சென்னை: தமிழக அரசியல் களத்தில் இன்று வெளியாகியிருக்கும் இடைத்தேர்தல் முடிவுகள் கவனம் ஈர்த்து வருகின்றன. தாராபுரம், மதுராந்தகம் என இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பது கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில் நடிகர் சத்யராஜின் மகனும் நடிகருமான சிபி சத்யராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் போட்டிருக்கும் பதிவு இப்போது கவனம் பெற்றிருக்கிறது.
சிபி சத்யராஜ் வெளியிட்ட பதிவு
"நினைத்ததை முடிப்பவர்! இனி நாளை நமதே! விடியல் நமதே! வரலாறும் நமதே!" என்று அவர் பதிவிட்டிருக்கிறார். தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில் சிபி சத்யராஜ் இப்படி ஒரு பதிவை போட்டிருப்பதால், அது தவெக ஆதரவாளர்கள் மத்தியில் பேசுபொருளாகியிருக்கிறது. குறிப்பாக, "நினைத்ததை முடிப்பவர்" என்ற வரியும், "இனி நாளை நமதே" என்ற வார்த்தைகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்த இரண்டு தொகுதிகளிலும் நடந்த இடைத்தேர்தல் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றிருந்தது. கடந்த அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. தாராபுரத்தில் சத்யபாமாவும், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும் தவெக சார்பில் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின்போது இரு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றது கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் அதிகரித்தது. குறிப்பாக, தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் அதிமுகவுடன் கடும் போட்டி நிலவிய நிலையில், தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றது. இந்த முடிவுகள் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வரும் நிலையில், சினிமா பிரபலங்களின் பதிவுகளும் சமூக வலைதளங்களில் கவனிக்கப்படுகின்றன. அந்த வகையில் சிபி சத்யராஜின் இந்தப் பதிவு தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வந்திருப்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சிபி ஆரம்பத்திலிருந்து விஜய்க்கு ஆதரவாகவே போஸ்ட்கள், பதிவுகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். தன்னுடைய சப்போர்ட்டை வெளிப்படையாகவே பல இடங்களில் தெரிவித்திருக்கிறார். சிபி வீட்டில் சத்யராஜ் மற்றும் அவருடைய மகள் இருவருமே திமுக ஆதரவாளர்களாக இருக்கும் சமயத்தில் சிபியின் ஆதரவு ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. ஒரு தேர்தல் முடிவு அரசியல் கட்சியினருக்கு மட்டுமல்லாமல், திரையுலகைச் சேர்ந்தவர்களின் சமூக வலைதளப் பதிவுகளுக்கும் கவனத்தைத் திருப்புகிறது என்பதற்கு இந்தப் பதிவும் ஓர் உதாரணமாகியிருக்கிறது. இனி சிபி சத்யராஜின் இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் என்ன மாதிரியான ரியாக்ஷன் கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.தேர்தல் முடிவுகள்
சட்டப்பேரவையில் விஜய் பேச்சு எதிரொலி.. சிபி சத்யராஜ் போட்ட பதிவு! யாருக்கு இந்த பதிலடி?
தவெக வெற்றி
குடும்பத்தை பிரிக்க வெளியே இருந்து வர்றவங்க! விஜய் மகனுக்கு அட்வைஸ் கொடுத்த சத்யராஜ் மகள்
விஜய்க்கு சப்போர்ட்