சென்னை: விஜய் டிவியின் டாப் TRP சீரியல்களில் ஒன்றான சிறகடிக்க ஆசை சீரியலில், இன்று (Siragadikka Aasai serial june 13th episode update) ஒளிபரப்பான எபிசோடு ரசிகர்களை மகிழ்ச்சியிலும், எதிர்பார்ப்பிலும் ஆழ்த்தியுள்ளது. முத்துவின் உயர்வு, மனோஜின் தடுமாற்றம், விஜயாவின் புதிய கனவு, ரோகிணி வீட்டில் காத்திருக்கும் பிரச்சனை என பல சுவாரஸ்யமான சம்பவங்கள் ஒரே எபிசோடில் அரங்கேறின.
விஜயா வீட்டிற்கு திடீரென ஒரு கூட்டம் வர, வழக்கம்போல அவர்கள் மனோஜைத் தேடி வந்திருப்பார்கள் என பெருமையுடன் நினைக்கிறார் விஜயா. உடனே மனோஜை அழைத்து வருகிறார். ஆனால் வந்தவர்கள், "இவர் இல்லங்க... எங்க முதலாளி முத்து எங்க?" என்று கேட்டதும் விஜயாவின் முகமே மாறிப்போகிறது. அண்ணாமலை அழைத்ததும் வெளியே வரும் முத்துவுக்கு டிரைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். "உங்களை மாதிரி ஒரு முதலாளி கிடைச்சதுக்கு நாங்க கொடுத்து வச்சிருக்கணும்" என்று அவர்கள் கூறும் காட்சி, முத்துவின் மனிதநேயத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியது. தாங்கள் சம்பாதித்த பணத்தை முத்துவிடம் ஒப்படைக்கும் டிரைவர்களுக்கு, முத்து எதிர்பாராத விதமாக போனஸும் வழங்குகிறார். இதைப் பார்த்த ரவி கூட ஆச்சரியப்பட்டு, "வேலைக்கு சேர்ந்த முதல் வாரத்திலேயே போனஸ் கொடுக்கிற முதலாளியை இப்போதான் பார்க்கிறேன்" என்று கூறுகிறார். அதற்கு முத்து சொன்ன பதில் ரசிகர்களை கவர்ந்தது. "நம்ம கிட்ட வேலை பார்க்கிறவங்களை நல்லா பார்த்துக்கிட்டா, அவங்களும் மனசார வேலை செய்வாங்க..." என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார் முத்துவின் புகழை பார்த்த விஜயாவுக்கு புதிய ஆசை பிறக்கிறது. தனது தோழி பார்வதி யூடியூப் மூலம் பிரபலமாகி இருப்பதை பார்த்து, "நானும் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சா என்ன?" என்று யோசிக்கிறார். பின்னர் ஸ்ருதியிடம் யூடியூப் மூலம் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்று கேட்க, முத்து வழக்கம்போல கலாய்த்து, "வீடியோ பார்த்தவங்க ஒவ்வொருத்தரும் வீட்டுக்கு வந்து காசு கொடுப்பாங்க" என சொல்லி கிண்டலடிக்கிறார். ஆனால் ஸ்ருதியும் மீனாவும் விஜயாவுக்கு உண்மையாகவே அட்வைஸ் கொடுக்கிறார்கள். குறிப்பாக, விஜயாவின் நடனத் திறமையை வைத்து டான்ஸ் வீடியோக்கள் அல்லது டான்ஸ் கற்றுக்கொடுக்கும் சேனல் தொடங்கலாம் என கூறுவது புதிய டிராக்குக்கு வழிவகுத்துள்ளது. ஒருபுறம் முத்து வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்க, மறுபுறம் மனோஜின் தொழில் இன்னும் தடுமாறிக் கொண்டே இருக்கிறது. மனோஜின் நண்பர் சந்தோஷ், "டீலருக்கு பணம் கொடுத்தால் தான் பொருள் கிடைக்கும்" என்று சொல்ல வர, மனோஜின் நிலையை பார்த்து விஜயா வருத்தப்படுகிறார். ஆனால் அந்த வருத்தம் ஊக்கமாக மாறி... "நீ அந்த முத்துவை விட பெரிய ஆளா வளர்ந்து காட்டணும்!" என்று மனோஜிடம் சவால் விடுகிறார். இந்த வசனம் அடுத்த சில எபிசோடுகளில் முத்து - மனோஜ் இடையே புதிய போட்டியை உருவாக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. எபிசோடின் இறுதியில் முக்கியமான திருப்பம் அரங்கேறுகிறது. கோர்ட் உத்தரவின்படி ரோகிணிக்கு மாதந்தோறும் கொடுக்க வேண்டிய 25 ஆயிரம் ரூபாயை கொடுக்க மனோஜ் தயாராகிறார். அதற்காக நேரடியாக ரோகிணி வீட்டிற்கே செல்ல முடிவு செய்கிறார். ஆனால் ரசிகர்களுக்கு தெரியும்... ரோகிணி வீட்டில் எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனை காத்திருக்கும்! இந்நிலையில் மனோஜின் இந்த வருகை புதிய சண்டையா? சமாதானமா? அல்லது மீண்டும் ஒரு அவமானமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். முத்துவின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மனோஜின் வாழ்க்கை இன்னும் சிக்கலில் சிக்கிக் கொண்டே செல்கிறது. இதற்கிடையில் விஜயாவின் யூடியூப் கனவு, ரோகிணி - மனோஜ் சந்திப்பு, முத்துவை மிஞ்ச வேண்டும் என்ற மனோஜின் ஆசை ஆகியவை அடுத்த வார எபிசோடுகளின் முக்கிய கதைக்களமாக மாறப்போகின்றன.சிறக்கடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
முத்து செய்த செயல்
யூடியூப் ஸ்டாராக மாறப் போகிறாரா விஜயா?
7 மாதங்கள் கோமா... மனைவியை இழந்த வலி.. இப்போ நிலைமை இதுதான்! சீரியல் நடிகர் பரத் கல்யாண் உருக்கம்!
மனோஜை தூண்டும் விஜயா
ரோகிணி வீட்டுக்கு கிளம்பிய மனோஜ்
ஒரே ப்ரமோவின் ஜீ தமிழின் மொத்த சீரியல் கதையும் ரிவில்.. கங்கா தேவியாக மிரட்டிய ராதிகா தான் அல்டிமேட்
அடுத்த எபிசோடில் என்ன?