சீரியல் என்றாலும் வரைமுறை வேண்டாமா? ஒரே சேனலில் கணவன், மனைவிக்கு வேறொருத்துடன் முதலிரவு

  • சென்னை: சீரியலை சீரியலாக மட்டும் பாருங்கப்பா என்று சிலர் சொல்லலாம். ஆனால் சீரியலில் நடக்கும் சம்பவங்கள் எல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் சின்னத்திரை ரசிகர்கள் கடந்துவிட மாட்டார்கள். அதுபோலத்தான் இப்போது விஜய் டிவியில் இரண்டு சீரியலில் நடக்கும் அளப்பறைகளை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

    Advertisement

    அதாவது விஜய் டிவியில் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் சிறகடிக்க ஆசை ஆசை சீரியல் மற்றும் சமீபத்தில் தொடங்கப்பட்ட ஒண்ணா இருக்க கத்துக்கனும் என்ற இரண்டு சீரியல்களில் நடிக்கும் தம்பதியை வைத்துதான் இப்போது நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் விவாதத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதாவது சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் வெற்றி வசந்துக்கு சீரியல் நடிகை வைஷ்ணவியுடன் கல்யாணம் முடிந்து இருந்தது.

    Advertisement

    காதல் கல்யாணம்

    இந்த தம்பதிக்கு கல்யாணம் முடிந்து இரண்டு வருடங்கள் தான் ஆகிறது. அப்போது வைஷ்ணவி விஜய் டிவியில் பொன்னி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். அதற்கு முன்பு ராஜா ராணி சீரியலில் அவர் துணை கேரக்டரில் தான் நடித்திருந்தார். ஆனால் பொன்னி சீரியல் தான் அவருக்கு ஹீரோயினி வாய்ப்பு கொடுத்தது‌. அந்த சீரியலில் கெஸ்ட் ஆக வெற்றி வசந்த் நடித்திருந்தார். அப்போதுதான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு இருக்கிறது.

    கதறி அழுத நடிகை

    இவர்களுடைய காதல் சில நாட்கள் தான் தொடர்ந்திருக்கிறது. உடனே கல்யாணத்தில் முடிந்திருக்கிறது. இப்போது மகிழ்ச்சியான தம்பதியாக இவர்கள் இருக்கிறார்கள். எந்த இடத்திலும் கணவன் மனைவி இருவருமே ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார்கள். அதேபோல என்னுடைய மனைவி ஒரு குழந்தை போல, அவருடைய அப்பாவுக்கு ரொம்ப செல்லம்... அவங்க அப்பா இறந்து போயிட்டாரு நான் அந்த இடத்தில் இருக்கிறேன். என்னுடைய மனைவியை நான் கண்கலங்க விடமாட்டேன் என்று வெற்றி வசந்த் சொல்லி இருக்கிறார்.

    Advertisement

    சிறகடிக்க ஆசை: முத்துவிடம் வசமாக சிக்கும் மனோஜ்.. விஜயா ஆட்டம் ஆரம்பம்.. ஒரு வழியாக மாறிய கதை
    வெற்றி வசந்தத்துக்கு சின்னத்திரையில் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரை பலரும் சின்னத்திரை விஜய் சேதுபதி என்று கொண்டாடுகின்றனர். அதனாலேயே வைஷ்ணவியை சில ரசிகை தொல்லைகள் திட்டி தீர்த்து இருக்கிறார்கள். எங்க வெற்றிவசந்த்துக்கு இப்படி ஒரு பொண்ணா? வெற்றி வசந்தத்துக்கு ஜோடி மீனாதான் என்று சீரியல் லைஃபையே நிஜ லைஃப் உடன் தொடர்பு படுத்தி பேசி இருக்கிறார்கள்.

    வைஷ்ணவியின் புதிய சீரியல்

    இதனால் ஒரு முறை வைஷ்ணவி கண்கலங்கி வீடியோவும் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் பொன்னி சீரியல் முடிந்தடைந்த பிறகு வைஷ்ணவி இப்போது விஜய் டிவியில் ஒன்னா இருக்க கத்துக்கணும் சீரியலில் கமிட்டாகி இருக்கிறார். இந்த சீரியல் சமீபத்தில் தான் தொடங்கியது. ஆரம்பத்திலிருந்து ஓரளவுக்கு டிஆர்பியும் பெற்று வருகிறது.

    Advertisement

    முதலிரவு காட்சிகள்

    இந்த நிலையில் தான் இப்போது வெற்றிவசத்ந்க்கு சிறகடிக்க ஆசை சீரியலில் முதலிரவு காட்சி மீனாவுடன் நடக்கிறது. ஏற்கனவே முத்துவுக்கும் மீனாவுக்கும் கல்யாணம் நடந்திருந்தாலும் இப்போ முத்துவின் பாட்டி பழைசை மறந்து போய்விட்டதால் மீண்டும் திருமணம் நடத்தி இருவருக்கும். அதனால் முத்துவுக்கும் மீனாவுக்கும் முதலிரவு வைத்திருக்கிறார்கள்.

    நெட்டிசன்கள் கிண்டல்

    அதேபோல ஒண்ணா இருக்க கத்துக்கணும் சீரியலிலும் வைஷ்ணவிக்கு கல்யாணம் முடிந்து இருக்கிறது. அவருக்கும் முதலிரவுக்கு வைத்திருக்கிறார்கள். இந்த இரண்டு சீரியலின் ப்ரோமோவும் இப்போ இணையத்தில் வைரல் ஆகி வருவதை பார்க்கும் நெட்டிசன்கள், ஒரே சேனலில் என்னையா பண்ணி வச்சிருக்கீங்க? கணவன் மனைவிக்கு வேற வேற ஒருத்தருடன் ஒரே நேரத்தில் முதலிரவு காட்சிகள் வைப்பீங்களா? என்று கலாய்த்து வருகிறார்கள்.

    English Summary

    Serial Controversy: Some might say, "Just treat a TV serial as a serial." However, television viewers do not easily move past the events that unfold in these shows. This is precisely what is happening now, with netizens having a field day trolling the outrageous antics taking place in two serials on Vijay TV.