நடிகர்களுக்கும் பாலியல் தொந்தரவு! Gay ஆண்கள் டார்ச்சர்.. அதுவும் எப்படி தெரியுமா? சினிமா அவலத்தை உடைத்த ஷகிலா

  • சென்னை: சினிமா துறையாக இருந்தாலும், சரி எந்த துறையாக இருந்தாலும் சரி அதில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, பாலியல் தொந்தரவுகள் இருக்கிறது, அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கிறது என்று பலரும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதே போல சில ஆண்களும் இதுபோன்ற தொந்தரவுகளை சந்தித்து வந்திருக்கிறார்கள். ஆனால் அதைப்பற்றி பலர் வெளியே செல்வதற்கே தயங்குவார்கள். இந்த நிலையில் இது பற்றி நடிகை ஷகிலா பேட்டி ஒன்றில் ஆண் நடிகர்களுக்கும் பாலியல் தொந்தரவுகள் நடக்கும் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

    பாலியல் சீண்டல்

    பெண்களுக்கான அட்ஜஸ்மென்ட் பிரச்சனை குறித்து பல நடிகர்கள், நடிகைகள் பேசி இருக்கின்றனர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிராவோ என்ற ஒரு போட்டியாளர்கள் கலந்து கொண்ட போது அவர் தான் மாடலின் உலகில் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் குறித்து பேசியது அந்த சமயத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படி ஒரு பிரபலம் வந்து பேசியது பலருக்கும் வியப்பை கொடுத்து இருந்தாலும் ஒரு சில ஆமாம் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது, நாங்களும் அனுபவித்திருக்கிறோம் என்று சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்திருந்தனர்.

    ஆண்களுக்கும் பாலியல் பிரச்சனை

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான பாலாஜி முருகதாஸ் கூட இதை ஒரு இடத்தில் மறைமுகமாக சொல்லி இருந்தார். அதே விஷயத்தை தான் இப்போது நடிகை சகிலாவும் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும்போது, சினிமா துறையில் நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கிற மாதிரி இல்ல.. பல விஷயங்கள் வெளியே தெரியவே செய்யாது. பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள், அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை இருக்குன்னு உங்க எல்லாருக்கும் தெரியும்.

    நடிகை ஷகிலா பேட்டி

    ஆனால் அதே பிரச்சனை ஆண்களுக்கும் இருக்கு. சில ஆண்கள் அழகாகவும் திடகாத்திரமாகவும் இருப்பார்கள். ஆனால் அவர்கள் Gay- வாக (தன் பாலின ஈர்ப்பாளர்கள்) இருப்பார்கள். சில நடிகர்களை ரொம்பவும் தொந்தரவு பண்ணுவார்கள். மாடலிங் மூலமாக நடிக்க வேண்டும் என்று வரும் இளைஞர்களுக்கு மாடலிங் மட்டும் தான் தெரியும். வேற எதுவும் தெரியாது. உடனே அவர்கள் மாடலிங் போட்டோ சூட் எடுக்கும்போதே நீ என்னிடம் அட்ஜஸ்ட் பண்ண வேண்டும், அப்படி அட்ஜஸ்ட் பண்ணா தான் உனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும், உன்னை நான் கேமராவில் அழகாக காட்டுவேன்.

    அட்ஜஸ்மென்ட் தொந்தரவுகள்

    உனக்கு அடுத்த மாடலின் வாய்ப்பு வரவேண்டும் என்றால் என் கூட அட்ஜஸ்ட் பண்ண வேண்டும் என்று பல கண்டிஷன் போடுவார்கள். இதற்கு சில ஆண்கள் ஒத்துக்க மாட்டார்கள். ஆனால் ஒரு சிலர் வேற வழி இல்ல நமக்கு தெரிந்தது இதுதான் இதில் ஏதாவது செய்தாக வேண்டுமே என்று அட்ஜஸ்ட் பண்ணி இருக்கிறார்கள். சில ஆண்கள் கூட இதில் கண்ணீர் வடித்தவர்களும் உண்டு. தான் என்னதான் வெளியே அழகாக இருந்தாலும், கம்பீரமாக இருந்தாலும் சில இடங்களில் அவர்களாலும் ஒன்றும் சொல்ல முடியாது செய்ய முடியாத சூழ்நிலை எல்லாம் ஏற்பட்டிருக்கிறது.

    ஷாருக்கான் பட வாய்ப்பு

    என்கிட்ட இது பற்றி பலரும் வருத்தப்பட்டு சொல்லி இருக்கிறாங்க என்று அந்த பேட்டியில் ஷகிலா பேசியிருந்தார். மேலும் நடிகர் ஷாருகானுடன் தான் நடிக்க மறுத்த காரணம் குறித்தும் அந்த பேட்டியில் பேசி இருந்தார். அதில் நான் மலையாள சினிமாவில் பிஸியாகவும் இருந்த சமயத்தில் எனக்கு ஷாருக்கான் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போது அவர்கள் நீங்க இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் ஆடிஷனில் கலந்து கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். எனக்கு கடுப்பாகிவிட்டது.

    அட்ஜஸ்மென்டுக்கு
    ஏன் எனக்கு நடிக்க தெரியாதா? அல்லது என்னால் என்ன கேரக்டரோ அதுக்கு தகுந்த மாதிரி நடிக்க முடியாதுன்னு நீங்க நம்புறீங்களா? என்று கேட்டேன். அதற்கு பட குழுவினர் மேடம் சத்யராஜ் சார் கூட ஆடிஷனுக்கு வராரு, ஆடிஷன் பண்ணி தான் எடுப்போம் என்று சொன்னார். அப்படியானால் எனக்கு அந்த வாய்ப்பே வேண்டாம் என்று நான் சொல்லிவிட்டேன். சத்யராஜ் எதற்காக வாரார்னு எனக்கு தெரியல, ஒருவேளை அவருக்கே அவர் மீது நம்பிக்கை இல்லாம இருந்திருக்கலாம். ஆனால் என்னால் இதுபோல எல்லாம் ஆடிஷனில் கலந்து கொள்ள முடியாது என்று நான் ஷாருக்கான் படத்தில் நடித்த வந்த வாய்ப்பை மறுத்துவிட்டேன் என்று அந்த பேட்டியில் ஷகிலா பேசியிருக்கிறார். இது இணையத்தில் கவனத்தை எடுத்து வருகிறது.

    English Summary

    Shakeela: Many people speak about the lack of safety for women in the film industry—and other sectors—citing issues like sexual harassment and demands for "adjustments." However, men, too, have faced similar forms of harassment. Addressing this, actress Shakeela spoke openly in an interview about how male actors also experience sexual harassment.