கடைசிவரை எஸ்.ஜானகி அந்த பாட்டை பாடவே இல்லையே.. ஏன் தெரியுமா? கலர் ஆடைகளை தவிர்த்த ராமுவின் ஜானகி


  • சென்னை: சென்னை: எஸ். ஜானகியி திரைப்பயணத்தை விடவும், அவரது நிஜ வாழ்க்கை காதல் பயணம் மிகவும் நெகிழ்ச்சியானது. தன் கணவர் மீது அவர் கொண்டிருந்த அளவற்ற அன்பும், திரைக்குப் பின்னால் அவர்களின் இசை கலந்த வாழ்வும் ஒவ்வொரு ரசிகரையும் உருக வைக்கக்கூடிய ஒன்றாகும். கணவரின் மறைவிற்குப் பிறகும் அவர் மீதான காதலைத் தன் வாழ்நாள் முழுவதும் சுமந்து வாழ்ந்து முடித்துள்ளார் ஜானகி அம்மா!

    Advertisement

    எஸ். ஜானகியின் பெயர் கணவர் ராம் பிரசாத்.. இவருடைய தந்தைக்கும் நண்பரான ஒரு உறவினர் ஆவார். ஒருமுறை ஜானகியின் வீட்டுக்கு ராம் பிரசாத் வந்திருக்கிறார்..

    Advertisement

    தவறி விழுந்த போட்டோ

    அப்போது தந்தையின் சட்டைப் பையிலிருந்து அவருடைய மகனின் பேட்டோ தவறி கீழே விழுந்துள்ளழத.. அதை யாருக்கும் தெரியாமல் எடுத்து மறைத்து வைத்துக் கொண்டாராம் ஜானகி..

    அந்த போட்டோவை பார்த்தே அவர் மீது ஒருதலைக் காதல் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்.. இந்த ஒருதலைக் காதல் பிறகு காதலாக மலர்ந்துள்ளது.. ஆனால், இவர்களின் காதல் விஷயம் குடும்பத்தினருக்கு தெரியாமலேயே இருந்தது.. இருந்தாலும் ஜானகியின் குணங்கள் பிடித்துப் போனதால் ராம் பிரசாத்தின் குடும்பத்தினர் முறைப்படி பெண் கேட்டு, 2 வீட்டார் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    Advertisement

    முறைப்படி திருமணம்

    கடந்த 1959ம் ஆண்டு ராம் பிரசாத்தை ஜானகி திருமணம் செய்து கொண்டார்.. அப்போது முதல் அவருடைய இசைப் பயணத்திற்கு கணவர் மிகப்பெரிய தூணாக விளங்கினார்.. கல்யாணத்துக்கு பிறகு ஜானகி பங்கேற்கும் எல்லா ரெக்கார்டிங்குகளுக்கும் ராம் பிரசாத் ஜானகியுடனேயே வருவாராம்.. அவ்வளவு ஏன், முதன்முதலில் எஸ்.ஜானகியை ஏவிஎம் ஸ்டுடியோவிற்கு அழைத்து சென்று பாடகியாக்கியவர் அவர்தான்.. ஜானகியை திருமணம் செய்த, ஒரே வருடத்தில் அவரை பாடகியாக்கினாராம்.

    கடைசிவரை பாடாத பாட்டு

    ஒருமுறை பாடகர் மனோ தொகுத்து வழங்கிய "மனதோடு மனோ" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாடகி எஸ். ஜானகி, தன் கணவர் எப்போதும் தன் பக்கத்திலேயே இருப்பதாகவும், ஆனால் அவரைப் பார்க்க முடியவில்லையே என்று தனக்கு அழுகை வரும் என்றும் உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டார்.

    Advertisement

    அதுமட்டுமல்ல, தனக்கு மிகவும் பிடித்தமான "கண்ணா வா கவிதை சொல்வேன்" என்ற பாடலை ஆரம்பத்தில் தெரியாமல் பாடிவிட்ட போதிலும், அதன்பிறகு எந்தவொரு கச்சேரியிலும் அல்லது எப்போதுமே தான் அந்தப் பாடலை பாடுவதில்லையாம்.. காரணம், அந்தப் பாடலைப் பாடினால் தனக்கு அழுகை வந்துவிடும் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.

    கணவருடன் அந்த அளவுக்கு பிரியமுடன் இருந்தார் ஜானகி.. தன்னுடைய கணவரை எப்போதுமே ராமு என்றுதான் கூப்பிடுவாராம்..

    கணவரை பற்றி நெகிழ்ந்த எஸ்.ஜானகி

    தனது கணவர் பற்றி மற்றொரு பேட்டியில் பேசிய ஜானகி அம்மா, "அவர் என்னுடைய ஒவ்வொரு பாடலையும் ஆழமாக நேசித்தார், என் இசையின் மீது அத்தனை பைத்தியமாக இருந்தார்.. ஒரு ரிக்கார்டிங்கிலும் என்னை அவர் தனியாக விட்டதே இல்லை, என்னாலும் அவரை விட்டுப் பிரிய முடிந்ததில்லை, தன் ஒட்டுமொத்த வாழ்க்கையையுமே எனக்காகவே வாழ்ந்து தீர்த்தார்" என்று நெகிழ்ந்துள்ளார்.

    Advertisement

    1997ம் ஆண்டு அவர் மறையும் வரை ஜானகி அம்மாவின் நிழலாகவே வாழ்ந்து, கச்சேரி, பின்னணிப் பாடல் பதிவு என எங்கும் எதிலும் அவரோடே பயணித்த அந்தத் தூய காதலின் வெளிப்பாடாக, தன் கணவரின் மறைவிற்குப் பிறகு வண்ண ஆடைகள் அணிவதையே ஜானகி அம்மா முழுமையாகத் தவிர்த்துவிட்டார்.. அந்தவகையில், கடைசி வரை அவர் ஜானகியின் ராமுவாகவே வாழ்ந்து மறைந்துள்ளார்...!!

    English Summary

    Legendary singer S. Janaki’s life was deeply intertwined with her husband, Ram Prasad. From their fated meeting in 1959 to his untimely demise in 1997, their bond remained unbreakable. This article captures S. Janaki's emotional memories, why she avoids singing one specific song, and her life journey post-husband.