பார்ட் 2 வீடியோவில் அனுபமா சொன்ன பகீர் விஷயங்கள்.. உடலளவிலும் பிரச்சனை.. அந்த நபர் செய்த கொடுமை?

  • சென்னை: நடிகை அனுபமா பரமேஸ்வரன் மலையாள சேனல் ஒன்றில் சில நாட்களுக்கு முன்பு பேசிய பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னுடைய முன்னாள் காதலன் தனக்கு செய்த கொடுமைகள் என்று பல குற்றச்சாட்டை வைத்திருந்தார். அதைத் தொடர்ந்து இப்போது 2வது பாகமும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் பல குற்றச்சாட்டுகளை அனுபமா சொல்லி இருக்கிறார். உடலளவிலும் தான் ரொம்பவும் பாதிக்கப்பட்டதாக சொல்லி இருக்கிறார்.

    Advertisement

    நடிகை அனுபமா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானாலும் பிரேமம் படத்தின் மூலமாக கதாநாயகியானார். அதற்கு பிறகு பல படங்களில் நடித்திருந்தாலும் துருவ் விக்ரமுடன் பைசன் திரைப்படத்தில் நடித்து பெரிய அளவில் பெயர் வாங்கி இருந்தார். அப்போதுதான் அந்த படத்தில் நடித்த துருவ் விக்ரமும் இவரும் காதலிப்பதாக செய்திகள் பரவின.

    Advertisement

    அனுபமா பற்றிய சர்ச்சைகள்

    அந்த நேரத்தில் இருவருமே அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை ஆனாலும் ஜோடியாகவே போஸ்ட்களும் போட்டுக் கொண்டிருந்தனர். இப்படியான சமயத்தில் தான் சில வாரங்களுக்கு முன்பு தனக்கு பிரேக்கப் ஆகிவிட்டதாக ஒரு பெரிய பதிவு வெளியிட்டிருந்தார். அதற்கு பிறகு அவர் மலையாள சேனல் ஒன்றில் கொடுத்த பேட்டியில் பெரிய வைரல் ஆனது. அந்த பேட்டியில் தான் காதலித்த நபர் ஒரு நாள் ரெமோ போல அதிகமாக காதலை கொட்டுவார். அடுத்த நாள் அந்நியன் போல வந்து மிரட்டுவார். பிறகு ஒன்றுமே நடக்காது போல இன்னொரு நாள் வந்து அம்பி போல பேசுவார், எனக்கு அவரை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று சொல்லி இருந்தார்.

    Advertisement

    அனுபமா பேசிய பார்ட் 2 வீடியோ

    அதேபோல இப்போது 2வது பாகத்திலும் பல விஷயத்தை சொல்லி இருக்கிறார். அதாவது அந்த நபர் தனக்கு கொடுத்த மன அழுத்தத்தாலும் பிரஷராலும் தான் இரவு முழுவதும் சாப்பிடாமல் அழுது கொண்டு இருந்ததால் தன்னுடைய கண்ணீர் சுரப்பிகள் வீங்கி விட்டது. நான் எப்போதுமே சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருப்பவர் ஜாலியான பொண்ணு ஆனால் அந்த நபர் எனக்கு கொடுத்த அழுத்தம், பிரச்சனையே என்னை ரொம்பவும் உடைத்து விட்டது. நான் நானாகவே இல்லை உடல் அளவில் இருந்து எனக்கு பிரச்சனை ஏற்பட்டது, அதனால் தான் ஆபரேஷன் செய்யும் நிலைமைக்கு போய் விட்டேன் என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    மேலும், நான் நடித்த பர்தா படத்தின் கதையில் கதாநாயகன் நான் மேனேஜராக இருக்கிறேன், நீ வேலைக்கு போக வேண்டிய அவசியமே இல்லை என்று கதாநாயகியிடம் சொல்வார்.. அதே நிலைக்கு நானும் வந்துவிட்டேன். அந்த படத்தில் நடந்த சம்பவங்கள் என்னுடைய வாழ்க்கையில் நடந்தது. அதனால் தான் அந்த படத்தின் ப்ரோமோஷனில் கூட என்னை கட்டுப்படுத்த முடியாமல் நான் அழுதுவிட்டேன்.

    நடிகை அனுபமா பேட்டி

    இரவு முழுக்க அழுது கொண்டிருந்தாலும் அடுத்த நாள் சூட்டிங் போகும்போது அதற்கு தகுந்தாலே நான் நடிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. அதனால் எனக்கு மனதளவில் ரொம்பவும் குழப்பமாகிவிட்டது, என் நினைவாற்றல் கூட குறைய தொடங்கி விட்டது. செய்தியாளர்களை சந்திக்கும் போது சிரித்த முகமாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் பல முயற்சிகள் எடுத்தேன். ஆனால் அதுவெல்லாம் என்னால் முடியாமல் தான் பர்தா பட நிகழ்ச்சியின் போது என்னை கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டேன்.

    Advertisement

    நடிகை அனுபமா அழுகை

    காரணம் என்னுடைய மனதிற்குள் அத்தனை வலிகளும் இருந்தது. அந்த குழப்பத்தான் நான் அன்று அழுதது என்று கண்ணீருடன் அனுபமா பேசி இருக்கிறார். அனுபமா பேட்டி வைரல் அமைதை தொடர்ந்து துருவ் விக்ரம் வெளியிட்ட இன்ஸ்டா ஸ்டோரியையும் பெரியதாக பேசப்பட்டது அந்த ஸ்டோரியில் துருவ் விக்ரம் கடற்கரையில் விரக்தியோடு நடந்து கொண்டிருப்பது போலவும், பிறகு கடல் அலைக்குள் கோபமாக நடந்து போவது போலவும் காட்சிகள் இருந்தது. அதைத்தொடர்ந்து இப்போது அனுபவமா பேசிய 2வது பாகம் வந்திருக்கிறது. இதிலும் பல குற்றச்சாட்டுகளை அவர் சொல்லியிருக்கும் நிலையில் இது குறித்து துருவ் விக்ரம் என்ன பதில் சொல்வார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

    Topics: #emotional

    English Summary

    Anupama: An interview actress Anupama Parameswaran gave to a Malayalam channel a few days ago caused a major stir. She leveled several allegations regarding the abuse she suffered at the hands of her ex-boyfriend. Following that, a second part has now been released, creating a shockwave; in it, Anupama has made further accusations, revealing that she was also subjected to severe physical abuse.