சென்னை: மதுரையில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் ரசிகர்கள் உற்சாகத்தில் வருங்கால முதல்வரே.. வருங்கால பிரதமரே.. என்று கோஷமிட சிவகார்த்திகேயன் உடனே கையால் அமைதியாக இருக்கும்படி சைகை செய்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அண்ணனுக்கு பயம் வந்துருச்சு போல என்று கலாய்த்து வருகின்றனர்.
நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் மேடையில் இருந்த போது கூட்டத்தில் இருந்து ஒரு ரசிகர் உற்சாகமாக வருங்கால முதல்வரே என்று கத்துகிறார். அவ்வளவுதான் சிவகார்த்தி சிரித்தப்படியே உடனடியாக உஷ் என்பது போல கைகளால் சைகை செய்து அமைதியாக இருக்க சொல்கிறார். அந்த ஒரு ரியாக்ஷன் இப்போது வீடியோவில் ஹைலைட்டாக இருக்கிறது. தம்பி இப்பவே ஆரம்பிச்சிடாதீங்க என்று சொல்வது போல இருக்கிறது அவருடைய பாடி லாங்குவேஜ்.
வருங்கால முதல்வரே என்று சிவகார்த்திகேயனை ரசிகர்கள் கூப்பிடுவது இது முதல் முறை கிடையாது. சில மாதங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அப்போதும் அங்கிருந்து ரசிகர்கள் சிவகார்த்திகேயனை பார்த்ததும் வருங்கால முதல்வரே என்று கோஷம் போட உடனே சிவகார்த்திகேயன் அமைதிப்படுத்திய அந்த வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலானதும் அண்ணா உங்களை சிஎம் ஆக்குறதுக்குள்ள நீங்களே எங்களை அமைதியா இருக்க சொல்றீங்களே என்று கலாய்த்து வருகின்றனர். விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவரது ரசிகர்கள் பல வருஷங்களாக அடுத்த முதல்வர் என்று கோஷம் போட்டு வந்தனர். பின்னர் விஜய் உண்மையிலே அரசியலுக்கு வந்து இப்போது தமிழக முதல்வராக இருக்கும் நிலையில் அதே மாதிரி அந்த கோஷங்கள் இப்போது முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயனும் வர ஆரம்பித்திருக்கிறது. ஏற்கனவே விஜய் ரசிகர்களுக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் வாய்க்கால் வரப்பு பிரச்சனை இருக்கிறது. ஏற்கனவே விஜய் கோட் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு துப்பாக்கியை கொடுத்ததும் அடுத்து சினிமாவில் விஜய் இவர்தான் என்றெல்லாம் ரசிகர்கள் சொல்லி வந்தனர். ஆனால் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்துடன் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் ரிலீஸ் ஆகப்போகிறது என்றதும் சிவகார்த்திகேயனை ரசிகர்கள் எதிரியாகவே பார்க்க தொடங்கி விட்டார்கள். கடைசியில் அந்த படம் பெரிதாக வெற்றி பெறாமல் போய்விட்டது. இந்த நிலையில் இப்போது அடுத்த முதல்வரே என்று சொல்லி விஜய் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் என்னை எதிரி ஆக்கி விடாதீர்கள் என்று சொல்வது போலத்தான் சிவகார்த்திகேயன் ஆக்சன் இருக்கிறது என்று நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகிறார்கள். சிலருக்கு இன்னொரு சந்தேகம் வந்திருக்கிறது. உண்மையில் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை அடுத்து முதல்வராக வரவேண்டும் என்று ஆசையில் சொல்கிறார்களா? அல்லது கலாய்க்கிறார்களா? என்று கேள்விகள் வருகிறது.வருங்கால முதல்வரே
மாட்டிவிடும் ரசிகர்கள்
சிக்கலில் சிவகார்த்திகேயன்