சிறகடிக்க ஆசை: வீட்டுக்காக மீனாவை பலி கேட்கும் விஜயா! ரோகிணிக்கு நேர்ந்த அவமானம்! அண்ணாமலையால் பரபரப்பு


  • சென்னை: விஜய் டிவியின் ஹிட் சீரியலான சிறகடிக்க ஆசை சீரியலில் மீண்டும் பரபரப்பான திருப்பத்தால் ரசிகர்களை பேச வைத்திருக்கிறது. ஏற்கனவே வீடு ஜப்தி செய்யப்பட்ட பிரச்சனையால் குடும்பமே நெருக்கடியில் இருக்கும் நிலையில், இப்போது ஒரே வீட்டுக்குள் புதிய மோதல்கள் வெடித்திருக்கின்றன.

    Advertisement

    சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

    (Siragadikka Aasai serial today episode) இன்றைய எபிசோடில், வீட்டை மீட்கும் விஷயத்தில் மீனாவையே மீண்டும் குறிவைக்கிறார் விஜயா. சிந்தாமணி வைத்த டீலிங்கை நினைவுபடுத்தி, "தலைவி பதவியை ராஜினாமா பண்ணிட்டா வீட்டுக்கு வைத்த சீலை எடுக்கலாம்னு சொல்லியிருக்காங்க... அப்போ ஏன் இன்னும் பதவியில இருக்க?" என்று மீனாவை நேரடியாக கேள்வி கேட்கிறார். அதோடு, "உனக்கு இந்த வீட்டு பிரச்சனையை விட அந்த பதவிதான் முக்கியமா?" என்று அழுத்தமும் கொடுக்கிறார்.

    Advertisement

    அண்ணாமலை பதிலடி

    ஆனால் இந்த முறை அண்ணாமலை நேராக விஜயாவுக்கு பதில் கொடுக்கிறார். "மீனா எதற்காக பதவியை விட்டுக் கொடுக்கணும்? மக்கள் நம்பி ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்திருக்காங்க. எந்த சூழ்நிலையிலும் அந்த பதவியை ராஜினாமா பண்ணக்கூடாது" என்று உறுதியாக சொல்கிறார். அதோடு மனோஜ் செய்த தவறை நினைவுபடுத்தி, "இந்த கேள்வியை உன் பையன் கிட்ட கேட்கணும்" என்று விஜயாவை ஆஃப் பண்ணுகிறார். வழக்கம்போல கோபப்பட்டு போகாமல் உருப்படியாக இன்னைக்கு தான் அண்ணாமலை பேசியிருக்கிறார்.

    ரவிக்கு சிக்கல்

    மறுபுறம் ரவிக்கும் புதிய சிக்கல். வீட்டு பிரச்சனையை தீர்க்க 10 லட்சம் தர தயாராக இருக்கும் ஸ்ருதியின் அப்பா, அதற்குப் பதிலாக ரவி இனிமேல் வீட்டோட மாப்பிள்ளையாக தங்களுடனே இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார். இதைக் கேட்டு கடுப்பான ரவி மறுக்கிறார்.

    Advertisement

    இதற்கிடையில் விஜயாவின் இன்னொரு முகமும் வெளிவருகிறது. மீனாவின் அம்மா தங்களுக்காக சிரமப்படுவதை பார்த்ததும் கொஞ்சம் மனம் மாறும் போல தெரிகிறது. புது வீட்டில் அவ்வளவு வசதி இருந்தும் தனக்காக அவர்கள் எதையும் செய்யவில்லை அதனால் மீனா வீட்டில் தனக்காக இவ்வளவு பார்த்து பார்த்து செய்கிறார்களே என்று புரிந்து கொள்கிறார். ஆனால் episode முடிவில் மீண்டும் பழைய விஜயா திரும்பிவிடுகிறார்.

    ரோகிணிக்கு அவமானம்

    ஏனென்றால் மனோஜ் ஷோரூமுக்கு ரோகிணி வந்திருப்பதை சிசிடிவி மூலம் பார்த்த விஜயா, வீட்டிலிருந்தபடியே speaker-ல் ரோகிணியை அவமானப்படுத்துகிறார். "ஏய் ஃபிராடு... இங்க ஏன் வந்த?" என்று திட்ட, ஷோரூமில் இருந்த அனைவரும் கேட்டு ரோகிணி கண்ணீர் விடுகிறார்.

    Advertisement

    முத்துக்கு பிரச்சனை

    இதற்கிடையில் வீட்டை மீட்க சட்ட வழியில் செல்லும் முத்து, 10 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டிய சூழ்நிலையில் சிக்குகிறார். அடுத்த எபிசோடில் முத்து என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதே பெரிய கேள்வியாகியுள்ளது.

    English Summary

    Siragadikka Aasai serial today episode: The latest episode of Siragadikka Aasai delivers intense family drama as Vijayaa once again targets Meena over the house seizure issue. She pressures Meena to resign from her leadership position, arguing that the family home could be recovered if she steps down. However, Annamalai strongly opposes the idea, reminding everyone that Meena earned her post through public trust and should not sacrifice it. Meanwhile, Ravi faces a fresh dilemma when Sruthi’s father offers ₹10 lakh to help the family—but only if Ravi agrees to become a live-in son-in-law. In another dramatic moment, Vijayaa publicly humiliates Rohini through a speaker call after spotting her at Manoj’s showroom via CCTV, leaving Rohini in tears. The episode ends with Muthu facing a major legal hurdle, needing ₹10 lakh as deposit to proceed with efforts to recover the house.