சென்னை: சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த சில வாரங்களாக ரசிகர்களை அதிகம் பதற்றத்தில் வைத்திருக்கும் விஷயம் விஜயாவின் வீடு ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் தான். சிந்தாமணி வைத்த சீலால் வீடே கையை விட்டு போன நிலையில், விஜயா குடும்பம் தற்போது மீனாவின் அம்மா வீட்டில் தங்கி இருக்கிறது. இந்த நிலையில் 2026 ஜுன் 2ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்று விரிவாக. பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில், வீட்டை எப்படியாவது மீட்க வேண்டும் என்ற வெறியோடு போராடி வருகிறார் முத்து. குடும்பத்தில் மற்றவர்கள் எல்லோரும் நம்பிக்கையை இழந்த நேரத்தில் கூட, "நான் வீட்டை மீட்டே தீருவேன்" என்று உறுதியாக களத்தில் இறங்கியிருந்தார். அதற்காக தனது பழைய ஓனரிடம் இருந்த பழுதடைந்த கார்களை எல்லாம் சரிசெய்து, புதிது போல மாற்றும் வேலையில் இரவு பகலாக உழைத்து வந்தார். அந்த உழைப்புக்கு தற்போது பலன் கிடைக்க தொடங்கியுள்ளது. இன்றைய எபிசோடில், (Siragadikka Aasai serial june 2nd episode) முத்து சரிசெய்த கார்களை பார்த்த அவரது பழைய ஓனர் ஆச்சரியத்தில் உறைந்து போகிறார். அதுமட்டுமல்லாமல், ஆரம்பத்தில் முத்துவுக்கு பணம் கொடுக்க மறுத்த பைனான்சியரையும் நேரடியாக அழைத்து வருகிறார். கார்களின் தரத்தை பார்த்த பைனான்சியரும் இறுதியில் சில நிபந்தனைகளுடன் பணம் கொடுக்க சம்மதம் தெரிவிக்கிறார். இதனால் முத்துவின் முகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நிம்மதி தெரிகிறது. வீடு மீண்டும் கைக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் குடும்பத்தினரிடமும் இந்த நல்ல செய்தியை பகிர்ந்து கொள்கிறார். விஜயாவும் சந்தோஷத்தில் திளைத்து, உடனடியாக மனோஜுக்கு போன் செய்து இந்த தகவலை தெரிவிக்கிறார். ஆனால் அங்கேதான் கதையில் புதிய திருப்பம் காத்திருந்தது. விஜயா கூறிய தகவலை கேட்ட மனோஜ், அதை ரகசியமாக வைத்திருக்காமல் ரோகிணியிடம் சொல்லிவிடுகிறார். சிசிடிவியை கூட ஆஃப் செய்துவிட்டு தனியாக பேசும் மனோஜ், "முத்து வீட்டை மீட்க தேவையான பணத்தை ரெடி பண்ணிட்டான்" என்று கூறிவிடுகிறார். இதைக் கேட்டதும் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். ஏனென்றால் விஜயா குடும்பம் மீண்டும் அந்த வீட்டுக்குள் சென்றுவிட்டால், மனோஜுக்கு வேறு பெண் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் என்பது அவருடைய பயம். உடனடியாக சிந்தாமணியை சந்திக்கும் ரோகிணி, முத்து பணத்தை ரெடி செய்த விஷயத்தை சொல்லிவிடுகிறார். "என்ன பண்ணுவீங்களோ தெரியாது ஆன்ட்டி... அந்த குடும்பம் திரும்ப அந்த வீட்டுக்குப் போகக் கூடாது. அவங்க மீனா வீட்டிலேயே இருக்கணும்" என்று வெளிப்படையாக சொல்கிறார். ரோகிணியின் இந்த பேச்சை கேட்ட சிந்தாமணி வெளியில் அமைதியாக இருந்தாலும், உள்ளுக்குள் வேறு கணக்கு போடுகிறார். "இவளை மனோஜோட சேர்த்து வைக்கத்தான் நான் இதெல்லாம் பண்ணேன்னா?" என்று மனதிற்குள் சிரித்துக்கொள்ளும் சிந்தாமணி, அடுத்த சதிக்கான திட்டத்தை தீட்ட தொடங்குகிறார். இதுவரை முத்துவின் பிரச்சனை பணம் மட்டும்தான் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் இப்போது பணத்தை ரெடி செய்த பிறகும் வீடு கைக்கு வருமா என்ற புதிய கேள்வி எழுந்திருக்கிறது. ஏனென்றால் சிந்தாமணி ஏற்கனவே வீட்டை ஜப்தி செய்தவர். இப்போது முத்து பணத்தை ஏற்பாடு செய்துவிட்டார் என்பது தெரிந்த பிறகு, அதை தடுக்க அவர் என்ன செய்யப் போகிறார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. ஒருபுறம் முத்துவின் போராட்டம்... மறுபுறம் ரோகிணியின் பயம்... அதற்கும் மேலாக சிந்தாமணியின் அடுத்த சதி... இந்த மூன்று விஷயங்களும் சேர்ந்து சிறகடிக்க ஆசை சீரியலை மீண்டும் பரபரப்பான கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. முத்து எவ்வளவு உழைத்து பணத்தை ரெடி செய்தாலும், சிந்தாமணி போடப்போகும் அடுத்த பிளான் என்ன என்பதுதான் இனி வரும் எபிசோடுகளின் மிகப்பெரிய சஸ்பென்ஸாக இருக்கிறது.சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
முத்துவுக்கு அடித்த ஜாக்பாட்
மனோஜின் ஒரு தவறு
இன்ஸ்ட்டா பிரபலம் நாகலட்சுமி மரணம் பலருக்கு பாடம்.. சீரியல் நடிகை ரிஹானா ஆதங்கம்
ரோகிணி நேரடியாக களத்தில்
முத்துவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி?