சிறகடிக்க ஆசை: மீனா குழந்தை விஷயத்தில் மோசமாக பேசிய விஜயா.. அண்ணாமலை கொடுத்த அடி.. பாவம் முத்து

  • சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai Serial Today Episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஜூலை 17ஆம் தேதிக்கான எபிசோடில் முத்து மீனா குழந்தை விஷயத்தில் விஜயா சொன்ன வார்த்தையை கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அதே நேரத்தில் மனோஜிக்கு கிடைத்த பணத்தை வைத்து முத்துவிற்கு சந்தேகம் வருகிறது. இனி என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், விஜயா வீட்டிற்குள் வேகமாக வந்து அண்ணாமலையிடம் முத்துமீனா வீட்டுக்கு வந்தாங்களா? உங்களுக்கு போன் செய்து ஏதாவது சொன்னார்களா? நான் பார்வதி வீட்டுக்கு போயிட்டு வர வழியில அவங்களை ஆஸ்பிட்டல்ல பார்த்தேன் என்று சொன்னதும் அண்ணாமலை அவங்க இன்னும் வீட்டுக்கு வரல என்று சொல்லிக் கொண்டிருக்கும் சமயத்திலே முத்துவும் மீனாவும் வீட்டிற்குள் வருகின்றனர்.

    Advertisement

    சிறக்கடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

    மீனா சோகமாக இருக்கிறார். முத்து எதுவாயிருந்தாலும் நீங்க என்கிட்ட கேட்கலாமே எதற்காக அப்பா கிட்ட கேக்குறீங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது இவங்க எதுக்காக ஹாஸ்பிடலுக்கு போயிட்டு வராங்க என்று விஜயா மீண்டும் மீண்டும் துருவி துருவி கேட்கிறார். அதற்கு முத்து மீனாவுக்கு வயிறு வலி அதனால் தான் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனேன் என்று சொல்ல, நீ பொய் சொல்லுற வயிறு வலின்னா வேற ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய் இருக்க வேண்டியதுதானே? எதற்காக மகப்பேறு பாக்குற ஹாஸ்பிடல் கூட்டிட்டு போன அப்போ இவ கர்ப்பமா இருக்குற.. நீ மறைக்கிறியா என்று கோபப்படுகிறார்.

    Advertisement

    கோபப்பட்ட அண்ணாமலை

    அதற்கு அண்ணாமலை அப்படி சந்தோஷமான விஷயமாக இருந்தால் உடனே சொல்லி இருப்பாங்களே? எதற்காக தொந்தரவு பண்ணுற என்று கேட்க, குழந்தை இருக்கிறதோ இல்லைஇருக்கிறதோத வீட்டுக்கு முதல் வாரிசாக மனோஜ் குழந்தை தான் வரணும். இவங்க எல்லாம் இப்ப குழந்தை பெத்துக்க கூடாது என்று சொன்னதும் எல்லோரும் கோபப்படுகின்றனர். ஸ்ருதி விஜயாவை திட்டுகிறார்.

    விஜயாவின் திமிர்

    அதற்கு விஜயா நீ குழந்தை பெத்துக்கிட்டா கூட நான் ஏத்துக்குவேன். ஆனா இவ குழந்தை இந்த வீட்டுக்கு முதல் வாரிசாக வரவே கூடாது மனோஜின் குழந்தை தான் வரணும். இவங்க சீக்கிரமா குழந்தை பெத்துக்கிட்டாங்கன்னா அப்புறம் மனோஜ்க்கு வயசு ஆயிடுச்சுன்னு சொல்லிடுவாங்க அவனுக்கு இரண்டாவது கல்யாணம் பண்ண முடியாமல் போயிடும் என்று சொல்ல, அண்ணாமலை இதை கேட்டு கோபமாகி திட்டுகிறார்.

    Advertisement

    நான் இந்த வீட்டுக்கு எப்போ பேர பசங்க வருவான்னு ஆசையோடு காத்திருக்கிறேன். நீ இப்படி பேசிட்டு இருக்குற... குழந்தை பெத்துக்கிறது அவங்களோட விருப்பம் அதை நீ தடுக்க கூடாது என்று திட்டுகிறார். அப்போது மீனா அழுது கொண்டே ரூமுக்குள் போய்விடுகிறார். பிறகு முத்துவும் மீனாவுக்காக விஜயாவிடம் சண்டை போட்டுக்கொண்டு போகிறார். அந்த நேரத்தில் மீனாவுக்கு ஸ்ருதி ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

    கதறி அழுத மீனா

    ஆனால் ஹாஸ்பிடலில் நடந்த எந்த விஷயமும் குடும்பத்திற்கு தெரியாது. அதைத்தொடர்ந்து மனோஜ் கனகா வீட்டிற்கு போகிறார். அங்கு கனகா மனோஜிடம் என்னை‌ ஏன் பார்க்க வரல என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கனகாவின் அம்மா வந்து 10 லட்சம் பணத்தை கொடுத்து அஞ்சு லட்சம் ரோகினியைடைவர்ஸ் பண்ணுவதற்கு அஞ்சு லட்சம் பிசினஸ் டெவலப் பண்ணுவதற்கும் வச்சுக்கோங்க என்று சொல்கிறார்.

    Advertisement

    ஆடிஷன் போன பிரபல சீரியல் நடிகை.. நி***மாக போட்டோ எடுத்த தயாரிப்பாளர்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
    பிறகு சாந்தி முகூர்த்தத்தை உடனே வச்சுக்கணும் என்று சொன்னதும் ஜோசியர் அமாவாசை நாள் ரொம்ப நல்லா இருக்கு அன்னைக்கே வச்சுக்கலாம் என்று நாள் குறித்து சொல்கிறார். அதை தொடர்ந்து பணத்தை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்த மனோஜ் பணத்தை கொடுத்ததும் விஜயா ரொம்ப சந்தோஷப்படுகிறார். ஆனால் முத்து ரவி எல்லோருக்கும் இது எப்படி வந்தது? கடன் வாங்கினியா? என்று கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

    குடும்பத்திற்கு சந்தேகம்

    அதற்கு விஜயா வழக்கம் போல மனோஜ்க்கு சப்போர்ட் செய்து கொண்டிருக்கிறார். அதனால் முத்து மனோஜ்க்கு வாக்குவாதம் வருகிறது. அப்போது எவ்வளவு எத்தனை முறை பட்டாலும் திருந்தாத மனோ இந்த முறையும் முத்துவை அசிங்கப்படுத்திய பேசுகிறார் அதனால் மீனா முத்துவுக்காக சப்போர்ட் பண்ணி கோவப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

    English Summary

    Siragadikka Aasai serial: The whole family is shocked to hear Vijay's words about Muthu Meena's baby in the 17th July 2026 episode of Siragadikka Aasai serial telecasting on Vijay TV. At the same time Muthu gets suspicious about the money Manoji got. Now let's see what happened in detail.