சிறகடிக்க ஆசை: மீண்டும் ஏமாறும் விஜயா.. மீனாவா இப்படி பேசியது? மாஸ் காட்டிய முத்து.. ரோகிணி பாவம்


  • சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஜூலை 17 ஆம் தேதிக்கான எபிசோடில், மனோஜ் சொன்ன பொய்யை நம்பி விஜயாவும் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் கடைசியில் தான் எதிர்பாராத பெரிய சம்பவமே நடந்திருக்கிறது. இதுவரைக்கும் அமைதியாக இருந்த மீனா இன்று முத்துவுக்காக அதிரடியாக பேசியிருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜ் 5 லட்சம் பணம் கொண்டு வந்ததும் விஜயாவுக்கு தலைக்கால் புரியாமல் ஆகா ஓகோ என்று மனோஜை புகழ்ந்து தள்ளி கொண்டு இருக்கிறார். இதனால் கடுப்பான ரவி, மனோஜ் வாங்கிய கடனால் வீடு ஜப்தியாகுற நிலைமையில் இருந்தோமே... அப்போ இந்த பிசினஸ் மைண்ட் வச்சி ஏதாவது பண்ணி இருந்தா இந்த வீட்டுக்காக கடன் அடைச்சிட்ட இருக்கலாம்.

    Advertisement

    சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

    ஆனால் தான் கடன் வாங்கி இந்த வீட்டை மீண்டும் திருப்பி இருக்கிறான். அவனை இவ்வளவு மோசமாக பேசுறீங்க என்று ரவி விஜயாவை திட்டுகிறார். உடனே மீனாவும் முத்துக்கு சப்போர்ட் செய்து திட்டுகிறார் அதனால் விஜயா கடுப்பாகிறார். ஆனாலும் இவர்களை எல்லாம் கண்டுக்காத நீ இப்பவே அந்த ரோகினிக்கு போன் செய்து நாளைக்கு காலையில் வர சொல்லு, வந்து கையெழுத்து போட்டுட்டு போக சொல்லு என்று சொன்னதும் மனோஜ் சரி என்று போகிறார்.

    பிறகு முத்து, மீனா, ரவி, ஸ்ருதி எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இந்த மனோஜ்க்கு அஞ்சு லட்சம் பணம் எப்படி உடனே கிடைத்திருக்கும்? ஏதாவது கடன் வாங்கி வச்சிருப்பானா? இல்லனா இன்னும் ஏதாவது பெரிய பிரச்சனை வரப்போகுதா? என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். பிறகு அவனுடைய வாழ்க்கையை அவனே பார்க்கட்டும் என்று சொல்லி எல்லோரும் கிளம்புகிறார்கள்.

    Advertisement

    எதிர்த்துப் பேசிய மீனா

    அப்போது முத்துவும் மீனாவும் பேசிக் கொண்டு இருக்கும்போது நாளைக்கு ஸ்வீட் செய் என்று முத்து சொல்ல, அதற்கு மீனா என்ன விஷயம் என்று கேட்டதும், நாளையோட அந்த பார்லர் அம்மா சாப்டர் முடிய போகுது என்று சொல்ல, வேற எதற்காக வேண்டுமென்றாலும் நான் ஸ்வீட் செய்வேன் ஆனால் ஒரு பொண்ணோட வாழ்க்கை நாளை முடியப்போகுது என்பதை நாம் சந்தோஷமாக கொண்டாட முடியாது என்று சொல்லி விடுகிறார்.

    ரோகிணி என்னதான் கெட்டவளாக இருந்தாலும் அவ உங்க அண்ணன் கூட சேர்ந்து வாழ்றதுக்காகத்தான் இத்தனை தப்பையும் செஞ்சு இருக்கா என்று சொல்லிவிட்டு மீனா போகிறார். அதே போல ரவியும் ஸ்ருதியும் மனோஜ் ரோகிணி பற்றி தான் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் மனோஜ் ரோகிணிக்கு போன் செய்து நாளை காலை வந்து பணத்தை வாங்கிட்டு போ என்று சொன்னதும் ரோகிணி ரொம்பவும் பீல் பண்ணுகிறார். ஆனால் அப்போதும் மனோஜ் எந்த வருத்தமும் இல்லாதது போலவே பேசிவிட்டு போனை வைத்து விடுகிறார்.

    Advertisement
    படுக்கையிலும் கேமரா வைத்த கணவர்.. அந்தரங்க போட்டோவை வைத்து மிரட்டல்.. விஜய் டிவி சீரியல் நடிகை கண்ணீர்

    விஜயாவுக்கு அவமானம்

    அதைத் தொடர்ந்து விஜயா பார்வதிக்கு போன் செய்து நாளைக்கு காலையில் எங்க வீட்டுக்கு வா, நாளைக்கு ஒரு பங்க்ஷன் இருக்குது சந்தோஷமா கொண்டாடலாம் என்று சொன்னதும், உன்னோட பிறந்தநாளா? என்று பார்வதி கேட்க, இல்ல ரோகிணிக்கு நாளைக்கு பணத்தை கொடுத்து செட்டில்மெண்ட் பண்ண போறோம் என்று சொல்கிறார்.

    அதற்கு பார்வதி ஒரு பொண்ணோட வாழ்க்கை அழியுறதை சந்தோசமா கொண்டாடக்கூடாது. உனக்கு பசங்க மட்டும்தான் பொண்ணு இருந்திருந்தா தான் அந்த கஷ்டம் தெரியும் என்று திட்டுகிறார். அதனால் கடுப்பான விஜயா பார்வதியிடம் சண்டை போட்டுவிட்டு ஃபோனை வைத்து விடுகிறார். பிறகு விஜயா வக்கீலுக்கு போன் செய்து நாளைக்கு டைவர்ஸ்க்கான பேப்பர் எல்லாவற்றையும் கொண்டுட்டு வாங்க நாளைக்கு ரோகிணி வந்துடுவா என்று சொல்கிறார்.

    Advertisement

    கடைசியாக ரோகிணி மனோஜ் சொன்னதை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் மனோஜும் ரோகிணி இதற்கு முன்பு பேசியதை எல்லாம் நினைத்து பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. இதனால் அடுத்த வாரம் இதை வைத்து ஒரு பஞ்சாயத்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Siragadikka Aasai serial: telecasted on Vijay TV, Vijay is also playing a game by believing Manoj's lie. But at the end, an unexpected big event happened. Meena, who has been quiet so far, has spoken out for Muthu today. Let's see what happened in detail.