சிறகடிக்க ஆசை: விஜயா செய்த வேண்டாத வேலை.. மாஸ் காட்டிய மீனா.. முத்து குடும்பத்திற்கு புது பஞ்சாயத்து


  • சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai Serial Today Episode) 2026 ஜூன் நான்காம் தேதிக்கான எபிசோடில் யாரும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது முத்து தலைமையில் சத்யா ரேகாவின் கல்யாணம் நடந்திருக்கிறது. அதே நேரத்தில் விஜயா செய்த செயலால் சிந்தாமணி செம கோவத்தில் இருக்கிறார். இதனால் இனி அடுத்த பிரச்சனை தான் வரப்போகிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

    ஊரையெல்லாம் ஏமாற்றிக் கொண்டிருக்கும் சிந்தாமணிக்கு ஒரே மகளான ரேகா சிந்தாமணியின் எதிரியான மீனாவின் தம்பி சத்யாவை காதலித்து இருந்தார். இந்த விஷயம் சிந்தாமணிக்கும் அவருடைய கணவருக்கும் தெரியவந்ததும் தன்னுடைய மகளை வீட்டிலேயே அடைத்து வைத்திருந்தார். ஆனாலும் சத்யா முத்து உதவியோடு ரேகாவை கடத்தி முத்துவின் பாட்டி வீட்டில் வைத்திருந்தார்.

    Advertisement

    அங்கு வைத்து இருவருக்கும் திருமணம் ஏற்பாடுகளும் நடந்தது. இந்த விஷயத்தை சிந்தாமணியிடம் விஜயா போட்டு கொடுத்து விட்டார். காரணம் தன்னுடைய வீட்டை ஏமாற்றி எடுக்க முயற்சி செய்ததற்காக சிந்தாமணியை பழிவாங்க வேண்டும் என்று விஜயா செய்த சதி செயல் இந்தம்மா திருந்தவே மாட்டாங்க என்று சொல்ல தான் வைத்தது.

    இன்றைய எபிசோடு

    சரி இது ஒரு பக்கம் இருந்தாலும் இன்று என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம். இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் சிந்தாமணி தன்னுடைய மகள் கல்யாணத்தை நிறுத்தி விட வேண்டும் என்று தன்னுடைய புருஷனுடன் காரில் வேகமாக வந்து கொண்டு இருந்தார். மறுபக்கத்தில் கல்யாண ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது. கடைசியாக திருமணமும் நடக்கிறது. அந்த நேரத்தில் சிந்தாமணியும் அவருடைய கணவரும் அங்கே வந்து ரேகாவை பார்த்து அதிர்ச்சியாகின்றனர்.

    Advertisement

    ஆனால் விஜயா சிந்தாமணியை பார்த்ததும் ரொம்பவும் சந்தோஷப்பட்டு நீ என்னுடைய வீட்டை எடுக்க பார்த்தியே... அப்போ எந்த அளவிற்கு எங்களுக்கு வேதனை இருந்திருக்கும்ன்னு இப்போ உனக்கு தெரியுதா? இப்ப நான் எந்த குடும்பத்துல சம்பந்தம் பண்ணி இருக்கணோ அதே பூக்கார குடும்பத்துல தான் நீயும் சம்மந்தியா ஆகி இருக்க என்று நக்கலாக பேச சிந்தாமணி இதனால் கோபமாகி தன்னுடைய மகளை அடிக்கப் போகிறார்.

    “கயல் சீரியலில் பெரிய மாற்றம்… மறைந்த சுபாஷினியின் இடத்தை பிடித்த ரோஜா சீரியல் நடிகை” இனி தான் பிரச்சனை!

    உடனே முத்து வந்து தடுத்ததும் சிந்தாமணியின் புருஷன் சிந்தாமணியை கூட்டிக்கொண்டு வெளியே போகிறார். பிறகு சிந்தாமணி யோசித்துப் பார்க்கிறார். நாம இந்த ஊரை விட்டு வெளியே போனா தன்னுடைய மகளோட தான் போக வேண்டும் என்று முடிவெடுத்து மீண்டும் வந்து ரேகாவிடம் சென்டிமென்டாக பேசி பார்க்கிறார். ஆனால் அதற்கும் முத்து பதிலடி கொடுத்து அனுப்பி வைக்கிறார்.

    Advertisement

    ஆனால் ரேகாவின் மனதில் அம்மாவை நினைத்து சின்ன வருத்தமாக இருக்கிறது. இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. ஆனால் அடுத்த வாரத்திற்கான எபிசோடில் தரமான சம்பவம் இருக்கிறது. அதாவது மனோஜ் மனநிலை சரியில்லாத கனகாவை கல்யாணம் செய்வதற்கு சம்மதம் சொல்கிறார்.

    சீரியல் நடிகை வந்தனா திருமண வாழ்க்கையில்.. சிவகார்த்திகேயன் செய்த செயல்! இப்படியும் நடந்ததாமே!

    அடுத்த வார எபிசோடு

    தனக்கு இப்போது 10 லட்சம் வேண்டும் அந்த 10 லட்சம் பணத்தை ரோகிணியிடம் கொடுத்தால் தான் டைவர்ஸ் கிடைக்கும் அப்புறம்தான் கல்யாணம் பண்ண முடியும் என்று சொன்னதும் கனகாவின் அம்மா நீங்க என் பொண்ணுகளுக்கு தாலி கட்டுங்க உடனே நான் உங்களுக்கு பணத்தை தரேன் என்று சொல்கிறார். இதனால் விஜயாவுக்கு தெரியாமல் கல்யாணம் செய்ய ஏற்பாடு பண்ணுகிறார். இதனால் அடுத்த வாரம் ஒரு பஞ்சாயத்து இருக்கிறது.

    English Summary

    Siragadikka Aasai latest episode update: An unexpected incident has happened in the episode of 4th June 2026 in the serial Sirakadika Aasa which is being aired on Vijay TV. That is, Satya Rekha's marriage has taken place under the leadership of Muthu. At the same time Chintamani is in Sema Govt due to Vijaya's actions. This will lead to the next problem. Let's see what happened in detail.