சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில், 2026 ஜூலை மூன்றாம் தேதிக்கான எபிசோடில், சத்யா ரேகாவின் கல்யாண ஏற்பாடு நடந்தது. ஆனால் அதில் எதிர்பார்க்காத விதத்தில் சில அதிர்ச்சியான சம்பவங்களும் நடந்தது. அது என்னவென்று விரிவாக பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
சிறகடிக்க ஆசை சீரியலில் தியாகி முத்துவும் மீனாவும் தான் எல்லா பிரச்சனைகளும் தலையில் தூக்கி வைத்து சுமக்கிறார்கள். அதேபோலத்தான் இப்போது ரேகா சத்யாவின் கல்யாணத்திலும் தலையை கொடுத்து இருக்கிறார்கள். இவர்களுடைய காதல் விஷயம் தெரிந்ததும் சிந்தாமணி தன்னுடைய சொந்த மகளையே கடத்தி வைத்திருந்தார்.
ஆனால் முத்து ரேகாவை கடத்தி தன்னுடைய பாட்டி வீட்டில் வைத்திருக்கிறார். அங்கு வைத்து ரேகா சத்யாவின் கல்யாணத்திற்கு ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது. இந்த கல்யாணத்திற்கு விஜயாவும் வந்திருக்கிறார். ரேகாவும் சத்யாவும் எப்படியாவது கல்யாணம் நடக்க வேண்டும் இன்று விஜயா சந்தோஷமாக காத்திருக்கிறார்.
ஏனென்றால் சிந்தாமணி தன்னுடன் பழகி தன்னையே ஏமாற்றி வீட்டை எழுதி வாங்கி விட்டார் என்ற கோபம் விஜயாவுக்கு இன்னும் அதிகமாகவே இருக்கிறது. அதனால் சிந்தாமணியின் மகள் ஒரு கஷ்டப்படுற பையனை கல்யாணம் பண்ணி கஷ்டப்படணும் என்று சாபம் விட்டிருந்தார். இப்போது அது நடக்கப்போகிறது என்று சந்தோசத்தில் இருக்கிறார். ஆனாலும் இந்த கல்யாணம் நடப்பதை பார்த்து சிந்தாமணி அதிர்ச்சியாக வேண்டும் என்று சிந்தாமணிக்கு கல்யாண விஷயத்தை வீடியோ கால் செய்து சொல்லி விடுகிறார். உடனே சிந்தாமணியும் அங்கு வந்து ரேகா சத்யா கல்யாண கோலத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். தாலி கட்டும் நேரத்தில் அங்கு வந்த சிந்தாமணி நிறுத்துங்க என்று கத்த எல்லோரும் ஷாக் ஆகின்றனர். பிறகு தன்னுடைய மகளை அங்கிருந்து இழுத்துக் கொண்டு போக முயற்சி செய்யும்போது முத்து இடையில் வந்து சிந்தாமணியை அடிக்க பாய்கிறார். பிறகு எல்லோரும் சிந்தாமணியும் அவருடைய ஆட்களையும் மிரட்டி சத்யா ரேகா கல்யாணத்தை நடத்தி வைக்கின்றனர். அப்போது விஜயா சந்தோஷமாக பார்த்தியா நான் சொன்ன மாதிரியே உன் பொண்ணு ஒண்ணும் இல்லாதவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்று சிந்தாமணியை வெறுப்பேத்துகிறார். இதைக் கேட்டு சிந்தாமணி கடுப்பாகி அருவாளை எடுத்து வெட்ட வருகிறார். அப்போது முத்து தடுத்து விடுகிறார். உடனே சிந்தாமணி நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க என்று சாபம் விட்டுட்டு கிளம்புகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. ஒரு வழியாக பல மாதங்களுக்குப் பிறகு சத்யா ரேகா கல்யாணம் நடந்து முடிந்து விட்டது. இனி அடுத்ததாக ஸ்வேதா மிஸ்ரா கல்யாணத்தில் தான் முத்துமீனா பஞ்சாயத்து செய்ய போறாங்க என்று தெரிகிறது. சரி என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.முத்து மீனா செயல்
அசிங்கப்படுத்திய விஜயா
சிந்தாமணியின் செயல்