சென்னை: விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் காதல், குடும்பம், பழிவாங்குதல் என அடுத்தடுத்த திருப்பங்கள் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்து நிறுத்தி வருகின்றன. இன்றைய (Siragadikka Aasai serial june 9th episode) ஜூன் 9ஆம் தேதிக்கான எபிசோடில் சத்யா - ரேகா காதல் விவகாரம் புதிய சிக்கலில் சிக்கியதோடு, சிந்தாமணி போட்டிருக்கும் மாஸ்டர் பிளான் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரேகாவை காதலிக்கும் சத்யா, தனது காதல் விஷயம் ரேகாவின் வீட்டுக்கு தெரிந்துவிட்டதால் அவளை ஐதராபாத்தில் ஹவுஸ் அரெஸ்ட் செய்து வைத்திருப்பதாக முத்துவிடம் கூறுகிறார். இதைக் கேட்ட முத்து, வழக்கம்போல் பிரச்சனையை விட்டு ஒதுங்காமல் நேரடியாக தீர்வு காண முடிவு செய்கிறார். "பயந்து ஒளிஞ்சிக்கிட்டே இருந்தா காதல் ஜெயிக்காது. நேரா போய் அவங்க அப்பாவிடம் பேசு" என்று சத்யாவுக்கு தைரியம் கொடுத்ததோடு, அவருடன் சேர்ந்து ரேகாவின் அப்பாவை நேரில் சந்திக்கவும் செல்கிறார். அங்கு சத்யா தனது காதலை வெளிப்படையாக கூற, அதற்கு, "எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் வேணும்" என்று ரேகாவின் அப்பா சொல்கிறார். இதனால் ஒரு நம்பிக்கை பிறந்தது போல தோன்றினாலும், பின்னணியில் வேறு ஒரு ஆபத்தான திட்டம் உருவாகிக் கொண்டிருந்தது. மறுபுறம் மனோஜை ரோகிணி ஒரு விருது வாங்கும் நிகழ்ச்சிக்கு வர சொல்லி இருக்கிறார் ஆனால் அங்கு மனோஜ் தன்னுடைய அம்மா விஜயாவுடன் வந்து நிற்கிறார் அதை பார்த்ததும் ரோகிணி ஷாக் ஆகிறார். அதுபோல ரோகிணியை பார்த்ததும் விஜயாவும் கோபப்படுகிறார் பிறகு அந்த நிகழ்ச்சியில்சிறந்த அம்மா - மகன் விருது மனோஜ் மற்றும் விஜயாவுக்கு வழங்கப்படுகிறது. இதுவரை எல்லாம் நன்றாக சென்ற நிலையில், சிறந்த ஜோடிக்கான போட்டியில் மனோஜ் - ரோகிணி பெயரை ரோகிணி பதிவு செய்திருப்பது தெரிய வருகிறது. அதைக் கேட்டதும் கொதித்தெழுந்த விஜயா, "அவன் உன்னோட ஜோடியா வரமாட்டான்" என்று கூறி மனோஜை கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார். மீண்டும் ஒரு முறை ரோகிணியின் திட்டம் பிளாப் ஆனதால் அவர் முகத்தில் ஏமாற்றம் தெரிகிறது. வீட்டுக்கு வந்த முத்து, அன்று நடந்த விஷயங்களை மீனாவிடம் கேட்கிறார். மீனா எல்லாவற்றையும் சொல்கிறார். ஆனால் சத்யாவை சந்தித்து திட்டிய விஷயத்தை மட்டும் மறைத்து விடுகிறார். ஆனால் அடுத்த நொடியே முத்து, "நான் இன்று சத்யாவோட சேர்ந்து ரேகா அப்பாவை பார்த்துட்டு வந்தேன்" என்று சொல்ல, மீனா அதிர்ச்சியில் உறைந்து போகிறார். அப்போது தான் சத்யாவை சந்தித்து காதலை மறந்துவிடும்படி கூறிய விஷயம் வெளிச்சத்துக்கு வருகிறது. "அவங்க பெரிய இடம். நமக்கு செட் ஆகாது. அதனால தான் நான் அவனை சமாதானப்படுத்த முயற்சி பண்ணேன்" என்று மீனா கூற, முத்து ரேகாவின் அப்பா யோசிக்க நேரம் கேட்ட விஷயத்தையும் தெரிவிக்கிறார். இந்நிலையில் கதையின் மிகப்பெரிய ட்விஸ்ட் சிந்தாமணி பக்கம் நடக்கிறது. ரேகாவின் அப்பா கோபத்தில், "அந்த சத்யாவை உடனே வேலையிலிருந்து தூக்கிடுறேன்" என்று கூறுகிறார். ஆனால் அப்போது சிந்தாமணி போட்ட திட்டம் தான் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. "இப்பவே அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீங்க. முதல்ல ரேகாவை ஐதராபாத்திலிருந்து சென்னை வரவழைங்க. வீட்டுக்குள்ள அடைச்சி வைங்க. போன் எல்லாம் பறிச்சிடுங்க. அதுக்கப்புறம் சத்யா நம்ம பொண்ணை கடத்திட்டான்னு போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுப்போம்" என்று விஷமமான யோசனையை கூறுகிறார். அதோடு மட்டும் நிற்காமல், "போலீஸ் அவனை கைது பண்ணி சாத்துவாங்க. அவனோட குடும்பமே பயந்து போய் இந்த காதலை நிறுத்தச் சொல்லும்" என முழு பிளானையும் விவரிக்கிறார். ரேகாவை காப்பாற்ற போராடும் சத்யாவுக்கு தெரியாமலேயே பின்னால் மிகப்பெரிய வலை விரிக்கப்பட்டு வருகிறது. ரேகாவை வைத்து சத்யாவை குற்றவாளியாக மாற்ற சிந்தாமணி தயாராகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்து மற்றும் மீனா இந்த சதியை எப்படி முறியடிப்பார்கள்? ரேகா உண்மையை வெளியில் சொல்ல முடியுமா? சத்யா உண்மையிலேயே போலீஸ் சிக்கலில் சிக்கப் போகிறாரா? என்ற பல கேள்விகளுடன் அடுத்த எபிசோடுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஒருபுறம் ரோகிணியின் தோல்வி... மறுபுறம் சிந்தாமணியின் கொடூர சதி... சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் மோடுக்கு மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.காதலுக்காக நேராக களம் இறங்கிய முத்து
ரோகிணியின் திட்டம் மீண்டும் தோல்வி
முத்துவிடம் மாட்டிக்கொண்ட மீனா
திருப்பத்தை ஏற்படுத்திய சிந்தாமணி
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த சிறகடிக்க ஆசை ரோகிணி.. இனி ஆட்டம் ஆரம்பம்! என்ன கேரக்டர் தெரியுமா?
சத்யாவுக்கு காத்திருக்கும் ஆபத்து?