சென்னை: நடிகர் துருவ் விக்ரம் ஹீரோவாக மட்டுமல்லாமல் அவ்வப்போது பாடகராகவும் தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார். அந்த வரிசையில் தற்போது கவின், நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள ஹாய் படத்திற்காக துருவ் விக்ரம் பாடி இருக்கிறார். குடிகார நெஞ்சு என்று பெயரிடப்பட்ட அந்தப் பாடல் இன்று வெளியாக இருக்கும் நிலையில் துருவ் பாடியதை குறிப்பிட்டு நடிகர் கவின் வெளியிட்ட பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாடகரான துருவ் விக்ரம்
நடிகர் கவின், நயன்தாரா இணைந்து நடித்துள்ள ஹாய் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் விஷ்ணு இயக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் அமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது. இப்போது அந்த லிஸ்டில் குடிகார நெஞ்சு சேர்ந்து இருக்கிறது. இந்த பாடலின் ஸ்பெஷல் என்னவென்றால் இந்த பாடலை பாடி இருப்பது துருவ் விக்ரம். துருவ்வை நடிகராக மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு துருவ்வின் குரலை இப்போது ஒரு பாடலில் கேட்கப் போகிறார்கள் என்பதால் பாடல் அறிவிப்பு வந்ததிலிருந்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் உருவாக்கி இருக்கிறது.
இந்த பாடல் காதல் தோல்வியை மையமாகக் கொண்ட பாடலாக இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. படக்குழு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குடிகார நெஞ்சு பாடல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தது. அதேபோல ஹாய் திரைப்படம் ஆகஸ்ட் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பாடல் போஸ்டரை பகிர்ந்து"You're going to loooove this. Can't wait for y'all to hear it" என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறார். அதைப் பார்த்த கவின் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் துருவை டேக் செய்து"So happy to have your voice on this one. Thank you for making the song even more special pa :)" என்று பதிவிட்டு இருக்கிறார். இதற்கு துருவும் "Thank you for the opportunity naa" என்று பதில் கொடுத்திருக்கிறார். இந்த இரண்டு நடிகர்களின் இடையே இருக்கும் அந்த நட்பு கலந்த உரையாடல் இப்போது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. ஒரு பக்கம் கவின் நயன்தாரா படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இன்னொரு பக்கம் துருவ் விக்ரமின் குரல் இந்த பட்டத்தின் பாடலுக்கு புதிதாக ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஹாய் படத்தை பாடல் ஆசிரியராகவும் பிரபலமான விஷ்ணு இருக்கிறார். இது அவருடைய இயக்குனர் அறிமுகப்படம். நயன்தாரா, கவின் இருவரும் முதன்முறையாக இணைந்து நடிக்கும் படமாகவும் இது அமைந்துள்ளது. படத்தின் முதல் பாடல் கண்ணழகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று இருக்கிறது. ஜி வி பிரகாஷ் உள்ளிட்டோர் குரல் கொடுத்த அந்த பாடல் காதல் மற்றும் திருமண பின்னணியில் இருந்தது. இப்போது இரண்டாவது பாடலாக வரவிருக்கும் குடிகார நெஞ்சு-ல் துருவ் விக்ரமின் குரல் என்பதால் முற்றிலும் வேறுபட்ட மோடில் இந்த பாடல் இருக்குமா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே சமீப காலமாக துருவ் விக்ரம் அதிகமாக சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் அவருடன் பைசன் படத்தில் நடித்த அனுபமா தன்னுடைய முன்னாள் காதலன் பற்றி சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு பலரும் துருவை தொடர்பு படுத்தி வருகின்றனர் இன்னொரு பக்கம் விக்ரம் ஒரு குரங்குடன் வெளியிட்ட வீடியோ பெரிய அளவில் வைரலாகி அது சட்ட பிரச்சனையை சந்தித்து இருக்கிறது. இப்படி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது துருவ் பாடிய பாடல் வெளியாவது அவருடைய ரசிகர்களுக்கும், அவருக்கும் நிம்மதியை கொடுத்திருக்கிறதாம்.ஹாய் பட பாடல்
கவின் பதிவு
முதல் பாடல்
அடுத்தடுத்து பிரச்சனை