சென்னை: திருமணம் என்பது இரண்டு மனங்களும், இரண்டு குடும்பங்களும் இணையும் உறவாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால் இன்னும் சில இடங்களில், மணமகள் வீட்டை பணம் காய்க்கும் மரமாக நினைக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டே இருப்பது வேதனையை ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் தற்போது சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதுகுறித்து பாடகி சின்மயி ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார் அதுவும் வைரலாகி வருகிறது.
அதாவதுஒரு பெண் மருத்துவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவு ஆயிரக்கணக்கான பேரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. தனக்கு வந்த சில திருமண வரன்கள் பற்றி அவர் சொன்ன விஷயங்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
அவருடைய பதிவில், ஒரு மாப்பிள்ளை வீட்டார் ₹50 கோடி வரதட்சணை கேட்டதாகவும், இன்னொரு குடும்பம் "எங்கள் வீட்டுப் பெண்ணுக்கு உங்கள் சொத்தில் 10 சதவீத பங்கை எழுதித் தர வேண்டும்" என்று கண்டிஷன் போட்டதாகவும் கூறியிருக்கிறார். இதையெல்லாம் பார்த்தபோது, இது 2026-ல நடக்கிற விஷயம்தானா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த பதிவு வைரலானதும் அதற்கு பாடகி சின்மயியும் தனது எதிர்ப்பை வெளிப்படையாக பதிவு செய்தார். சமூகத்தில் நடக்கும் அநீதிகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சின்மயி, இந்த சம்பவத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார். "இது திருமணம் இல்லை... அடுத்தவர் வீட்டுப் பணத்தை சட்டப்படி கொள்ளையடிக்க முடியாததால், கல்யாணம் என்ற பெயரில் கேட்கப்படும் கொள்ளை. எப்படி அடுத்தவங்க சொத்தா ஆட்டைய போடலாம் என்று குடும்பமாக உட்கார்ந்து யோசிப்பாங்க போல" என்ற பொருளில் அவர் தனது Instagram மற்றும் Facebook பக்கங்களில் போஸ்ட் போட்டு இருக்கிறார். சின்மயி இப்படி பேசுவது இதுவே முதல் முறை அல்ல. பெண்கள் பாதுகாப்பு, பாலியல் தொல்லை, வரதட்சணை, பெண்களின் உரிமைகள் என பல விஷயங்களில் யாரையும் பொருட்படுத்தாமல் தனது கருத்தை வெளிப்படையாக சொல்லும் பிரபலமாகவே அவர் இருக்கிறார். அதனால்தான் இந்த முறையும் அவரது பதிவு வேகமாக பரவி வருகிறது. இந்த டாக்டர் பெண்ணின் பதிவுக்கு கீழே ஏராளமான பெண்கள் தங்களுடைய அனுபவங்களையும் பகிர ஆரம்பித்துள்ளனர். "எங்களிடமும் இதே மாதிரி கேட்டார்கள்", "வரதட்சணைன்னு சொல்ல மாட்டாங்க... செட்டில்மென்ட், கிப்ட், சொத்து, உதவி என்று பெயரை மட்டும் மாற்றிடுவாங்க", "பெண்ணை திருமணம் பண்ணிக்கிறாங்களா... இல்ல பிசினஸ் பண்ணுறாங்களா?" என்று பலரும் ஆதங்கமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர், "சட்டம் இருக்கிறது... ஆனால் மனசு மாறல. அதனால்தான் இப்படி நடக்கிறது" என்று வேதனை தெரிவித்து வருகின்றனர். இப்போது வரதட்சணை நேரடியாக கேட்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக "மாப்பிள்ளை செட்டில் ஆகணும்", "அக்காவுக்கு ஒரு வீடு வாங்கித் தரணும்", "தங்கைக்கு கொஞ்சம் சொத்து எழுதணும்", "குடும்பத்துக்கு ஹெல்ப் பண்ணணும்" என்று பெயர்கள் மட்டும் மாறியிருக்கிறது. ஆனால் அதன் அர்த்தம் மாறவில்லை என்பதுதான் பலரின் கருத்தாக இருக்கிறது. சின்மயியின் இந்த பதிவு மீண்டும் ஒரு பெரிய விவாதத்தை தொடங்கியுள்ளது. திருமணம் இன்னும் சிலருக்கு உறவா... இல்லை பணம் சம்பாதிக்கும் வாய்ப்பா? என்ற கேள்வியை சமூக வலைதளங்களில் பலரும் எழுப்பி வருகின்றனர். வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இருந்தும், பெயர்களை மட்டும் மாற்றி அதே கோரிக்கைகள் தொடர்வது எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்விதான் தற்போது இணையம் முழுக்க அதிகமாக பேசப்படுகிறது.டாக்டர் பெண்ணின் குமுறல்
பாடகி சின்மயி பதிவு
Chinmayi: மார்பிங் போட்டோவை போட்டு மிரட்டிய நபர்! சின்மயி செய்த செயலை பாருங்க! சரியான பதிலடி
ரசிகர்கள் கருத்து
கூச்சம் இல்லாமல் ஜிப்பை கழட்டுறவங்க.. பெண்களை கேவலமாக பேசிய எஸ்வி சேகருக்கு, சின்மயி பதிலடி
வரதட்சணை கொடுமைகள்