சிறகடிக்க ஆசை: முத்து கண்டுபிடித்த உண்மை.. அதிர்ச்சியில் விஜயா.. இனிதான் ஆட்டம் ஆரம்பம்


  • சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial May 18th episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மே 18ஆம் தேதிக்கான எபிசோடில் சிந்தாமணி செய்த சதி எல்லாமே முத்துக்கு தெரிய வருகிறது. அதே நேரத்தில் விஜயாவிற்கும் சில அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிகிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

    சிறகடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai serial ) இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயாவிற்கு மனோஜின் விவாகரத்து வழக்கை நடத்திக் கொண்டிருக்கும் வக்கீல் போன் செய்து மனோஜ் ரோகிணி இருவரும் ஷோருமில் ஒன்றாக இருந்த விஷயத்தை போட்டுக் கொடுத்து விடுகிறார். இதனால் விஜயா கோபத்தில் மனோஜின் ஷோரூமுக்கு வருகிறார்.

    Advertisement

    "ரோகிணி எப்போ இங்க வந்தா?" என்று மனோஜிடம் கேட்கிறார். இந்த கேள்வியால் மனோஜ் அதிர்ச்சியடைகிறார். அதன்பிறகு விஜயா தொடர்ந்து, "அவ எதுக்கு இங்க வந்தா?" என்று மீண்டும் மீண்டும் கேட்டு துருவி விசாரிக்கிறார். அந்த நேரத்தில் அருகில் இருந்த சந்தோஷ் சூழ்நிலையை சமாளிக்க முயற்சிக்கிறார். "அவ எலி பிடிக்கத்தான் இங்க வந்தா" என்று விஷயத்தை மாற்ற முயல்கிறார்.

    அதோடு, "எலி பிடிக்க ரோகிணி ஒரு பூனை வாங்கி வந்தா. ஆனா இப்போ அந்த பூனை எலியோடே ஃபிரெண்ட் ஆகிடுச்சு" என்றும் கூறுகிறார். இதைக் கேட்ட விஜயா, "அந்த பூனை எங்கே? அதை பிடித்துக்கொண்டு வா" என்று சொல்கிறார். பிறகு கோபமாக, "அவ கொண்டு வந்த எந்த பொருளும் இங்க இருக்கக் கூடாது. உடனே அதை வெளியே கொண்டு போ" என்று கூறுகிறார்.

    Advertisement

    கோபத்தில் விஜயா

    இதற்குப் பிறகு விஜயா இன்னொரு விஷயத்தை கேட்கிறார். "இனிமே ரோகிணி இங்க வர்றாளா இல்லையா என்பதை நான் எப்படி தெரிஞ்சுக்கணும்?" என்று கேட்கிறார். அதற்கு ஜீவா, "இங்க சிசிடிவி இருக்கு. அதை உங்க போனோட கனெக்ட் பண்ணிட்டா, நீங்க எங்க இருந்தாலும் இங்க என்ன நடக்குது என்று பார்க்கலாம்" என்று சொல்கிறார்.

    அதைக் கேட்ட விஜயா, "எனக்கு உடனே அந்த கனெக்ஷன் வேணும்" என்று கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் மனோஜிடம், "இனிமே அந்த ரோகிணி கூட நீ பேசவே கூடாது" என்று கண்டிஷனும் போடுகிறார்.

    Advertisement

    மறுபக்கத்தில், முத்துவும் மீனாவும் தங்களுடைய ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் நண்பரான வருமான வரித்துறை அதிகாரியை கூட்டிக்கொண்டு பைனான்சியரை விசாரிக்கப் போகின்றனர். அங்கு சென்றதும், "பைனான்சியரை பார்க்க 3 மணி நேரம் காத்திருக்க வேண்டும்" என்று அங்கிருந்த ஊழியர் கூறுகிறார்.

    நண்பரின் உதவி

    அப்போது முத்து அழைத்து வந்த வருமான வரித்துறை அதிகாரி தன்னை அறிமுகப்படுத்துகிறார். அவர் யார் என்று தெரிந்ததும், உடனடியாக பைனான்சியரை அழைக்கிறார்கள். பைனான்சியரும் வந்து, "உள்ளே வாங்க சார்" என்று அதிகாரியை உள்ளே அழைத்துச் செல்கிறார். முத்துவும் மீனாவும் அவர்களுடன் செல்கிறார்கள்.

    உள்ளே சென்றதும் வருமான வரித்துறை அதிகாரி, "இவங்க வீட்டை திருப்பி எடுக்க அவகாசம் கொடுக்காமல் ஏன் உடனே நோட்டீஸ் அனுப்பி ஜப்தி பண்ணீங்க?" என்று கேட்கிறார்.

    Advertisement

    பைனான்சியர் ஆரம்பத்தில் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். அதற்கு அதிகாரி, "நீங்க பதில் சொல்லலேனா, என்னோட டீமோட வந்து உங்க ஆபிஸ்ல ஐடி ரெய்டு நடத்துவேன்" என்று மிரட்டுகிறார்.

    இதற்குப் பிறகு பைனான்சியர் உண்மையை சொல்கிறார். "இவங்களுக்கு நான் பணம் கொடுக்கல. என்னை பணம் கொடுக்க வைத்தது சிந்தாமணி தான்" என்று கூறுகிறார். அதன்பிறகு அதிகாரி, "அவங்க ஏன் உங்க மூலமா பணம் கொடுத்தாங்க?" என்று கேட்கிறார்.

    விஜயா சொன்ன விஷயம்

    அதற்கு பைனான்சியர், "விஜயா சிந்தாமணியின் ஃப்ரெண்ட். அவங்களே நேரடியாக பணம் கொடுத்தா அதை திருப்பி வாங்க முடியாது. அதனால என் மூலமா கொடுத்தாங்க" என்று சொல்கிறார். பிறகு அந்த அதிகாரி சிந்தாமணிக்கு போன் செய்து பேசச் சொல்கிறார். போனில் பேசும் சிந்தாமணி, எந்த பயமும் இல்லாமல், "யார் வேண்டுமானாலும் வரட்டும். எல்லா டாக்குமெண்ட்டும் பக்காவா இருக்கு. எனக்கு பணம் திரும்ப வந்தா தான் நான் விஜயா வீட்டில் இருக்கும் சீலை எடுக்க சம்மதிப்பேன்" என்று கூறுகிறார்.

    Advertisement

    பிறகு அந்த அதிகாரி முத்துவை தனியாக கூப்பிட்டு சிந்தாமணியிடம் எல்லா டாக்குமெண்ட்டும் சரியாக வைத்திருப்பார்... அதனால் தான் இவ்வளவு திமிரா பேசுறாங்க அதனால நாம எங்க வழியில் போனால் சரிப்பட்டு வராது. அவங்க கிட்ட இருக்கிற உங்க பத்திரத்தை வாங்குவதற்கு வேற பிளான் போடணும் என்று சொல்கிறார். முத்துவும் சரி நான் வேற யோசிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

    English Summary

    The latest episode of Siragadikka Aasai brings major drama as Vijayaa learns that Manoj and Rohini were seen together at the showroom, leaving her furious and suspicious. Meanwhile, Muthu, along with Meena and an income tax officer friend, confronts the financier over the house seizure issue. In a shocking twist, the financier reveals that Chinthamani was the mastermind behind the loan arrangement, using him as a middleman because Vijayaa was her friend. However, with all documents legally secured, Muthu now realizes he must come up with a smarter plan to save the family house, setting the stage for bigger drama ahead.