சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான முத்துக்குமரனுக்கும், சமூக வலைதளப் பிரபலம் வாஹிதாக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பிரச்சனை இன்னும் ஓய்ந்தபாடில்லை. வாஹிதா அடுத்தடுத்து பதிவுகளை வெளியிட்டு வரும் நிலையில், முத்துக்குமரன் தன் தரப்பு விளக்கத்துடன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இப்போது இந்த விவகாரத்தில் சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கேரக்டரில் நடித்து வரும் ஸ்ரீதேவாவும் முத்துக்குமரனுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். அவர் எழுப்பியிருக்கும் கேள்விகள்தான் இப்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றிருக்கின்றன.
சீரியல் நடிகர் ஸ்ரீ தேவா வீடியோ
ஸ்ரீ தேவா பேசுகையில், இரண்டு பேரும் பழகியது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். முத்துக்குமரன் ஊடகத் துறையில் இருக்கிறார் என்பதற்காக அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை ஏன் சமூக வலைதளங்களில் கொண்டுவந்து அவருடைய கெரியரைப் பாதிக்க வேண்டும்?" தனிப்பட்ட முறையில் ஏதாவது பிரச்சனை இருந்தால் சம்பந்தப்பட்டவரிடம் பேசித் தீர்த்துக்கொள்ளலாம, தேவைப்பட்டால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
மேலும், முத்துக்குமரனைத் தொடர்புகொண்டு என்ன நடந்தது என்று கேட்டிருக்கலாமே, அதை விட்டுவிட்டு நேரடியாக வீடியோக்களை வெளியிட்டு அவருடைய தொழிலையும் பெயரையும் பாதிப்பது ஏன்? முத்துக்குமரன் ஊடகத் துறையில் தனக்கான இடத்தைப் பிடிப்பதற்கு பல முயற்சிகளை எடுத்திருப்பார், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொழிலுக்கும் என்ன சம்பந்தம் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த விவகாரத்தில் முத்துக்குமரனுக்கு ஆதரவாகப் பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஸ்ரீதேவாவின் பேச்சும் தற்போது விவாதமாகியிருக்கிறது. இந்த பிரச்சினை திடீரென ஆரம்பித்துவிடவில்லை. சமூக வலைதளப் பிரபலமான வாஹிதா, முத்துக்குமரன் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று நம்பிக்கை கொடுத்து என்னுடன் உடலுறவு வைத்துவிட்டு என்னை திருமணம் செய்ய மறுக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுகள் வெளியான பிறகு முத்துக்குமரன் தரப்பிலிருந்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இருவரும் காதலர்கள் கிடையாது என்றும், நண்பர்களாகவே பழகி வந்ததாகவும் அவர் கூறி இருக்கிறார். இதற்கிடையில், முத்துக்குமரன் புகார் கொடுத்த பிறகும் வாஹிதா தனது கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார். இதனால் இருவருக்கும் இடையிலான பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது தெளிவாகிறது.பாலியல் வன்கொடுமை இல்லை.. ஆனால் முத்துக்குமரன் குறித்து வாஹிதா போட்ட புதிய பதிவு
வாஹிதா சொன்ன குற்றச்சாட்டுகள்
அதே நேரத்தில், வாஹிதா தனது பதிவுகளில் ஒரு விஷயத்தையும் தெளிவுபடுத்தியிருந்தார். "இது பாலியல் வன்கொடுமை அல்ல; தவறான நம்பிக்கையும் வாக்குறுதிகளும்தான்" என்ற பொருளில் அவர் குறிப்பிட்டிருந்தார். இதனால் அவர் சொன்ன குற்றச்சாட்டுகள் குறித்து இணையத்தில் பல்வேறு விவாதங்கள் எழுந்தன.பீரியட்ஸ் நேரத்தில் உடலுறவு.. அதுவும் எப்படி தெரியுமா? முத்துக்குமரன் பற்றி அடுத்த குண்டை போட்ட வாஹிதா