சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ( Siragadikka Aasai Serial Today Episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஜூலை 11ஆம் தேதிக்கான எபிசோடில், பணத்துக்காக கனகாவை கல்யாணம் செய்த மனோஜ்க்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கிடைக்கிறது. அதே நேரத்தில் தன் மகன் மனோஜ் மீது ரொம்ப நம்பிக்கை வைத்திருந்த விஜயா மீண்டும் ஏமாந்து போயிருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், கோவிலுக்கு வந்த விஜயா மனோஜ்க்கு பெரிய பணக்கார பெண்ணோடு ரெண்டாவது கல்யாணம் நடக்கணும் என்று வேண்டுதல் வைத்துக் கொண்டிருக்கிறார். அதே கோவிலுக்கு தான் கல்யாணத்தை முடித்துக் கொண்ட மனோஜும் குடும்பத்துடன் வந்திருக்கிறார். அப்போது மனோஜ் பற்றி பார்வதியிடம் விஜயா பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கும்போது திடீரென மனோஜை பார்த்து விடுகிறார்.
உடனே மனோஜிடம் போய் நீ எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கறதுக்காக இந்த கோயிலுக்கு வந்தியா? இங்க வந்து வேண்டுதல் வைத்தால்தான் உனக்கு நல்லபடியா கல்யாணம் நடக்கும்னு நான் உன்கிட்ட சொன்னேனே என்று சொல்ல, அதற்கு மனோஜ் திரு திருவென முழித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கனகாவின் அம்மா மனோஜை மாப்பிள்ளை என்று கூப்பிட மனோஜ் அதிர்ச்சியாகி நிற்கிறார்.
அப்போது விஜயா இவங்க எதுக்கு உன்னை மாப்பிள்ளைனு கூப்பிடறாங்க? இவங்க அந்த மனவளர்ச்சி குறைவாக இருந்த பொண்ணோட அம்மா தானே? என்று விஜயா கேள்வி மேல் கேள்வி கேட்க, அந்த நேரத்தில் மனோஜ் பக்கத்திலிருந்த ப்ரோக்கரை தான் மாப்பிள்ளைனு அவங்க கூப்பிட்டாங்க என்று சொல்கிறார். பிறகு விஜயாவிற்க்கு தெரியாத வகையில் கனகா அம்மாவிடம் எதுவும் சொல்லிடாதீங்க இதான் எங்க அம்மா என்று சைகை காட்ட அவரும் புரிந்து கொள்கிறார். அந்த நேரத்தில் கனகா வந்து மனோஜை வா புருஷா போகலாம் என்று கையை பிடித்து கூப்பிட விஜயா அதிர்ச்சி அடைகிறார்கள். நான் உன் புருஷன் இல்லம்மா இவருதான் உன் புருஷன் என்று புரோக்கர் கையைப் பிடித்து கொடுத்ததும் விஜயா நிம்மதி அடைகிறார். அடுத்த கட்டத்தில் மனோஜ் கனகா வீட்டிலிருந்து கிளம்புகிறேன் என்று சொல்கிறார். அதற்கு கனகா அம்மா இன்னைக்கு உங்களுக்கு சாந்தி முகூர்த்தம் இருக்கு நீங்க எங்கேயும் போக வேண்டாம் இங்கே இருங்க என்று சொல்ல, அதற்கு மனோஜ் இல்ல இன்னைக்கு எங்க அம்மா கிட்ட என்னோட நண்பனின் கல்யாணம்னு சொல்லிட்டு வந்திருக்கிறேன். நான் கல்யாணம் பண்ணின விஷயம் எங்க அம்மாவுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான். அதனால நான் இன்னைக்கு வீட்டுக்கு போய் ஆகணும் இன்னொரு நாள் எல்லா சம்பிரதாயத்தையும் பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டு, நீங்க அந்த அஞ்சு லட்சத்தை கொடுத்தா நல்லா இருக்கும் என்று மனோஜ் கேட்கிறார். அதற்கு கனகாவின் அம்மா இப்ப பணத்தை கொடுத்தால் இவர் திரும்பி இங்க வராம போயிருவாரு என்று யோசித்து ஆடிட்டர் வந்ததும் உங்களுக்கு அவரிடம் கேட்டு பணத்தை வாங்கி தரேன் என்று அனுப்பி வைக்கிறார். பிறகு மனோஜ் வீட்டிற்கு வரும் சமயத்தில் முத்து அவரை பார்த்து வாங்க மாப்பிள்ளை என்று கூப்பிட மனோஜ் அதிர்ச்சியாகி நிற்கிறார். அதற்கு நீ தானே மாப்பிள்ளை தோழனா போன? கல்யாணம் எப்படி நடந்தது என்று முத்து விசாரிக்க, எல்லாம் நல்லபடியா நடந்து முடிஞ்சிச்சு என்று மனோஜ் சொல்கிறார். பிறகு முத்து, மீனா, ரவி, ஸ்ருதி எல்லோரும் அண்ணாமலையிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அந்த மன வளர்ச்சி குறைந்த கனகாவுக்கு தான் கல்யாணம்.. நாங்க தான் போயிருந்தோம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். காதல் கணவரை விவாகரத்து செய்ய போகிறாரா சீரியல் நடிகை ரேஷ்மா? ரசிகர்கள் கவனித்த ஒரு விஷயம்! அடுத்த பஞ்சாயத்து அடுத்த வாரத்திற்கு என்று வெளியான ப்ரோமோவில் மனோஜை பார்ப்பதற்காக கனகா ஷோரூம்க்கு வருகிறார். அதே நேரத்தில் ரோகினியும் அங்கு வருகிறார். கனகா ரோகிணியை இடித்து தள்ளிக்கொண்டு மனோஜ் கையை பிடித்து இழுத்து வா புருஷா எனக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடு என்று சொல்கிறார். இதை பார்த்து ரோகிணி அதிர்ச்சியாகி நிற்கிறார். இதனால் அடுத்த வாரம் ரோகிணிக்கு கனகாவுடன் மனோஜ்க்கு கல்யாணம் நடந்த விஷயம் தெரிய வாய்ப்பு இருக்கிறது. இனிதான் ரோகிணியின் ஆட்டம் பயங்கரமாக இருக்க போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏமாந்த விஜயா
மனோஜ் சொன்ன விஷயம்
முத்து கேட்ட கேள்வி
அப்போது வந்த விஜயா அது மனோஜோட ஃப்ரெண்டுக்கு தானே அந்த பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க. நானும் கோவிலில் வைத்து அந்த மாப்பிள்ளையை பார்த்தேன் என்று சொல்ல, மனோஜ் எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருக்கிறார். அப்போது அண்ணாமலை நீ விவாகரத்து வாங்குவதற்கு முன்னாடி கல்யாணத்தை பத்தி மட்டும் எதுவும் யோசிக்காத அப்படியே கல்யாணம் பண்ணிட்ட உன்னால நாங்க எல்லாரும் ஜெயிலில் தான் இருக்கணும் என்று சொல்ல மனோஜ் எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.கல்யாணத்திற்கு முன்பு பல பெண்களுடன் உறவில் இருந்திருக்கிறேன்.. சீரியல் நடிகர் ஓபன் பேச்சு.. வந்தாச்சு விவாதம்
அடுத்த வார ப்ரோமோ