வருத்தத்தில் இருக்கும் ரவி மோகன் பற்றி அதிர்ச்சி செய்தி.. “விஜயகாந்த்க்கு நடந்தது இப்போ இவருக்கா?” ஆவேசமான நடிகர்


  • சென்னை: நடிகர் ரவி மோகன் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தனது குடும்பப் பிரச்சனைகள் குறித்து கண்கலங்க பேசியது சமூக வலைதளங்களில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. மனைவி ஆர்த்தியுடனான பிரச்சனை, குழந்தைகளை பார்க்க முடியாத வேதனை, மன அழுத்தம், விவாகரத்து விவகாரம் என பல விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்திருந்ததால் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர். இப்படியான சூழ்நிலையில்தான் தற்போது ரவி மோகன் குறித்து அதிர்ச்சி தரும் பொய்யான தகவல்கள் சில யூடியூப் சேனல்களில் பரவி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    நடிகர் ஆதங்கம்

    இந்த விவகாரம் குறித்து நடிகர் ஜாகுவார் நாதன் கடும் ஆதங்கத்துடன் வீடியோ வெளியிட்டிருக்கிறார். குட்டிப்புலி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கும் ஜாகுவார் நாதன், இந்த விஷயத்தில் தனது கோபத்தை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார்.

    Advertisement

    நடிகர் ஜாகுவார்நாதன் கோபம்

    அவர் அந்த வீடியோவில் பேசும்போது, "யூடியூபில் ஸ்க்ரோல் பண்ணிக்கிட்டு இருந்தப்போ 'ரவி மோகன் தற்கொலை செய்து கொண்டார்'ன்னு ஒரு வீடியோ பார்த்தேன். ஒரு நிமிஷம் அதிர்ச்சி ஆகிட்டேன். என்னடா இது? இப்படி எப்படி வீடியோ போடுறாங்க?" என்று கடுமையாக பேசியிருக்கிறார்.

    அதோடு, "இதுக்கு முன்னாடியும் இதே மாதிரி நடந்திருக்கிறது. விஜயகாந்த் அண்ணன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த சமயத்திலும் இதே மாதிரி பொய்யான வீடியோக்கள் வந்தது. நடிகை மனோபாலா உயிரோட இருக்கும்போதே 'இறந்துவிட்டார்'ன்னு வீடியோ போட்டாங்க. இப்போ ரவி மோகனையும் விடவில்லை" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

    Advertisement

    மேலும் சில யூடியூப் சேனல்கள் ரவி மோகனுக்கு பல மாதங்களாக சிறுநீரகப் பிரச்சனை இருந்தது, அதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது, மனைவி குழந்தைகளை காட்டவில்லை, மாமியார் வீட்டை விட்டு துரத்திவிட்டார்கள், கெனிஷா தொடர்பான கதைகள், சூனியம் போன்ற பல ஆதாரமற்ற தகவல்களை சேர்த்து வீடியோ வெளியிட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    ரவி மோகன் பற்றிய வதந்தி

    "ஏற்கனவே ஒரு மனிதன் மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும். அப்படியிருக்கும்போது, அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று பொய் வீடியோ போட்டு வியூஸ் சம்பாதிப்பது எவ்வளவு பெரிய கொடுமை? காசு சம்பாதிக்க இதெல்லாம் பண்ணுறவங்களை கண்டுபிடிச்சு கடுமையாக தண்டிக்கணும்," என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

    Advertisement

    மேலும், இதுபோல தவறான வீடியோ போடுற எச்ச நாய்கள் வீட்டில இருக்கிற மனைவியையோ குழந்தையையோ பற்றி யாராவது இப்படி பொய்யான செய்தி போட்டா உங்களால தாங்கிக்க முடியுமா? அடுத்தவன் வாழ்க்கையோட விளையாடுறது தப்பில்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்த விவகாரத்தில் நடிகர் மாரிமுத்துவின் மரணத்திற்கு முன்பும் இதேபோன்ற பொய்யான மரண வதந்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது. அப்போது அவருடன் நடித்த நடிகைகளும் இதுபோன்ற தவறான தகவல்களை கடுமையாக கண்டித்திருந்தனர்.

    ரவி மோகன் தற்போது எமோஷனலான கடினமான காலகட்டத்தில் இருக்கும் நிலையில், இப்படி பொய்யான மரண வதந்திகள் பரப்பப்படுவது ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Actor Ravi Mohan, who has recently been in the spotlight due to his emotional public comments about personal and family struggles, is now reportedly facing another disturbing issue—fake online rumours. Actor Jaguar Nathan has strongly criticized certain YouTube channels for allegedly spreading false claims, including fake reports about Ravi Mohan’s death. In a strongly worded video, Jaguar Nathan expressed shock over seeing such misleading content and compared it to similar fake rumours that previously targeted public figures like Vijayakanth and Manobala. He accused some channels of exploiting a vulnerable situation for views by mixing unverified claims about health issues, family disputes, and other sensational stories. His comments have triggered strong reactions online, with many calling for stricter action against channels that spread harmful misinformation about celebrities.