சைலண்டாக ஓடிடியில் வந்து இறங்கிய சிக்மா”.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் மகன்

  • சென்னை: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமான முதல் படம் என்பதால் சிக்மா படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் வெளியான பிறகு எதிர்பார்த்த அளவிருக்கு கதை இல்லையே என்ற விமர்சனமும் வந்தது. எது எப்படியோ ஒரு வழியாக இப்போ சிக்மா படம் என்று ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. படம் ஓடிடியில் வரப்போகிறது என்று பெரிய அறிவிப்பு எதுவும் இல்லாததால் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தான் .

    Advertisement

    விஜய் மகன் படம்

    ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்த சிக்மா திரைப்படம் இன்று அக்டோபர் 30ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. திரையரங்குகளில் படத்தை பார்க்க தவறியவர்கள் இனிமேல் வீட்டிலிருந்து பார்க்கலாம். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இந்த படத்திற்கு ஓடிடியில் எந்த மாதிரி வரவேற்பு கிடைக்கப்போகிறது என்பதுதான் இப்போது ரசிகர்கள் மத்தியில் இருக்கும் கேள்வி. ஜேசன் சஞ்சய் இயக்குனர் ஆகிறார் என்றதும் அவருடைய முதல் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.

    Advertisement

    விஜயின் மகன் என்பதால் இயல்பாகவே அவருடைய படத்தின் மீது கூடுதல் கவனம் இருந்தது. அதிலும் சர்ச்சைக்கு மத்தியிலும் பிரமோஷனில் தன்னுடைய அப்பாவை பற்றி பெருமையாகவே பேசி விஜய் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார். அவருடைய மெச்சூரான பேச்சை பார்த்ததும் படம் எப்படியும் வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்ப்போடு போன ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். படத்தின் விமர்சனங்கள் கலவையாக தான் இருந்தது. ஒரு சிலருக்கு படத்தின் கதை பிடித்து இருந்தாலும், பலருக்கு அதில் சில சொதப்பல்கள் இருப்பதாகவே சொல்லி வந்தனர். அதனாலேயே படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

    Advertisement

    சிக்மா ஓடிடி ரிலீஸ்

    இந்த படத்திற்கு தமன் இசை அமைத்திருக்கிறார். ராஜூ சுந்தரம், சம்பத்ராஜ், சிவபண்டிட், அன்புதாசன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆக்சன், அட்வென்சர்ஸ், ஹெய்ஸ்ட் எனப்படும் கொள்ளை கதையை வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. அக்டோபர் 2ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் ஆக்ஷன் சிறப்பாக இருக்கிறது என்று பலர் பாராட்டி இருந்தாலும் இன்னும் கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று பலர் விமர்சித்து இருந்தனர்.

    பத்தா vs சிக்மா.. மொத்த வசூலில் இவ்வளவு பெரிய வித்தியாசமா? நினைத்தது ஒன்று, நடந்தது வேற!
    Advertisement

    இன்ப அதிர்ச்சி

    அது ஒரு பக்கம் இருந்தாலும் படம் இப்போது Netflixல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த படம் வெளியே ஓடிடியில் வரப்போகிறது என்று பெரிதான அறிவிப்பு இல்லாததால் இன்று திடீரென நெட்பிக்ஸில் பார்த்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தான். தியேட்டரில் படத்தை பார்த்ததும் அதிகமான ட்ரோல் வந்திருந்தாலும் இனி ஓடிடியில் பார்க்கும்போது படத்தை ரசிகர்கள் கொண்டாட போகிறார்களா? அல்லது ட்ரோல் செய்து கலாய்க்க போகிறார்களா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

    English Summary

    Sigma OTT Release: There was significant anticipation surrounding the film *Sigma* from the very beginning, as it marks the directorial debut of Jason Sanjay, son of actor Vijay. However, following its release, the film faced criticism for a story that failed to meet those high expectations. Regardless, *Sigma* has now made its way to an OTT platform. Since there was no major prior announcement regarding its digital release, it came as a pleasant surprise to the fans.