சூர்யா- ஜோதிகாவை தொடர்ந்து சிம்ரன் செயல்.. விஜய்யை வம்பு இழுக்கும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து

  • சென்னை: சூர்யா- ஜோதிகா 20 வருட திருமண வாழ்க்கையை கொண்டாடி விதம் நேற்று முதல் சோசியல் மீடியாவில் செம வைரல். 2006ல் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி 20 வருஷத்துக்கு பிறகு மீண்டும் திருமண உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். மகன், மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்வை ஜோதிகா இணையத்தில் பகிர்ந்து இருந்தார். இது வைரலாகி வரும் நேரத்தில் நடிகை சிம்ரனும் தன்னுடைய கணவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். உடனே நெட்டிசன்கள் விஜயை வம்பு இழுத்து கமெண்ட்ஸ் கொடுத்து இருக்கிறார்கள்.

    Advertisement

    சூர்யா ஜோதிகா மீண்டும் மேரேஜ்

    சூர்யா -ஜோதிகா திருமண புகைப்படங்களும் வீடியோக்களும் தான் நேற்று இரவு முதல் வைரலாகி வருகிறது. சோசியல் மீடியாவில் புது ட்ரெண்டை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. 20 வருஷங்களாக சினிமா துறையில் ஒன்றாக பயணிப்பது பெரிய விஷயம் என்று இவர்களுடைய திருமண வாழ்க்கையை பலர் வாழ்த்தி வருகிறார்கள். இதற்கிடையே நானும் களத்தில் இருக்கிறேன் என்று சிம்ரன் தன்னுடைய கணவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டதும் சூர்யா ஜோதிகா போட்டோ வைரல் ஆகிறது என்று சிம்ரன் போட்டோ போட்டுட்டாங்களா? என்ன சிம்ரன் நீங்களும் போட்டிக்கு வந்துட்டீங்களா? என்று சிலர் கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள்.

    Advertisement

    சிம்ரன் குடும்ப போட்டோஸ்

    ஒருத்தர் கணவருடன் சந்தோஷமாக போட்டோ போட்டால் கூட இப்போது யாருக்கு போட்டி? என்று கேட்க வேண்டிய நிலை வந்துவிட்டது. சிம்ரன் பாவம் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சாதாரண சந்தோஷத்தை பகிரலாம் என்று நினைத்து இருப்பார் போல. ஆனால் அதிலும் நம்ம நெட்டிசன்கள் சூர்யா ஜோதிகா வெட்டிங் சீசன் 2க்கு சிம்ரன் பதிலடியா? என்று ட்ரோல் செய்து வருகிறார்கள். ஆனால் இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது.

    இங்கேயும் விஜய்

    இந்த போட்டோ பஞ்சாயத்துக்குள்ள முதல்வர் விஜய்யையும் இழுகிறார்கள். சில கமெண்ட்களில் நீங்கள் எல்லாரும் இப்படி சந்தோஷமா போட்டோ போடுவது விஜயை தாக்குவதற்காக தானா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். ஏற்கனவே விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் லீடர்ஷிப் பற்றி பேசியதற்கு விஜய் ரசிகர்கள் எங்களை தான் விஜய் சேதுபதி பேசி விட்டார் என்று தொடர்ந்து அவரை கமெண்டுகளில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    Advertisement

    நெட்டிசங்களின் கமெண்ட்

    விஜய் சேதுபதியின் பழைய பேட்டிகள், பழைய சர்ச்சைகளை எல்லாம் தோண்டி எடுத்து பேசி வருகிறார்கள். எந்த பஞ்சாயத்துக்கு மத்தியில் இப்போ சூர்யா, ஜோதிகா சந்தோஷமாக போட்டோ போட்டாலும், சிம்ரன் தன்னுடைய கணவரோடு போட்டோ போட்டாலும் நீங்களும் விஜயை தாக்குறிங்களா? என்று கேள்வி கேட்கிறார்கள். இது உண்மையில் நெட்டிசன்களின் கிண்டலா? அல்லது நெகட்டிவான மனநிலையா? என்பதே பலருடைய கேள்வியாக இருக்கிறது.

    சாதாரண நிகழ்வு

    சூர்யா பல தோல்விகளுக்கு பிறகு கருப்பு படத்தின் மூலம் கம்பேக் கொடுத்திருந்தார். அதற்கு பிறகு அவர் நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் நல்ல வசூல் பெற்றது. இந்த நிலையில் தன்னுடைய பிள்ளைகள் ஆசைப்பட்டார்கள் என்பதற்காக தான் மீண்டும் திருமணம் செய்து கொண்டதாக ஜோதிகா ஒரு பதிவு இன்று வெளியிட்டு இருக்கிறார். அதேபோல சிம்ரன் தன்னுடைய கணவருடன் மேட்சிங் உடையில் சந்தோஷமாக போட்டோக்கள் வெளியிட்டு இருக்கிறார். இதற்கு ஒரு பக்கம் வாழ்த்துக்கள் வந்தாலும், வழக்கம் போல சிலர் இந்த போட்டோவுக்கு பின்னால் என்னவாக இருக்கும் என்று கதை எழுத ஆரம்பித்து விட்டார்கள்.

    English Summary

    Surya: The way Surya and Jyothika celebrated their 20th wedding anniversary has gone viral on social media since yesterday. Amidst this, actress Simran also shared a photo taken with her husband. Netizens immediately seized the opportunity to tease Vijay in the comments section.