கணவர் என் பிரண்டு கூட செக்ஸ்.. பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியில் அவமானம்! மாடல் நடிகை குமுறல்

  • சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் காமன் மேன் ஒருவர் கலந்து கொள்வதற்காக பிக் பாஸ் காமன் மேன் என்ற ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் பல கட்ட ஆடிஷனில் இருந்து ஒருவர் மட்டும் செலக்ட் செய்து பிக்பாஸ் 10 நிகழ்ச்சிக்கு போட்டியாளராக அனுப்ப போகிறார்களாம். இதற்காக ஆட்டிஷனில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அதில் ஒருவர் தான் மாடல் நடிகையான மாயா நடாஷா. இவர் அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய முன்னாள் கணவர் பற்றி பல ரகசியங்களை பேசி இருக்கிறார். ஆனாலும் கடைசியில் அவருக்கு அவமானம் கிடைத்தது என கூறியிருக்கிறார்.

    பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடங்கிய பிறகுதான் சர்ச்சை ஏற்படுத்தும் ஆனால் பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சி ஆடிஷனிலேயே பெரிய பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் சாதாரண மக்களை கலந்து கொள்ள வைக்க போகிறோம் என்று சொல்லிவிட்டு சோசியல் மீடியாவில் ஓரளவிற்கு பிரபலமாக இருப்பவர்களைத்தான் கலந்து கொள்ள வைத்திருக்கிறார்கள்.

    அதிலும் நைட்டி அக்கா செய்த அலப்பறை எல்லாம் ப்ரோமோவாக பலரும் பார்த்து இருக்கலாம். அதுபோல உள்ளே முதல் இரண்டாவது சுற்றுகளில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் பலர் youtube சேனல்களிலும் தங்களுடைய வருத்தங்களையும், கோபத்தையும் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். நடுவர்களாக இருக்கும் ஆரி மாயா ராஜு ஓவியாவை வசைப்பாடி வருகிறார்கள்.

    கணவர் செய்த துரோகம்

    அது போல தான் மாடலும் நடிகையுமான மாயா நடாஷா என்பவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் பேசுகையில், ஆடிஷனில் எங்களுடைய வாழ்க்கையில் எங்களை பாதித்த விஷயங்களை பற்றி கேள்வி கேட்டாங்க. அதற்கு நாங்களும் எங்களுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சொன்னோம். நான் என்னுடைய கணவர் என் கண் முன்பு என்னுடைய ரூம் மெட்டுடன் செக்ஸ் பண்ணி கொண்டு இருந்தார். அதை பார்த்து நான் ஏமாற்றத்தில் துடி துடித்து போனேன்.

    பிறகு அவருடைய அப்பாவுக்கு அதை பற்றி போன் செய்து சொன்னேன். ஆனால் அவர் அவருடைய பிள்ளையை தண்டிக்காமல் அவர் மிலிட்டரிகாரர் என்பதால் செல்வாக்கை பயன்படுத்தி என்னை போலீஸை வைத்து கைது செய்ய வைத்தார். இதை பற்றி நான் அங்கு சொல்லிக் கொண்டிருக்கிறேன் ஆனால் அவங்க இது எங்களுக்கு சுவாரஸ்யமாக இல்லை என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட்டார்கள்.

    போட்டியாளரின் ஆதங்கம்

    என்னுடைய வேதனை அவர்களுக்கு சுவாரஸ்யம் இல்லை என்று சொல்கிறார்கள். அவங்க தான் உங்களுடைய கஷ்டங்களை சொல்லுங்க என்று சொன்னாங்க அப்போ நம்மளுடைய மனதில் எந்த விஷயம் நமக்கு பெரிய ஏமாற்றமாகவும், கஷ்டமாகவும் இருக்கிறதோ அதைத்தானே சொல்ல முடியும்? ஆனா அவங்க நம்ம என்ன சொல்ல வருகிறோம் என்பதை காது கொடுத்து கேட்கவில்லை.

    அங்கிருந்த நடுவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. ஒருவர் ஒரு வார்த்தை சொல்கிறார், இன்னொருவர் இன்னொன்று சொல்கிறார். யார் பேச்சை நாம் கேட்பது என்று எனக்கு மட்டுமல்ல உள்ளே போன எந்த போட்டியாளர்களுக்கும் புரியவில்லை. நடுவர்கள் எல்லோரும் ஒரே மனநிலையில் இருந்தால்தானே போட்டியாளர்களால் அவர்களுடைய திறமையை வெளிப்படுத்த முடியும்? ஆனால் அவர்களே அவர்களுக்குள் கருத்து வேறுபாடுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

    நடுவர்கள் மீது குற்றச்சாட்டு

    இதில் போட்டியாளர்கள் என்ன செய்தாலும் அதில் குறை தான் சொல்கிறார்கள். பாதி பேர் பேச ஆரம்பித்ததுமே ஃபுல் ஸ்டாப் வைத்து அவர்களை பேசவிடாமல் தடுத்து விடுகிறார்கள். ஆனால் ஆரம்பத்திலேயே சில போட்டியாளர்களை மட்டும் செலக்ட் பண்ணி வைத்து விட்டார்கள். அவர்களை அதிகமாக பேச விட்டு ரசிக்கிறார்கள். அவர்கள் ஏதாவது சின்ன விஷயமாக சொன்னால் கூட ஆகா ஓகோ என்று அவர்களை மட்டும் பெருமையாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்ப எதற்காக எங்களை எல்லாம் அவங்க ஆடிஷன் நடத்துனாங்க என்று எங்களுக்கு தெரியவில்லை.

    மாறும் சூழ்நிலை

    அவங்க செலக்ட் பண்ணி வைத்திருக்கவங்கள மட்டும் பேசவிட்டு ரசித்து இருக்க வேண்டியதுதானே என்று நடாஷா மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் எலிமினேஷன் செய்யப்பட்ட பல போட்டியாளர்கள் இப்படித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்ப காலகட்டத்தில் எல்லாம் ரொம்ப எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சமீபத்தில் இந்த நிகழ்ச்சிகளுக்கு பெரிய வரவேற்பு இல்லாத நிலையில் இப்போ காமன் மேன் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கலந்து கொண்டு வெளியே வந்து குறை சொல்லிக் கொண்டிருந்தாலும் நிகழ்ச்சியை பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டு இருப்பதாக பலர் கூறி வருகிறார்கள். எது எப்படியோ இப்போ போகிற போக்கை பார்த்தா பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சிக்கு நல்ல மவுசு கூடிவிடும் போல இருக்கு.

    English Summary

    Bigg Boss Common Man: Bigg Boss Tamil Season 10 is all set to start in a few weeks. A program called Bigg Boss Common Man is conducted for a common man to participate in this program and only one person is selected from several rounds of auditions and will be sent as a contestant to Bigg Boss 10. Lakhs of people participated in the audition for this. One of them is model actress Maya Natasha. She has told many secrets about her ex-husband in that show. But in the end he has said that he got shame.