மின்சாரம் என்று அறிவிப்பு வந்தபோது மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைய இருந்தனர்.

    நானும் சந்தோஷமாகத்தான் இருந்தேன். ஆனால் முன்பு வந்த மின் கட்டணத்தை விட இப்போ அதிகமான தொகை வருகிறது. இதனால் சாமானிய குடும்பம் ரொம்பவும் கஷ்டப்படுகிறார்கள். ஏற்கனவே வந்த அமௌண்டை விட இப்போது அதிகமாக பில் வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் எல்லோருக்குமே பிரச்சனை தான் என்று கூறி இருக்கிறார்.

    Advertisement

    மேலும் தனது வீட்டிலும் கரண்டு பில் பல மடங்கு உயர்ந்திருப்பதாக கூறியிருக்கும் அவர் இதற்கு முன்பு ஆட்சியில் எப்படி மின்சாரத்தை கணக்கிட்டு கட்டணம் வசூலித்தார்களோ அதேபோல இனியும் சரியான முறையில் கணக்கிட்டு கட்டணம் வசூலிக்க வேண்டும். 200 யூனிட் ஃப்ரீ என்பது கூட எங்களுக்கு வேண்டாம் பழைய படியே கணக்கிட்டால் போதும் என்று எமோஷனலாக அவர் பேசியிருக்கிறார்.

    அதிகரித்த கரண்ட் பில்

    இதனால் விஜய் அரசுக்கு ஆதரவாக பேசிய நடிகையே தற்போது மின்சார கட்டண பிரச்சனையை சுட்டிக்காட்டுகிறார் என இந்த வீடியோ குறித்து பலரும் விவாதித்து வருகின்றனர். வைஷாலிக்கு மட்டுமல்ல இதுவரைக்கும் லட்சக்கணக்கான ஊர் தங்களுக்கு இதுவரைக்கும் வந்ததை விடவும் இந்த முறை அதிகமான மின்சார கட்டணம் வந்திருப்பதாக அவர் புகார் கொடுத்து இருக்கின்றனர். பலரும் இது குறித்து குமுறி கொண்டிருக்கின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    English Summary

    Vaishali: From the beginning of actor Vijay's political journey, many small screen celebrities have been voicing their support on social media. Vaishali Tanika is one of them. Now he is releasing a video that shows his support for Vijay as if it went wrong. This has caused a lot of criticism on the internet.