தாய் கிழவி இயக்குனருக்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த சிவகார்த்திகேயன்.. ராதிகா செய்த செயல்!


  • சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் செய்த செயல் தான் இப்போ சோசியல் மீடியாவில் பலரையும் வியக்க வைத்திருக்கிறது. பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றி பெற்றால் தயாரிப்பாளர் முதல் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அனைவருக்கும் பரிசு வழங்கப்படுவது புதிது அல்ல. ஆனால் அந்த வெற்றிக்கான முழு பெருமையையும் இயக்குனருக்கே கொடுத்து அவரை கௌரவிக்கும் சம்பவங்கள் அரிதாகவே நடக்கிறது. அதை இப்போது சிவகார்த்திகேயன் செய்திருக்கிறார்.

    Advertisement

    தாய் கிழவி பட சாதனை

    சமீபத்தில் 100 நாட்களைக் கடந்த தாய்க்கிழவி திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் இயக்குனர் சிவகுமார் முருகேசனுக்கு சிவகார்த்திகேயன் கார் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார். அந்த காரை கருப்பு கலர் கவர் போட்டு மூடி வைத்து நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் அந்த படத்தின் தயாரிப்பாளர் தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் நிற்க வைத்து காரின் சாவியை சிவகார்த்திகேயன் இயக்குனர் கையில் கொடுத்து இருக்கிறார்.

    Advertisement

    திறமைக்கு அங்கீகாரம்

    இது வெறும் பரிசு மட்டுமல்ல என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஒரு நல்ல கதையை நம்பி தயாரிப்பாளராக களம் இறங்கிய சிவகார்த்திகேயன் அந்த நம்பிக்கையை வெற்றியாக மாற்றிய இயக்குனருக்கு நன்றி செலுத்திய விதமாகத்தான் இதை அவருடைய ரசிகர்கள் பார்க்கிறார்கள். கடந்த சில வருஷங்களாகவே சிவகார்த்திகேயன் தன்னோட சினிமா பயணத்தில் பல மாற்றங்களை செய்து வருகிறார்.

    75 நாட்களில் 90 கோடி வசூலை அள்ளிய தாய் கிழவி.. சந்தோஷத்தில் சிவகார்த்திகேயன் போஸ்ட்! குவியும் கமெண்ட்ஸ்
    ஹீரோவாக மட்டுமல்லாமல் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வித்தியாசமான கதைகளை தயாரிக்கவும் செய்து வருகிறார். அதனால் தான் அவருடைய தயாரிப்பு நிறுவனத்தில் உருவாகும் படங்கள் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. அந்த வரிசையில் தாய்க்கிழவி திரைப்படம் அதற்கு எடுத்துக்காட்டாக மாறி உள்ளது.

    Advertisement

    ராதிகாவின் நடிப்பு

    பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இல்லாமல் கதையை மட்டுமே நம்பி வெளியான இந்த படம் நல்ல விமர்சனங்களுடன் வசூலில் வெற்றி பெற்று நூறு நாட்களை கடந்துள்ளது. ஓடிடியில் வெளியான பிறகும் இந்த படம் தியேட்டரில் ஓடி பெரிய வெற்றி பெற்றிருப்பது சினிமா வட்டாரத்தில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

    ஒரு காலத்தில் சினிமாவில் ஹீரோயினியாக நடித்து வந்த ராதிகா இப்போது ஹீரோ, ஹீரோயினிக்கு அம்மாவாகவும் மாமியார் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு தாய் கிழவி படத்தில் முக்கிய கதாநாயகி கேரக்டரே கொடுத்தது பெரிய அளவில் பேசப்பட்டது. தன்னுடைய கேரக்டருக்கு தகுந்த நடிப்பை போட்டு மக்களின் அப்ளாஸ் வாங்கி விட்டார். எது எப்படியோ இப்ப இந்த படத்தின் இயக்குனருக்கு கிடைத்த பரிசு அவருடைய உழைப்புக்கான அங்கீகாரம் என்று அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

    English Summary

    Actor Sivakarthikeyan: Recently, the success of the film Thaikzhavi, which has crossed 100 days, was held. Sivakarthikeyan gifted a car to director Sivakumar Murugesan at this function. The car was covered with a black color cover and actress Radhika Sarathkumar and all the production technicians of the film were standing there and the director Sivakarthikeyan handed over the keys of the car.