சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து படிப்படியாக தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அவருடைய படங்கள் வெளியாகும் போது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் அவரைப்பற்றி விமர்சனங்களும் சோசியல் மீடியாவில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில், சென்னையில் அக்டோபர் 25ஆம் தேதி நடைபெற்ற செய்தி வாசிப்பாளர் சங்க நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் சின்ன பட்ஜெட் படங்களை பாராட்டுவதற்கு கூட விமர்சனங்களை சந்திக்க வேண்டியது இருக்கிறது என்று மனம் திறந்து பேசி இருக்கிறார். குறிப்பாக ரஜினிகாந்த்தின் ஜெயலர் 2 படத்திற்காக அவரை நேரில் கூப்பிட்டு பாராட்டியதாக வீடியோக்கள் பரவி வருவது குறித்தும் பேசியிருக்கிறார்.
அவர் அதில் பேசுகையில், ஒரு படத்தை அதன் பட்ஜெட்டை வைத்து பெரிய படம் சின்ன படம் என்று பிரிக்கக் கூடாது ஒரு படம் வெற்றி பெறுகிறதா? ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெறுகிறதா? என்பதுதான் முக்கியம். சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றி பெறுவது பெரிய நடிகர்களுக்கும் நல்லது தான். ஏனென்றால் இதன் மூலம் புதிய தொழில்நுட்ப கலைஞர்கள் திறமையான நடிகர்கள், இயக்குனர்களுக்கும் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கும். இதுவரை அதிகம் பேசப்படாத கதையும் மக்களிடம் கொண்டு செல்ல முடியும். ஓடிடி தளங்கள் வளர்ந்த காலத்தில் சின்ன பட்ஜெட் படங்களை திரையரங்குகளில் பார்க்காமல் பின்னர் ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் இப்போது நல்ல கதை கொண்ட படமாக இருந்தால் அதன் பட்ஜெட்டை பார்க்காமல் தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டும் என்று மனநிலை அதிகரித்து இருக்கிறது. இதற்கு உதாரணமாக சிறை, டூரிஸ்ட் பேமிலி, தாய்க்கிழவி போன்ற படங்களில் வெற்றியை சொல்லலாம். இந்த படங்கள் வெற்றி பெறுவது தரமான கதைகளை தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்று ஆர்வத்தை திறைத்துறையில் அதிகரிக்கும். உண்மையில் பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல் நல்ல கதையே ரசிகர்களை திரைக்கு வர வைக்க முடியும் என்பதை பல படங்கள் உணர்த்தி இருக்கின்றன. அதேபோல சின்ன படங்கள் வெற்றி பெறும்போது தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்ல புதிதாக சினிமாவுக்கு வர நினைப்பவர்களுக்கும் நம்பிக்கை கிடைக்கிறது என்று பேசிக் கொண்டிருந்தவர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் 2 படத்தை பாராட்டியது குறித்தும் பேசி இருக்கிறார். நான் ஜெயிலர் 2 படத்தை பார்த்துவிட்டு ரஜினி சாருக்கு போன் செய்து பாராட்டியது கூட மற்றவர்களின் நல்ல விஷயங்களை மனதார பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தான். ஆனால் இதை வைத்து ரஜினியை நேரில் அழைத்து பாராட்டுவது போல ஒரு வீடியோவை வெளியிட்டு சிலர் கிண்டல் செய்கிறார்கள். ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்பட போவது கிடையாது. ஏனென்றால் முகம் தெரியாத ஒருவர் ஏதோ சொல்லி கொண்டிருக்கிறார் என்பதற்காக நான் ஏன் அதைப்பற்றி மண்டையில் ஏற்றி நம்முடைய கவனத்தை சிதற வைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். ஏற்கனவே சிவகார்த்திகேயன் பற்றி எவ்வளவோ விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதைப் பற்றி எல்லாம் அவர் கண்டு கொண்டது கிடையாது. ஆனால் அவருடைய படத்தின் இசை வெளியீட்டு விழாவிலோ அல்லது வெற்றி விழாவிலோ தன்னுக்குள் இருக்கும் ஆதங்கத்தை சிரித்தபடியே கொட்டி வருகிறார். அதேபோலத்தான் இப்போது கூட இந்த ட்ரோல் வீடியோவுக்கு கொடுத்த பதிலும் இருக்கிறது.நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி
கதைக்கு கிடைக்கும் அங்கீகாரம்
அரசியலில் சிவகார்த்திகேயன், தனுஷால் விஜய்யை போல் வரவே முடியாது! அமைச்சர் கீர்த்தனா அட்டாக்!
திரை துறையின் மாற்றம்
விமர்சனத்திற்கு பதில்
தனுஷ் அதிமுக.. சிவகார்த்திகேயன் திமுக.. விஜய்க்கு ஓட்டு போட்டு நொந்துபோன மக்கள்? வெடிக்கும் பிரபலம்