கேரவனுக்குள் இயக்குனரின் அதிர்ச்சி செயல்.. நடுங்கி போன காஜல் அகர்வால்.. வருத்தத்துடன் சொன்ன விஷயம்

  • சென்னை : தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பழமொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு கொஞ்ச நாள் விலகி இருந்தார். இப்போது மீண்டும் பிஸியாக நடித்து வருகிறார். தன்னுடைய 2வது இன்னிங்ஸில் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் சினிமாத்துறை பயணத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை பற்றி சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து இருப்பது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    Advertisement

    மறக்க முடியாத சம்பவம்

    ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் நடிகைகளுக்கு கேரவன் என்பது ஓய்வெடுக்கும் தனிப்பட்ட இடம். அதனால் அந்த இடம் பாதுகாப்பான இடத்திலேயே தனக்கு மோசமான அதிர்ச்சியான சம்பவம் நடந்ததாக காஜல் அகர்வால் சொல்லி இருக்கிறார். அதாவது சமீபத்தில் பேசும்போது நான் ஒரு படத்தின் படப்பிடிப்பு சூட்டிங்காக போயிருந்தேன். அப்போது இடைவெளி என்பதால் சூட்டின் கேரவனில் தனியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவர் கதவை கூற தட்டாமல் திடீரென கேரவேனுக்குள் வந்து விட்டார்.

    Advertisement

    சட்டையை கழட்டிய உதவி இயக்குனர்

    அந்த நபர் சாதாரண ரசிகர் போல வாழ்த்து சொல்ல வரவில்லை. காஜல் முன்பு தனது சட்டையை கழட்டி மார்பில் குத்தி இருந்த டாட்டூவை காட்டி இருக்கிறார். அந்த டாட்டுவில் இருந்தது காஜல் அகர்வாலின் பெயர் தான். இந்த சம்பவத்தை எதிர்பார்க்காத காஜல் சில நிமிடம் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார். திடீரென ஒருவர் வந்து தன் முன்பு சட்டையை கழட்டுவதை பார்த்து அவர் பயப்பட்டாலும் பிறகு நடந்தது அவருக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் ஆக இருந்தாலும் இது எனக்கு பிடிக்காத அதிர்ச்சி என்று அவர் சொல்லி இருக்கிறார்.

    Advertisement

    ரசிகர்கள் எல்லை மீறக்கூடாது

    இந்த சம்பவம் குறித்து பேசிய காஜல், எனக்கு ரசிகர்கள் மீது இப்போதும் எப்போதும் அன்பும் மரியாதையில் இருக்கிறது. ஆனால் ஒரு பெண் தனியாக இருக்கும் இடத்திற்கு அனுமதி இல்லாமல் நுழைவது தவறு. யாராக இருந்தாலும் மற்றவர்களின் தனிப்பட்ட உரிமையையும் மதிக்க வேண்டும். ரசிகர் என்ற பெயரில் எல்லை மீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் கோபப்படாமல் அமைதியாகவே அந்த உதவி இயக்குனரை எச்சரித்து வெளியே அனுப்பியதாகவும் அவர் சொல்லி இருக்கிறார்.

    மீண்டும் கம்பேக்

    காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு ஒரு குழந்தைக்கு அம்மாவாக மாறி இருந்தார். அதனால் சில வருடங்களாக குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்திய காஜல் தற்போது மீண்டும் பிஸியாக நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் பிசியாக இருக்கும். காஜல் பெரிய பட்ஜெட் படங்களில் தொடர்ந்து நடித்து வருவதால் அவருக்கு 2வது இன்னிங்ஸில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

    Advertisement

    அதோடு சமீப காலமாக அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையும், கமர்சியலாக ஹிட் கொடுக்கிற மாதிரியான கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆனாலும் அவர் தனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் குறித்து பேசியது இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

    English Summary

    Kajal Aggarwal: Kajal Aggarwal established herself as a leading actress across the Tamil, Telugu, and Hindi film industries. After her marriage, she took a brief hiatus from cinema but is now back and busy with acting projects. Currently making a strong mark in her "second innings," she recently shared details about a shocking incident from her career in an interview—a revelation that has become a hot topic of discussion online.