சிறகடிக்க ஆசை: விபரீத முடிவு எடுத்த மனோஜ்! முத்து கண்டுபிடிக்கும் உண்மை? ரவுண்டு கட்டிய குடும்பத்தினர்


  • சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai Serial July 9th Episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஜூலை 9ஆம் தேதிக்கான எபிசோடில் மனோஜ்க்கு இரண்டாவது கல்யாணம் நடக்கும் இடத்திலேயே மொத்த குடும்பத்தினரும் வந்திருக்கின்றனர். அப்போது எல்லோரும் மனோஜை பார்த்தார்களா? இல்லையா? என்பதுதான் இன்றைய எபிசோடின் சஸ்பென்ஸ். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    சிறகடிக்க ஆசை சீரியலில் பணக்கார பெண்ணை கல்யாணம் பண்ண வேண்டும் என்று ஏற்கனவே ஒருமுறை ரோகிணியிடம் ஏமாந்த மனோஜ் இப்போதும் பணத்துக்கு ஆசைப்பட்டு மனநலம் சரியில்லாத கனகாவை இரண்டாவது கல்யாணம் பண்ணப் போகிறார்.

    Advertisement

    அதுவும் ரோகிணியை விவாகரத்து செய்வதற்கு முன்பே கனகாவை கல்யாணம் பண்ண வேண்டும் என்று அவருடைய அம்மா சொன்னதால் தனக்கு இதுவரைக்கும் சப்போர்ட் செய்து கொண்டிருந்த அம்மா விஜயாவிடம் கூட சொல்லாமல் ரெடியாகி இருந்தார். ஆனால் அதே கல்யாண வீட்டிற்கு மனோஜின் மொத்த குடும்பத்தினரும் வந்திருக்கின்றனர். இனி என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

    சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

    அதாவது இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்துவும் மீனாவும் கல்யாணம் வீட்டில் அலங்கார வேலைகளை தீவிரமாக செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கல்யாண பொண்ணின் அம்மாவிற்கு முத்துவை பார்த்ததும் எதுவும் ஞாபகம் இல்லை. ஆனால் முத்துவிற்கு இந்த அம்மாவை எங்கேயோ பார்த்தது மாதிரி இருக்கே என்று தோன்றுகிறது.

    Advertisement

    முத்து சொன்ன விஷயம்

    உடனே நினைத்து பார்க்கிறார், அப்போதுதான் தன்னுடைய காரில் ஒருநாள் கனகா வரும் போது திடீரென காணாமல் போனது பிறகு முத்து கனகாவை கண்டுபிடித்து கொடுத்த விஷயத்தை நினைத்து பார்த்து அது பற்றி கனகாவின் அம்மாவிடம் சொல்கிறார் உடனே கனகாவின் அம்மாவிற்கும் பழைய விஷயங்கள் ஞாபகத்துக்கு வருகிறது. பிறகு சந்தோஷமாக முத்துவிடம் பேசிவிட்டு உன் தங்கச்சி கல்யாணத்தைப் போல இந்த கல்யாணத்தை நீ தான் நடத்தணும் என்று சொல்லிவிட்டு போகிறார்.

    சன் டிவி ஹீரோவை கரம் பிடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை.. யூடியூப் காதல்.. எளிமையான எங்கேஜ்மென்ட்
    அடுத்ததாக ரவியும், ஸ்ருதியும் கல்யாண வீட்டுக்கு தேவையான சாப்பாட்டை கொண்டு வந்து எல்லோருக்கும் பரிமாற ஏற்பாடு செய்கிறார்கள். மறுபக்கத்தில் ரோகிணியும் அதே வீட்டிற்கு வந்து கல்யாண பொண்ணு கனகாவிற்கு மேக்கப் போட போகிறார். ஆனால் முதலில் மேக்கப் போட முடியாது என்று கனகா ஆர்ப்பாட்டம் செய்கிறார். அப்போது நீ மேக்கப் பண்ணினால் தான் அழகாக இருப்ப என்று சொன்னதும் கனகாவும் மேக்கப் பண்ண ரெடியாகி விடுகிறார்.

    Advertisement

    தப்பித்த மனோஜ்

    அந்த நேரத்தில் மனோஜ் தன்னுடைய பிஏ மற்றும் நண்பரையும் கூட்டிக்கொண்டு கனகா வீட்டிற்கு வருகிறார். வீட்டுக்கு வந்த மனோஜ்க்கு தடபுடலாக வரவேற்பு இருக்கிறது. அதை எல்லாம் பார்த்ததும் மனோஜ் ரொம்ப சந்தோஷப்படுகிறார். பிறகு அவரை ஒரு தனியாக ரூமில் உட்கார வைக்கின்றனர்.

    கல்யாணத்திற்கு முன்பு பல பெண்களுடன் உறவில் இருந்திருக்கிறேன்.. சீரியல் நடிகர் ஓபன் பேச்சு.. வந்தாச்சு விவாதம்
    அந்த நேரத்தில் கனகாவின் அம்மா மாப்பிள்ளைக்கு டீ கொடுக்கவேண்டும் என்று சொன்னதும் முத்து நானே கொடுக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு கனகாவின் அம்மா வேண்டாம் வேற ஒருத்தங்க கெடுக்கட்டும் என்று சொல்கிறார். பிறகு முத்துவும் மீனாவும் அலங்கார வேலை பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் மனோஜின் பிஏ மற்றும் நண்பர் இருவரும் மாடியில் இருந்து கீழே வருகின்றனர். அவர்கள் முத்துவையும் மீனாவையும் பார்த்ததும் அதிர்ச்சியாகி ஓடி சென்று மனோஜிடம் சொல்கின்றார்.

    Advertisement

    நாளை எபிசோடு

    உடனே மனோஜ் பயந்து போய் ஜன்னல் வழியாக மாடியில் இருந்து குதிக்க போகிறார். பிறகு அவரை பிடித்து வைத்துக் கொண்டு எதற்காக இவங்க வந்திருக்காங்கன்னு விசாரிப்போம் என்று பிஏ ஐடியா கொடுக்கிறார். கடைசி வரைக்கும் இன்றைய எபிசோடிலும் மனோஜை யாரும் பார்க்கவில்லை. இதனால் நாளைக்கான எபிசோடில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

    English Summary

    Siragadikka Aasai serial: Siragadikka Aasai serial telecasted on Vijay TV, Manoj's entire family is present at the second wedding venue. Did everyone see Manoj then? Isn't it? That is the suspense of today's episode. Let's see what happened in detail.