சிறகடிக்க ஆசையில் பரபரப்பு! கிரிஷால் ரோகிணிக்கு சிக்கல்… வீட்டுக்காக உயிரையே பணயம் வைக்கும் முத்து!


  • சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தினமும் குடும்ப சண்டை, எமோஷனல், அதிரடி திருப்பங்கள் என ரசிகர்களை பரபரப்பில் வைத்திருக்கிறது. குறிப்பாக விஜயாவின் செயல்கள் ஒவ்வொரு நாளும் ரசிகர்களை கடுப்பேற்றிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடு முழுக்க முழுக்க சண்டை, அவமானம், தியாகம் என பரபரப்பாக நகர்ந்துள்ளது.

    Advertisement

    ஏற்கனவே வீடு ஜப்தி செய்யப்பட்டதால் குடும்பமே பெரிய பிரச்சனையில் சிக்கியிருக்கிறது. அந்த வீட்டை எப்படியாவது மீட்டே ஆக வேண்டும் என்று முத்துவும் மீனாவும் ஓடி ஓடி முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதற்கிடையிலும் விஜயா தன்னுடைய வழக்கமான கேரக்டரை மாற்றாமல் மீனாவையே குற்றவாளியாக பார்க்கிறார்.

    Advertisement

    சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

    இன்றைய எபிசோடில் மனோஜின் ஷோரூமுக்கு ரோகிணி வந்திருப்பதை வீட்டில் இருந்தபடியே சிசிடிவி மூலம் விஜயா பார்த்துவிடுகிறார். உடனே அங்கே இருந்த ஸ்பீக்கரில், எல்லோருக்கும் கேட்கும் வகையில் ரோகிணியை கடுமையாக திட்டி அவமானப்படுத்துகிறார்.

    கோபத்தில் விஜயா

    "மூஞ்சு நிறைய மேக்கப் போட்டுக்கிட்டு யாரையாவது பிடிக்க அலையுறியா? என் பையன் தான் கிடைச்சானா? இன்னொரு தடவை கடை பக்கம் வந்தா செருப்பால அடிப்பேன்" என்று விஜயா பேசும் வார்த்தைகள் ரோகிணியை மட்டுமல்ல ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. கடைக்கு வந்தவர்கள் முன்னிலையில் இப்படியாக அவமானப்படுத்தப்பட்ட ரோகிணி, கடும் கோபத்தில் சிசிடிவி கேமராவையே பிடுங்கி எறிகிறார்.

    Advertisement

    கிரிஷ் சொன்ன உண்மைகள்

    அதற்குப் பிறகு ரோகிணி கிரிஷை மருத்துவமனைக்கு கூட்டி செல்கிறார். அங்கே தற்செயலாக முத்துவும் மீனாவும் சந்திக்கிறார்கள். கிரிஷிடம் ஏன் வந்தாய் என்று கேட்டபோது, குழந்தை தெரியாமலே வீட்டில் நடக்கும் உண்மைகளை உளறிவிடுகிறது. "அம்மா அடிக்கடி சண்டை போட்டா தலைவலி வரும்... மனோஜ் அப்பாவோட போன்ல டென்ஷனா பேசுனாலும் வரும்... சிந்தாமணி பாட்டியோட பேசினாலும் வரும்" என்று சொல்வதால் ரோகிணி பதட்டத்தோடு மனோஜை கூட்டிக்கொண்டு போய்விடுகிறார்.

    அசிங்கப்பட்ட விஜயா

    மறுபுறம், மீனாவின் அம்மா வீட்டில் தனியாக இருக்கும் விஜயா, அவரை தேடி வந்த பெண்கள் பேசுவதை ஒட்டுக்கேட்கிறார். "மீனாவுக்கு கொடுமைக்கார மாமியார் கிடைச்சிருக்காங்கன்னு சந்திரா எப்பவுமே சொல்லுவாங்க... இப்போ அதே மாமியாருக்கு தங்க வீடு கூட இல்ல" என்று அவர்கள் பேசுவதை கேட்டதும் விஜயா மனதிற்குள்ளேயே கோபத்தில் வெடிக்கிறார் .

    Advertisement

    மீனா அம்மா வீட்டுக்குள் வந்ததும், "என்னை ஊரெல்லாம் அவமானப்படுத்திட்டீங்களா?" என்று சந்திராவுடன் சண்டை போடுகிறார். அதிலும் மீனாவை பார்த்து, "நீ உன் பதவியை ராஜினாமா பண்ணாம இருக்கிறதால்தான் நான் இப்படி அவமானப்படுறேன்" என்று மீண்டும் குற்றம் சுமத்துகிறார்.

    மீனா எடுத்த முடிவு

    இதனால் மனம் உடையும் மீனா, "நான் இப்பவே போய் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்று கிளம்ப முயற்சிக்கிறார். ஆனால் அங்கே முத்து அதிரடி காட்டுகிறார்.

    "உன்னால எதையும் விட்டுக்கொடுக்க வேண்டாம். வீட்டை நான் மீட்பேன். தேவையெனில் என் காரையே வித்தாவது பணத்தை ரெடி பண்ணுவேன்" என்று முத்து உறுதியாக சொல்கிறார். இதைக் கேட்ட ரசிகர்கள், "இந்த குடும்பத்துக்காக உண்மையிலேயே தியாகம் பண்ணுறது முத்துதான்" என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    Advertisement

    ஆனால் விஜயா அங்கேயும் நின்றுவிடவில்லை. "இரண்டு நாளுக்குள் வீட்டை மீட்க முடியலேன்னா நான் இந்த வீட்டுல இருக்க மாட்டேன்" என்று புதிய அழுத்தம் கொடுக்கிறார். ஒருபுறம் விஜயாவின் பிடிவாதம்... மறுபுறம் முத்துவின் தியாகம்... நடுவில் சிக்கி தவிக்கும் மீனா... இப்படி சிறகடிக்க ஆசை சீரியல் மீண்டும் பரபரப்பை எகிறவிட்டுள்ளது.

    English Summary

    The latest Siragadikka Aasai episode delivers high-voltage family drama with emotional confrontations and shocking twists. Rohini faces humiliation after Vijaya publicly insults her through the showroom speaker system, leaving everyone stunned. Things get worse when Krish unintentionally reveals sensitive family tensions during a hospital visit, putting Rohini in an awkward situation. Meanwhile, Vijaya continues blaming Meena for the family’s house crisis and pressures her to resign from her leadership position. Emotionally broken, Meena considers stepping down, but Muthu firmly stops her and promises to save the house at any cost—even if it means selling his own car. His sacrifice has won massive praise from viewers online. With Vijaya adding even more pressure by issuing a deadline, the serial’s emotional intensity has reached a new peak.