பெண் செய்தி வாசிப்பாளரின் பாலியல் புகார்.. தொழிலதிபர் பிஆர் சுந்தர் மீது 5 பிரிவுகளில் வழக்கு

  • சென்னை: சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மற்றும் முதலீட்டு ஆலோசகரான பிஆர் சுந்தர் மீது பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் தொல்லை, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், குற்றவியல், மிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    பாலியல் புகார்

    புகார் அளித்துள்ள பெண் செய்தி வாசிப்பாளர், வேலை தொடர்பாக ஏற்பட்ட பழக்கத்தை பயன்படுத்தி பி ஆர் சுந்தர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஆபீசுக்கு அழைத்து சென்று சுமார் 3 மணி நேரம் வெளியே செல்ல முடியாத வகையில் அடைத்து வைத்து மிரட்டியதாகவும், தன்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் அச்சுறுத்தியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஐஸ் ஹவுஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    மனைவி மீதும் வழக்கு

    இந்த வழக்கில் மேலும் ஒரு முக்கிய திருப்பமாக பி.ஆர் சுந்தர் மனைவி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறதாம். அதாவது பி ஆர் சுந்தரத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி அவர் மீதும் கம்ப்ளைன்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறதாம். விசாரணையின் போது கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பி.ஆர் சுந்தர் பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகராகவும், ட்ரேடராகவும் பிரபலமானவர். யூடியூப் சமூக வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு முதலீட்டு நிகழ்ச்சிகள் மூலம் பங்குச்சந்தை தொடர்பான ஆலோசனைகளை வழங்கி பெரிய அளவில் பாலோவர்களை பெற்றுள்ளார். பங்கு சந்தை வர்த்தகம், ஆஃப்லைன் டிரேடிங் குறித்து தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு வந்ததால் முதலீட்டாளர்கள் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி இருந்தார்.

    அதுபோல பல நிறுவனங்களின் நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார். சமூக வலைத்தளங்களில் பெரும் செல்வாக்கு கொண்ட முதலீட்டு ஆலோசகர் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பதும், அதே வழக்கில் அவரது மனைவியும் சேர்க்கப்பட்டிருப்பதும் இந்த விவாகரத்தை மேலும் பரபரப்பாக்கி உள்ளது.

    பாலியல் தொந்தரவு செய்த இசையமைப்பாளர்.. பிரியாணிக்கு விலை.. மீண்டும் பாடகி ஸ்வாகதா தாக்கு! யார் அவர்?
    இருப்பினும் இது தற்போது விசாரணையில் உள்ள வழக்கு என்பதால் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை அவை குற்றச்சாட்டுகளவே கருதப்படுகின்றன. இந்த வழக்கில் போலீசாரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    PR Sundar: The fact that the police have registered a case against PR Sundar, a prominent businessman and investment consultant from Chennai, based on a complaint lodged by a female newsreader, has created a stir. A case has been registered under five sections including sexual harassment, prevention of violence against women, criminality and intimidation and investigation is underway.