சிறகடிக்க ஆசை: பாட்டியை வைத்து கதையே மாறி போச்சு.. விஜயாவுக்கு இந்த நிலை தேவை தான்! மீனா ஆட்டம் ஆரம்பம்

  • சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஆகஸ்ட் 8ம் தேதிக்கான எபிசோடில் பாட்டி விஜயாவை பாடாய் படுத்தி எடுத்துக் கொண்டிருக்கிறார். இதுவரைக்கும் மீனாவை மிரட்டி, உருட்டி வந்த நிலையில் இப்போ அவருக்கே அது வினையாக மாறி இருக்கிறது. ஆனால் முத்துவும் மீனாவும் வழக்கம் போல தியாகி ஆகி இருக்கிறார்கள். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு

    சிறக்கடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், சீதாவை முத்துவும் மீனாவும் அருண் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வருகின்றனர். அப்போது அருண் தான் இதுவரைக்கும் செய்ததெல்லாம் தப்பு என்று திருந்தியவர் போல மன்னிப்பு கேட்கிறார். இதை அடுத்து மீனாவும் முத்துவும் அருணுக்கு அட்வைஸ் கொடுக்கிறார்கள். முத்து, நானும் ஏற்கனவே உன்னை விட கோபக்காரனாக இருந்திருக்கிறேன். ஆனா என்னுடைய மனைவி வாழ்க்கையில் வந்த பிறகுதான் நான் எவ்வளவு தப்பா இருந்திருக்கிறேன் என்று எனக்கு புரிய வந்தது.

    Advertisement

    உன்னையும் குறை சொல்ல முடியாது, இந்த நேரத்தில் உன்னுடைய அம்மா இருந்திருந்தால் நீ எவ்வளவு மாறி இருக்க மாட்ட, அம்மாவோட இழப்பு உன்னை இவ்வளவு மாற்றி இருக்கிறது... எங்களுக்கு புரியுது. ஆனா சீதாவை கஷ்டப்படுத்துறதால உன்னுடைய வாழ்க்கை தான் மீண்டும் மீண்டும் கஷ்டப்படும் என்று அட்வைஸ் கொடுக்கிறார். அதை எல்லாம் கேட்டு அருண் கோபப்படுவார் என்று நினைத்தால் இன்னைக்கு கோபப்படாமல் அமைதியாகவே இருக்கிறார்.

    முத்துவின் அட்வைஸ்

    அப்போது முத்துவும் மீனாவும் சீதாவுக்கும் அட்வைஸ் சொல்லிவிட்டு விட்டு கிளம்புகிறார்கள். மறுபக்கத்தில் முத்துவும் மீனாவும் ரூமுக்குள் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாட்டி சரியாக வருகிறார். பாட்டி இந்த வீட்டை விட்டு போகிற வரைக்கும், நாம ரெண்டு பேரும் ஒன்று சேர முடியாது என்று பேசிக் கொண்டிருக்கும் சமயத்திலேயே பாட்டியின் குரல் கேட்கிறது. உடனே மீனா தன்னுடைய டிரஸ்ஸையெலலாம் முத்து ரூமில் இருந்து ஒழிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

    Advertisement

    மெமரி லாஸ் ஆனா பாட்டி முத்துவை கூப்பிட்டு இந்த பொண்ணுங்க யாரு என்று கேட்க, அப்பாவோட பிரண்டோட பொண்ணுங்க, நம்ம வீட்டுல வாடகைக்கு தங்கி இருக்காங்க என்று சமாளிக்கிறார். ஆனாலும் பாட்டி விடாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார். நீங்கள் இரண்டு பேரும் அக்கா தங்கச்சின்னு சொல்றீங்க ஆனா முகஷாடை அப்படி தெரியலையே என்று கேட்க அப்போதும் முத்து சமாளிக்கிறார்.

    பொய் சொல்லும் முத்து

    ஆனாலும் நம்பாத பாட்டி அந்த நண்பர் உனக்கு எப்படி ஃப்ரெண்ட் ஆனார்? என்று அண்ணாமலையிடம் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க, அதற்கு முத்துப் பொய் மேல் பொய் சொல்லிக்கொண்டு இருக்கிறார். இதற்கிடையே மனோஜ் வீட்டிற்கு வர, அவரிடம் எங்க போயிட்டு வர என்று பாட்டி கேட்டதும் ,ஷோரூம் போயிட்டு வரேன் என்று சொல்கிறார். அதற்கு உடனே பாட்டி நீ காலேஜ் தானே படிக்கிற அப்புறம் எப்படி வேலைக்கு போனா என்று கேட்க, அவன் படிப்பை முடிச்சிட்டு வேலைக்கு போயிட்டான் என்று சொல்கிறார்.

    Advertisement

    பாட்டி போட்ட ஆர்டர்

    பிறகு அண்ணாமலையிடம் பாட்டி பசங்க எல்லாரும் பெரியவங்களாகிட்டாங்க அதனால அவங்களுக்கு சீக்கிரமா கல்யாணத்தை பண்ணி வைக்கணும் என்று பாட்டி சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு விஜயாவிடம் இன்னைக்கு என்ன சாப்பாடு என்று கேட்க, விஜயா வழக்கம் போல மீனாவிடம் கேட்டதும் வீட்டுக்கு வந்து சின்ன பொண்ணு கிட்ட என்ன சாப்பாடு என்று கேட்கிறா? நீ போய் சமைச்சு கொண்டு வா என்று விஜயா பாட்டி விரட்டி விடுகிறார்.

    விஜயாவின் சந்தேகம்

    இதனால் விஜயா கடுப்பானாலும் வேற வழி இல்லாமல் கிச்சனுக்கு போய் சமைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது மனோஜ் வந்து பேச வர இப்போதைக்கு எதுவும் பேசாதடா.. உங்க பாட்டி எனக்கு வேலை தந்திருக்கிறாங்க, அதை முடிச்சிட்டு வரேன் என்று சொல்கிறார். ஆனாலும் விஜயாக்கு பாட்டிக்கு உண்மையிலேயே எல்லாம் மறந்து போச்சா அல்லது ஏமாற்றுகிறார்களா? என்று சந்தேகம் வருகிறது. இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

    English Summary

    Siragadikka Aasai Serial: In the episode of 8th August 2026 in the serial Chirakadika Aasa aired on Vijay TV, Bhatti is taking Vijay as a song. Until now, Meena has been threatened and bullied, but now it has become a verb for him. But Muthu and Meena are martyred as usual. Let's see what happened in detail.