சிறகடிக்க ஆசை: ரவி தூக்கி போட்ட குண்டு.. விஜயா சிந்தாமணி செம சண்டை.. மீனாவுக்கு புது பிரச்சனை


  • சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறக்கடிக்க ஆசை சீரியலில் 2026 மே இருபதாம் தேதிக்கான எபிசோடில் விஜயா சிந்தாமணியின் வீட்டிற்கு சென்று அவருக்கு சாபம் கொடுத்து சண்டை போட்டு இருக்கிறார். அதே நேரத்தில் ரவிக்கு புது பிரச்சனை வருகிறது. இதனால் இனி என்ன நடக்கப்போகிறது என்று விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

    சிறகடிக்க ஆசை சீரியலில், விஜயாவின் வீடு சீல் வைக்க காரணமே சிந்தாமணி தான் அவர்போட்ட நாடகத்தில் தான் பைனான்சியர் இப்படி செய்தார் என்று உண்மையை முத்துவும் மீனாவும் விஜயாவிடம் சொல்லி இருக்கின்றனர். இதனால் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயா பார்வதியை கூட்டிக்கொண்டு சிந்தாமணி வீட்டிற்கு போகிறார்.

    Advertisement

    அங்கே சிந்தாமணி இவர்களை பார்த்ததும் எதுவுமே நடக்காதது போல, வாங்க மாஸ்டர் டீ குடிக்கலாம் என்று கரிசனையோடு கேட்க அதனால் கடுப்பான விஜயா சிந்தாமணியை போட்டு திட்டுகிறார். உன்னை போய் நல்லவானு நினைத்தேன், ஆனா நீ இப்படி என்கிட்ட நாடகம் போட்டு ஏமாத்திருக்கியே... உனக்கு நான் என்ன பாவம் பண்ணுனேன் என்று கோபப்பட சிந்தாமணி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.

    விஜயா சிந்தாமணி சண்டை

    அப்போது பார்வதியும் விஜயாவிற்கு ஆதரவாக சிந்தாமணி உடன் சண்டை போடுகிறார். இதனால் சிந்தாமணி கோபமாகி நீங்க தெரியாம பேசாதீங்க உங்க கிட்ட என்னுடைய பணம் என்று சொன்னா வராது அதனாலதான் நான் பைனான்ஸியர் பணம்னு சொன்னேன். இது எல்லாரும் பண்றதுதான்.

    Advertisement

    நான் ஒன்னும் உங்களை ஏமாத்தல, நீ இவ்வளவு பேசுறவ பணத்தை கொடுத்துட்டு வீட்டை திருப்பிட்டு போ என்று திமிராக பேச, அதற்கு கடுப்பான விஜயா நீ இவ்வளவு ஏமாற்று வேலையும் செய்வது உன் மகளுக்கு தானே உன் மக நல்லாவே இருக்க மாட்டா.. அந்த மகளால் தான் உனக்கு பிரச்சனை வரப்போகுது. அவளால் உனக்கு அழிவு வரும். அப்போ நீ தனியாக நின்னு அழுதுட்டு இருப்ப என்று சாபம் கொடுக்கிறார்.

    அதிர்ச்சியில் சிந்தாமணி

    இதனால் சிந்தாமணி அதிர்ச்சியில் நிற்கிறார். பிறகு அங்கிருந்து விஜயா போய் விடுகிறார். மறுபக்கத்தில் ரவியும் ஸ்ருதியும் வீட்டு கடனை அடைக்க என்ன பண்ணலாம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் ஸ்ருதியின் அப்பா அவர்களை மாடியில் இருந்து கீழ வரச் சொல்லி பேசுகிறார். அப்போது ரவியிடம் நான் உங்களை என்னுடைய மருமகனாக பார்க்கல, மகனாக தான் பாக்குறேன்.

    Advertisement

    இப்போ உங்க வீடு பிரச்சனை இருக்கிறதால நான் ஒரு பத்து லட்சம் தருகிறேன் ஆனால் நீங்க என்னுடைய மகளுடன் இந்த வீட்டில் தான் அதற்குப் பிறகு இருக்கணும் என்று சொன்னதும் ரவிக்கு கோபம் வருகிறது. என்னை விலை கொடுத்து வாங்க பார்க்கிறீர்களா? அது நடக்காது என்று திட்டி விட்டு போகிறார். பிறகு ஸ்ருதி ரவியிடம் நாம அப்பா கொடுக்கிற பணத்தை வாங்கி கொள்ளுவோம், அந்த பணத்தை நாம் அவரிடம் கொடுக்கிற வரைக்கும் இந்த வீட்டில் இருப்போம். பிறகு பணத்தை கொடுத்தது வீட்டை விட்டு போயிடலாம் என்று சொல்கிறார்.

    Advertisement

    குழப்பத்தில் ரவி

    இதனால் ரவி குழப்பத்திலேயே இருக்கிறார். மறுபக்கத்தில் முத்து வீட்டில் நடந்த பிரச்சனைகளைப் பற்றி விஜயா அண்ணாமலையிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது சோகமாக ரவி வர, ரவியை பார்த்ததும் விஜயா என்னாச்சுடா உடம்பு சரியில்லையா என்று விசாரிக்கிறார். ஆனால் ரவி ஒன்னும் இல்ல என்று சமாளிக்கிறார்.

    பிறகு ஸ்ருதி அப்பா 10 லட்சம் பணம் தரேன் என்று சொன்ன விஷயத்தை சொல்ல, விஜயா பணத்தை வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே என்று சொல்கிறார். ஆனால் அண்ணாமலை அவர் சும்மா சொல்ல மாட்டாரே இதுல ஏதோ ஒரு உள்குத்து வச்சிருப்பாரு என்று சொன்னதும் ரவி ஆமா அப்பா, என்னை அவருடைய வீட்டிலேயே வீட்டோட மாப்பிள்ளை இருக்க சொல்லுறாரு என்று சொல்கிறார்.

    Advertisement

    கோபத்தில் விஜயா

    உடனே விஜயா அதெல்லாம் பண்ண முடியாது. என் பையனை கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் வீட்டோட மாப்பிள்ளையாக அனுப்ப மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது முத்து எல்லாரும் சுயநலமா தான் யோசிக்கிறாங்க நமக்கு இருக்கிற பிரச்சனையை வைத்து அவங்களுக்கு ஆதாயம் தேடிக் கொள்ள நினைக்கிறார்கள் என்று சொல்கிறார்.

    அதற்கு விஜயா உன் பொண்டாட்டியும் தான் சுயநலமா யோசிக்கிறார் என்று சொல்கிறார். அவா எப்போ அப்படி நினைச்சா என்று முத்து கேட்க, அதற்கு விஜயா, அதான் அந்த சிந்தாமணி இவ பதவியை ரிசைன் பண்ணுனா வீட்டு சீல் வைத்ததை எடுக்க சொல்லிடுறேன்னு சொல்லி இருக்காலே அப்போ அவ பதவியை ரிசைன் பண்ண வேண்டியதுதானே? அப்போ அவளுக்கு வீட்டைவிட அவ பதவி தானே முக்கியமா இருக்கு என்று விஜயா சொல்ல, முத்துவும் மீனாவும் கோபமாகி விஜயாவை முறைத்துக் கொண்டு இருக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

    English Summary

    Siragadikka Aasai serial Today Episode: In the latest episode of Siragadikka Aasai, Vijayaa finally learns that Chinthamani was behind the financial trap that led to her house being sealed. Furious, she confronts Chinthamani directly, leading to a heated argument and even curses her over her daughter. Meanwhile, Ravi faces a fresh dilemma when Sruthi’s father offers ₹10 lakh to help with the family’s financial crisis—but with the condition that Ravi must stay as a resident son-in-law in his house. Ravi strongly rejects the idea, creating further tension. Later, when the issue is discussed at home, Vijayaa unexpectedly blames Meena for not resigning from her position to solve the house issue, triggering anger from Muthu and Meena. The episode ends with relationships growing more strained on multiple fronts.