சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில், 2026 ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கான எபிசோடில் மனோஜ்க்கு ரிஜிஸ்டர் மேரேஜ் நடக்கிறது. அப்போது முத்துவும் மீனாவும் அங்கே வருகின்றனர். அதே நேரத்தில் சிந்தாமணியும் தன்னுடைய ஆட்டத்தை தொடங்கி இருக்கிறார். இதனால் மீனா குடும்பத்தில் இனி புது பிரச்சனை வரப்போகிறது என தெரிகிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
ரோகிணி குழந்தை விஷயத்தில் மனோஜை மிரட்டி விட்டு போயிருந்ததால் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜ் கனகா வீட்டிற்கு போய் இருக்கிறார். அப்போது கனகாவின் அம்மாவும் நாளைக்கு உங்களுக்கும் என் பொண்ணுக்கும் ரெஜிஸ்டர் மேரேஜ் நடக்க இருக்கிறது என்று சொன்னதும் மனோஜ் அதிர்ச்சியாகிறார். ஏற்கனவே எனக்கு விவாகரத்து வழக்கு இன்னும் முடியலையே இந்த நேரத்தில் ரிஜிஸ்டர் பண்ணலாமா என்று கேட்க உங்களுடைய கல்யாணத்தை நாலு செவத்துக்குள் சிம்பலாக முடித்துவிட்டோம் அதனால அதை ரிஜிஸ்டர் பண்ணி ஆகணும்.
அப்பதான் எங்களுக்கு செக்யூரிட்டி கிடைக்கும் என்று கனகா அம்மா சொன்னதும், மனோஜ் அதை தடுக்க எவ்வளவோ முயற்சி செய்கிறார். ஆனால் கனகாவின் அம்மா அதற்கெல்லாம் கண்டுகொள்ளாமல் கண்டிப்பாக நாளைக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் நடந்தே ஆகணும் என்று கண்டிஷன் போட்டு விடுகிறார். இதனால் வேற வழி இல்லாமல் மனோஜ் ரெஜிஸ்டர் மேரேஜ்க்கு ஓகே சொல்லி விடுகிறார். சீரியல் நடிகை வாழ்க்கையில் நடந்த கொடுமை.. கல்யாணமான 1 மாதத்தில் இத்தனை பிரச்சனையா? போலீசில் புகார் பிறகு சிந்தாமணியும் சத்யாவிடம் ரொம்ப நல்லவள் போல பேசிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் மனோஜ்க்கும் கனகாவுக்கும் ரெஜிஸ்டர் மேரேஜ் நடக்கிறது. அதே இடத்திற்கு முத்து தன்னுடைய வீட்டு மாடியில் ரூம் கட்டுவதற்கு அனுமதி வாங்குவதற்காக மீனாவுடன் அங்கே வருகிறார். அவர்கள் ஆபிஸரிடம் டாக்குமெண்டை கொடுப்பதற்காக ரூமுக்குள் போகும் சமயத்தில் மனோஜ் கனகாவுடன் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்கிறார். மனோஜுடன் சந்தோஷும் ஜோசியரும் வந்திருக்கிறார்கள். அப்போது கூட மனோஜ் கண்டிப்பாக இன்னைக்கு இந்த மேரேஜ் பண்ணி ஆகணுமா என்று பயந்தபடியே இருக்க கனகாவின் அம்மா என்று விடாப்பிடியாக கூட்டிக்கொண்டு வருகிறார். பிறகு ரிஜிஸ்டர் ஆபீஸில் ஒரு பக்கம் கனகாவுக்கு மனோஜ்க்கும் மேரேஜ் நடக்கிறது. மற்றொரு அறையில் முத்துவும் மீனாவும் ஆபீஸரிடம் பர்மிஷன் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு வாசலில் மனோஜும் கனகாவும் மாலையும் கழுத்துமாக நின்று கொண்டிருக்கின்றனர். அப்போது முத்துவும் மீனாவும் ஆபீஸரிடம் கையெழுத்து வாங்கிவிட்டு வெளியே வருகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. நாளைக்கு என்று வெளியான ப்ரோமோவில் மனோஜ் நிற்பதை மீனா பார்த்து விடுகிறார். உடனே உங்க அண்ணன் இங்கே வந்து இருக்கிறார் என்று சொன்னதும் முத்துவும் டேய் மனோஜ் என்று கூப்பிடுகிறார். இதைக் கேட்டு மனோஜ் அதிர்ச்சி அடைகிறார். இப்படித்தான் காட்சி இருக்கிறது. ஆனால் எப்படியும் இந்த முறையும் மனோஜ் தப்பி விடுவார் என்று தான் தெரிகிறது. காரணம் பக்கத்திலேயே ஜோதிடர் நிற்பதால் அந்த மனநிலை சரியில்லாத பொண்ணுக்கும் ஜோசியருக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வைப்பதற்காக நான்தான் சாட்சி கையெழுத்து போட வந்தேன் என்று ஏதாவது நாடகத்தை போடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜயா மனோஜால் எத்தனையோ முறை அவமானப்பட்டு அசிங்கப்பட்டாலும் இந்த முறையும் மனோஜை நம்பிக் கொண்டிருக்கிறார். இதனால் இனி விஜயாவுக்கு தான் பிரச்சனை வரப்போகிறது என்று தெரிகிறது. ஆனால் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
மறுபக்கத்தில் சிந்தாமணியும் அவருடைய கணவரும் சத்யா ரேகாவை பிரிக்கத்திற்காக பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ரேகாவின் அப்பா நான் ட்ரீட்மெண்டுக்காக கேரளாவுக்கு போக வேண்டி இருக்கிறது அதனால என்னோட பிசினஸை நீ தான் பாத்துக்கணும் என்று சத்யாவிடம் சொல்கிறார். சத்யாவுக்கு அது பிடிக்கவில்லை என்றாலும் வேற வழி இல்லாமல் சரி என்று சொல்கிறார்.சிந்தாமணியின் பிளான்
மனோஜ்க்கு மீண்டும் கல்யாணம்