சென்னை: சின்னத்திரையில் வில்லி கதாபாத்திரம் என்றாலே ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வரும் முகங்களில் ஒன்று நடிகை வந்தனா மைக்கேல். திரையில் அவர் கொடுக்கும் முகபாவனைகள், கண்களில் தெரியும் கோபம், ஹீரோயின்களுக்கு எதிராக அவர் செய்யும் சூழ்ச்சிகள் என பல ஆண்டுகளாக வில்லி கதாபாத்திரங்களில் கலக்கியவர்.
ஆனால் திரைக்கு வெளியே வந்தனாவை சந்தித்தவர்கள் சொல்லும் முதல் விஷயம் வேறு. மிகவும் அமைதியான குணம், மென்மையான குரல், எளிமையான வாழ்க்கை முறை என திரையில் பார்க்கும் வந்தனாவுக்கும் நிஜ வாழ்க்கையில் இருக்கும் வந்தனாவுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக கூறப்படுகிறது.
13 வயதிலேயே நடிப்புலகில் அடியெடுத்து வைத்த வந்தனா, தெலுங்கில் ஒளிபரப்பான "Ithi Katha Kadu" என்ற சீரியலில் மூலம் தனது பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு தமிழில் "ஆனந்தம்" சீரியலில் அறிமுகமானார். இன்றும் பல ரசிகர்கள் வந்தனாவை நினைவில் வைத்திருப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது அந்த ஆனந்தம் சீரியல்தான்.
அதன்பிறகு "தங்கம்", "மாமியார் தேவை", "ரெக்க கட்டி பறக்குது மனசு", "கல்யாணம் முதல் காதல் வரை", "நிலா" உள்ளிட்ட பல வெற்றி தொடர்களில் நடித்தார். சமீபத்தில் கூட ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கெட்டிமேளம் சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக வில்லி கதாபாத்திரங்களில் அவருடைய நடிப்பு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.
வந்தனாவின் காதல் கதை பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான சம்பவங்களால் நிரம்பியுள்ளது. "கனா காணும் காலங்கள்" தொடரின் மூலம் பிரபலமான நடிகர் மைக்கேல் தங்கதுரை மற்றும் வந்தனா முதன்முதலில் சந்தித்தது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில்தான். "பாய்ஸ் Vs கேர்ள்ஸ்" நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போது, பின்னால் இருந்து யாரோ தன்னை கமெண்ட் செய்து கிண்டல் செய்ததாக நினைத்த வந்தனா கோபத்தில் மைக்கேலை திட்டியிருக்கிறார். ஆனால் மறுநாள் நேராக வந்த மைக்கேல், "நேற்று உங்களை கிண்டல் பண்ணியது நான் இல்லை... என் பக்கத்தில் இருந்த ஒருவர் தான் அப்படி பேசினார். அவருக்குப் பதிலாக என்னை திட்டிட்டீங்க" என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். அந்த ஒரு விளக்கம்தான் இருவருக்கும் நட்பை உருவாக்கியது. அந்த காலத்தில் தொகுப்பாளராகவும், நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளராகவும் இருந்த சிவகார்த்திகேயனுடன் மைக்கேலுக்கு நல்ல நட்பு இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு நிகழ்ச்சியில் வந்தனா நடனமாடுவதை பார்த்த மைக்கேல், "இந்தப் பெண் நன்றாக டான்ஸ் ஆடுகிறாரே" என்று ஆச்சரியப்பட்டிருக்கிறார். அப்போது சிவகார்த்திகேயனிடம் இருந்து வந்தனாவின் செல்போன் நம்பரை வாங்கிய மைக்கேல், முதலில் ஒரு வாழ்த்து மெசேஜ் அனுப்பியுள்ளார். அதன்பிறகு இருவரும் அடிக்கடி பேசத் தொடங்கியுள்ளனர். நட்பாக தொடங்கிய உரையாடல் நாளடைவில் காதலாக மாறியது. பல ஆண்டுகள் காதலித்த பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இன்று வரை இவர்களது காதல் கதையை ரசிகர்கள் பேசும்போது, "நோக்கியா கனெக்டிங் பீப்பிள் மாதிரி இவர்களை இணைத்தவர் சிவகார்த்திகேயன் தான்" என்று நகைச்சுவையாக கூறுவதை பார்க்க முடிகிறது. சீரியல் நடிகைகள் என்றாலே ஷாப்பிங், சுற்றுலா, நிகழ்ச்சிகள் என பிஸியாக இருப்பார்கள் என்று பலர் நினைப்பார்கள். ஆனால் வந்தனா முற்றிலும் அதற்கு எதிரானவர். அவருக்கு வெளியில் சென்று ஷாப்பிங் செய்வதை விட வீட்டிலேயே இருப்பது அதிகம் பிடிக்குமாம். குடும்பத்துடன் நேரம் செலவிடுவதையே அவர் விரும்புவதாக பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகாமல் தொடர்ந்து சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார் வந்தனா. ஒரு பக்கம் குடும்ப வாழ்க்கை, இன்னொரு பக்கம் சீரியல் படப்பிடிப்புகள் என இரண்டையும் சமநிலையாக கொண்டு சென்று வருகிறார். அதேபோல் மைக்கேல் தங்கதுரையும் சீரியல்கள், திரைப்படங்கள் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சின்னத்திரையில் ரசிகர்கள் விரும்பும் ஜோடிகளில் ஒருவராக இன்று வந்தனா - மைக்கேல் ஜோடி பார்க்கப்படுகிறது. திரையில் ஹீரோயின்களுக்கு தலைவலியாக இருக்கும் வந்தனா, நிஜ வாழ்க்கையில் மிகவும் அமைதியானவராக இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஷயமாக இருக்கிறது. அந்த நல்ல மனசுக்கார பெண்ணின் வாழ்க்கையில் காதலுக்கும் திருமணத்துக்கும் காரணமாக ஒரு சிறிய போன் நம்பர் உதவியது. அந்த நம்பரை கொடுத்தவர் இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன் என்பதுதான் இந்தக் காதல் கதையின் மிக அழகான திருப்பமாக ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.சண்டையில் தொடங்கிய காதல்
காதலுக்கு பாலமாக இருந்த சிவகார்த்திகேயன்
ஷாப்பிங் பிடிக்காத நடிகை
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன?
திருமணத்திற்குப் பிறகும் தொடரும் வெற்றி
மகனின் 2வது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. பாராட்டு குவியுது
வில்லியாக பயமுறுத்தும் வந்தனா