சிறகடிக்க ஆசை: கிரிஷ் கேட்ட கேள்வி! ரோகிணி நிலைமை யாருக்கும் வரக்கூடாது! மீண்டும் ஏமாறும் விஜயா

  • சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கான எபிசோடில், ரோகிணியின் குழந்தையை பற்றி கிரிஷ் கேட்ட கேள்வியால் ரோகிணி பேச முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் குழந்தை விஷயத்தில் மனோஜும் யாரும் எதிர்பார்க்காத விஷயத்தை சொல்லி இருக்கிறார். அதுபோல விஜயா மீண்டும் மனோஜிடம் ஏமாந்து கொண்டிருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

    Advertisement

    சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

    சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், ரோகிணி வீட்டில் இருக்கிறார். அப்போது அவர் மகன் கிரிஷ் வந்து அம்மா நம்ம வீட்டில் சீக்கிரமாக பாப்பா வரப்போகுதா? என்று கேட்க, அதைக் கேட்டு ரோகிணி ஷாக் ஆகிறார். இந்த விஷயம் உனக்கு எப்படி தெரியும் என்று ரோகிணி கேக்க, நீங்க வரப்போகுதா இல்லையா என்பதை மட்டும் சொல்லுங்க என்று கிரிஷ் அழுத்தி கேட்கிறார். அதற்கு ரோகிணி ஆமாம் என்று சொல்கிறார்.

    Advertisement

    பிறகு அந்த குழந்தையும் என்னை போல அப்பா இல்லாமல் இருக்க போகுதா? என்று கேட்க, ரோகிணியால் பதில் சொல்ல முடியாமல் சிறிது நேரம் யோசித்து விட்டு அதுதான் மனோஜ் அப்பா இருக்காரே.. அவரு உங்க ரெண்டு பேரையும் நல்லா பாத்துக்குவார் என்று சொல்ல, அவர் நல்லவரே இல்ல அம்மா.. அவங்க என்னை எப்பவுமே திட்டிக்கிட்டே இருப்பாரு. என்ன அவருக்கு பிடிக்கவே செய்யாது என்று கிரிஷ் சொன்னதும் ரோகிணி அதிர்ச்சியாகிறார்.

    மனோஜ் சொன்ன விஷயம்

    ரோகிணி எவ்வளவோ சமாதானம் சொல்லி பார்க்கிறார். ஆனால் கிரிஷ் கோபமாக மனோஜை திட்டி விட்டு அங்கிருந்து போய் விடுகிறார். உடனே ரோகிணி அம்மாவை கூப்பிட்டு எதற்காக இப்பவே குழந்தை விஷயத்தை பற்றி கிரிஷிடம் சொன்னா? என்று கேட்க, அதற்கு ரோகிணியின் அம்மா நீ ஏற்கனவே பல பொய் சொன்னதால தான் இன்னைக்கு இவ்வளவு பிரச்சனை வந்திருக்கு. இப்போ குழந்தை விஷயத்தை கிரிஷிடம் சொல்லவில்லை என்றால் இன்னும் கொஞ்ச நாள் கழித்து தெரியும்போது அவன் ரொம்ப கோவப்படுவான் அதனால தான் சொன்னேன் என்று சொல்கிறார்.

    Advertisement

    ஆனால் மனோஜிடம் சொல்லி எப்படியாவது கிரிஷிடம் நெருங்கி பழக சொல்லு... இல்லன்னா கிரிஷ் வரப்போற குழந்தையை எதிரியா நினைக்கத் தொடங்கிடுவான் என்று சொல்கிறார். ரோகிணி என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். பிறகு மனோஜை பார்க்க ஷோரூமுக்கு போகிறார். அங்கு மனோஜிடம் நீ கிரிஷிடம் நெருங்கி பழக வேண்டும் என்று டாக்டர் சொல்லி இருக்காங்க.. அவனுடைய கேரக்டர் இப்போ ரொம்ப மாறிடிச்சி என்று சொல்ல, அதற்கு வழக்கம் போலவே மனோஜ் திமிராகவே பேசிக் கொண்டிருக்கிறார்.

    ரோகிணி போட்ட பிளான்

    ஒரு கட்டத்தில் ரோகிணி, கிரிஷ்க்கும் வயிற்றில் இருக்குற குழந்தையும் நான் தானே அம்மா! அந்த குழந்தைக்கு நீ தான் அப்பா என்று சொன்னதும், மனோஜ் வயிற்றில் இருக்குற குழந்தைக்கே நான் அப்பா இல்லைன்னு சொல்லிட்டு இருக்கேன் நீ அந்த கிரிஷ்க்கு என்னை அப்பா என்று சொல்லுற என்று திட்டுகிறார். அதோடு வயிற்றில் இருக்கிற குழந்தையை அபார்ஷன் பண்ண சொன்னதும் ரோகிணி அதிர்ச்சி ஆகிவிட்டார். பிறகு இது விஜயாவின் பிளான் தான் என்று நினைத்து இதை வைத்து மிரட்டலாம் என யோசிக்கிறார்.

    Advertisement

    பிறகு நான் அபார்ஷன் பண்ண வேண்டும் என்றால் நீ கிரிஷிடம் டெய்லி ஒரு மணி நேரம் பழக வேண்டும், அப்பொழுது தான் இதில் என்ன செய்யலாம் என்று முடிவெடுப்பேன் என சொல்லி விடுகிறார். மறுபக்கத்தில் அண்ணாமலை வீட்டில் எல்லோரும் இருக்கின்றனர். அந்த சமயத்தில் டிவி பார்த்துக் கொண்டிருந்த விஜயாவை மனோஜ் தனியாக கூப்பிட்டு போகிறார். இதை பார்த்த ஸ்ருதி மற்றும் மீனாவிற்கு சந்தேகம் வருகிறது.

    உண்மையை மறைக்கும் மனோஜ்

    பிறகு மனோஜ் விஜயாவிடம் ரோகிணி கடைக்கு வந்தப்போ குழந்தையை அபார்ஷன் பண்ண சொல்லி இருக்கிறேன் என்று சொல்ல, அதற்கு விஜயா அவ எப்படி சம்மதிச்சா? அதற்கு பணம் அதிகமா கேட்கிறார்களா என்று கேட்கிறார். உடனே மனோஜ் இல்ல கிரிஷ்... என்று சொல்ல வருகிறார். ஆனால் விஜயா கோபப்படுவார் என்று அந்த விஷயத்தை அப்படியே மறைத்து விடுகிறார். வழக்கம் போல இந்த முறையும் மனோஜ் பேச்சைக் கேட்டு விஜயா ஏமாந்து போகிறார்.

    Advertisement

    சீரியல் நடிகை வாழ்க்கையில் நடந்த கொடுமை.. கல்யாணமான 1 மாதத்தில் இத்தனை பிரச்சனையா? போலீசில் புகார்
    அடுத்ததாக வீட்டு வேலை செய்வது குறித்து காண்ட்ராக்டர் வந்து பேசிக் கொண்டிருக்கும்போது முத்து இப்போதைக்கு வேலையை செய்ய வேண்டாம் இதற்கு பர்மிஷன் கிடைக்காமல் இருக்கிறது அதை முறைப்படி வாங்கிட்டு வேலையை தொடங்கலாம் என்று சொல்ல, அப்போதும் மனோஜ் வழக்கம்போல லஞ்சம் கொடுத்து பண்ணலாம் என்று சொன்னதும் முத்து திட்டி விடுகிறார்.

    அடுத்த பிரச்சனை

    கடைசியாக மனோஜ் ரோகிணி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை பற்றி பேசுவதற்காக கனகா வீட்டிற்கு வருகிறார். ஆனால் கனகாவின் அம்மா மனோஜ் சொல்ல வருவதை பற்றி கேட்காமல் கனகாவை கூப்பிட்டு விடுகிறார். உடனே கனகா வந்து என்னை எங்கேயாவது வெளியே கூட்டிட்டு போ என்று மனோஜை தொந்தரவு செய்து கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

    English Summary

    Siragadikka Aasai serial: In the 10th August 2026 episode of Vijay TV's Siragadikka Aasai serial, Rohini is speechless due to Krish's question about Rohini's baby. At the same time, Manoj also said something that no one expected about the child. Similarly, Vijaya is cheating on Manoj again. Let's see what happened.