சிறகடிக்க ஆசை: பெத்த அம்மாக்கே ஆப்பு வைத்த மனோஜ்.. இனிதான் ஆட்டம் ஆரம்பம்.. உடையும் உண்மை!


  • சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai serial July 7th episode) 2026 ஜூலை 7ஆம் தேதிக்கான எபிசோடில், மனோஜின் திருட்டு கல்யாணம் உண்மை குடும்பத்திற்கு தெரிய வருமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்புடனே இருந்தது. ரோகிணி தான் வில்லி என்று நினைத்திருந்தால் ரோகிணியை விடவும் மனோஜின் க்ரைம் ரேட் தான் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சரி என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம் வாங்க.

    Advertisement

    சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

    இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் சத்யாவுக்கு கல்யாணம் முடிந்ததும் தன்னுடைய அம்மா வீட்டிற்கு ரேகாவை கூட்டிக்கொண்டு வந்துவிடுகிறார். என்ன தான் சிந்தாமணி சாபம் விட்டாலும் அவர் முன்பு நல்லா வாழனும் என்று தான் சத்யா முடிவு எடுத்திருக்கிறார். சத்யாவுக்கு எல்லோரும் ஆசிர்வாதம் செய்துவிட்டு கிளம்பி விடுகிறார்கள்.

    Advertisement

    அதற்கு பிறகு சந்திரா முத்து மற்றும் மீனா எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது வசதியாக வாழ்ந்த ரேகாவால் இந்த வீட்டில் வாழ முடியுமா? என்ன செய்யப் போகிறார்களோ என்று சந்திரா கவலையாக பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் முத்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து போகிறார்.

    மறுபக்கத்தில் சத்யா கல்யாணத்தை நடத்தி முடித்ததும் வீட்டிற்கு வெறும் சீதாவை அருண் கோபத்துடன் திட்டிக் கொண்டிருக்கிறார். என்னிடம் பொய் சொல்லி எனக்கே துரோகம் செய்துவிட்டாய், உன்ன சும்மா விடமாட்டேன் என்று அவரை போட்டு அடிக்கிறார். குலதெய்வம் கோயிலுக்கு போகிறேன் என்று பொய் சொல்லி விட்டு சத்யா கல்யாணத்திற்கு போனதால் அருண் போட்டு அடித்து சீதாவின் வாயில் இருந்து ரத்தமே வருகிறது.

    Advertisement
    3 வருஷம் காத்திருந்த படம்... 48 மணி நேரத்திலேயே ஓடிடியில் இருந்து மாயம்! பிரபல நடிகர் படத்துக்கு என்ன நடந்தது?

    சீதாவுக்கு விழுந்த அடி

    ஆனாலும் அதை கண்டுகொள்ளாமல் அருண் போய் விடுகிறார். வழக்கம் போல இந்த முறையும் சீதா எல்லா கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு தியாக சுடராக இருக்கிறார். மீனாதான் இப்படி என்றால் இந்த சீதாவும் அக்காவுக்கு தங்கச்சி தப்பவே மாட்டேன் என்று காட்டிக் கொண்டிருக்கிறார் போல. ஆரம்பத்தில் சீதா கேரக்டர் போல்டாக இருந்தது. ஆனால் இப்போ எல்லாம் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..? என்று சொல்கிற மாதிரி தான் அடிகளை வாங்கிக் கொண்டிருக்கும் நமத்து போன பட்டாசாக இருக்கிறார்.

    Advertisement

    அடுத்த கல்யாணம்

    சத்யா ரேகாவின் கல்யாண பஞ்சாயத்து ஒரு வழியாக முடிந்ததும், அடுத்ததாக வீட்டிற்கு தெரியாமல் மனோஜ் இரண்டாவது கல்யாணம் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். கனகாவின் அம்மா கல்யாண சாப்பாடை ஸ்ருதி ரெஸ்டாரண்டில் புக் செய்கிறார். அங்கிருந்த மீனாவை கல்யாண டெக்கரேஷனுக்கு ஓகே செய்து விட்டு அவர் கிளம்புகிறார்.

    அப்போது அங்கு வரும் ரோகிணி மீனா மற்றும் ஸ்ருதி இருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஸ்ருதி நீங்க எடுத்த முடிவு நல்லது தான் ஒரு வழியாக நீங்க மனோஜ்க்கு டைவர்ஸ் கொடுத்தது நல்ல முடிவு என்று பாராட்டுகிறார். அதற்கு ரோகிணி, இனிமேல் எனக்கு கிரிஷ் வாழ்க்கை தான் முக்கியம் அந்த அஞ்சு லட்சம் பணத்தை கொடுத்தால் தான் எனக்கு உதவியாக இருக்கும் என்று பீல் பண்ணி சொல்லி கொண்டிருக்கிறார்.

    Advertisement

    சன் டிவி ஹீரோவை கரம் பிடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை.. யூடியூப் காதல்.. எளிமையான எங்கேஜ்மென்ட்
    அப்போது ஸ்ருதி கனகாவின் கல்யாண ஆர்டருக்காக மேக்கப்க்கு ரோகினியை புக் செய்ய செய்கிறார். சினிமாவில் வருவது போல தான் இது மனோஜ் கல்யாண ஏற்பாடு என்று தெரியாமலேயே மொத்த குடும்பமும் அந்த கல்யாணத்திற்கு புக் ஆகி இருக்கிறார்கள். சரி இனி என்ன நடக்கப்போகிறது என்று நாளை பார்க்கலாம்.

    English Summary

    Siragadikka Aasai serial : Will the family get to know the truth about Manoj's thiruttu kalyanam in the 7th July 2026 episode of Siragadikka Aasai serial airing on Vijay TV? Isn't it? It was with the expectation that Manoj's crime rate is increasing day by day more than Rohini if ​​Rohini thought he was Willy. Well, let's take a closer look at what happened.