Jailer 2: ஜெய்லர் 2 படத்துக்கு சிவகார்த்திகேயன் போட்ட போஸ்ட்.. தனுஷின் அதிரடி பதிவு

  • சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் 2 படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கும் நிலையில், ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்திருக்கிறது. அதேபோல நடிகர் தனுஷும் தனது பாணியில் ஒரே வரியில் வாழ்த்து சொல்லியிருக்கிறார்.

    Advertisement

    சிவகார்த்திகேயன் பதிவு

    ரஜினிகாந்த் படம் வெளியாகும் நாளில் ரசிகர்களுக்கு இருக்கும் உற்சாகம் தனி. அதிலும் அவரைத் தனது முன்னுதாரணமாகப் பார்க்கும் சிவகார்த்திகேயன், இந்த முறை வெளியிட்டுள்ள பதிவு பலரையும் கவர்ந்திருக்கிறது. சிவகார்த்திகேயன் தனது பதிவில், "மை ஐடியல், மை இன்ஸ்பிரேஷன், மை தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார். அந்த படபடப்பு, அந்த உற்சாகம், படம் வெளியாகும் நாளுக்கு முந்தைய தூக்கம் இல்லாத இரவு... எதுவும் மாறவில்லை. அதுதான் நீங்கள் தொடர்ந்து உருவாக்கும் மாயாஜாலம் தலைவா! எப்போதும் உங்களை நேசிக்கிறேன். ஜெய்லர் 2 அனைவருக்கும் மாபெரும் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்" என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    இந்த பதிவில் சிவகார்த்திகேயன் சொன்ன ஒரு விஷயம் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது. ரஜினியின் படத்தைப் பார்க்கும் முன்பு ஏற்படும் அந்தப் படபடப்பும், முதல் நாள் படம் வெளியாகும்போது இருக்கும் உற்சாகமும் இன்னமும் மாறவில்லை என்று அவர் கூறியிருக்கிறார். சினிமாவில் வளர்ந்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த பிறகும், தனக்குப் பிடித்த தலைவரின் படம் வெளியாகும்போது முன்பு இருந்த அதே ஆர்வம் இருப்பதாக சிவகார்த்திகேயன் சொல்வது ரஜினி ரசிகர்களுக்கும் நெருக்கமான உணர்வாக இருக்கிறது. அதனால்தான் அவரது பதிவு இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

    தனுஷ் பதிவு

    சிவகார்த்திகேயன் இவ்வளவு விரிவாகத் தனது அன்பை காட்டியிருக்கும் நிலையில், நடிகர் தனுஷும் ஜெயிலர் 2 படத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், "தலைவர் தரிசனம்" என்று குறிப்பிட்டு, அதனுடன் ஃபயர் எமோஜி யையும் சேர்த்திருக்கிறார். ரஜினிகாந்தின் முன்னாள் மருமகனான தனுஷ், நீண்ட விளக்கம் எதுவும் கொடுக்காமல் தனது வழக்கமான சுருக்கமான பாணியில் வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார். அவரது இந்த பதிவும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

    Advertisement

    ஜெயிலர் 2-க்கு பிரபலங்கள் வாழ்த்து

    ஜெயிலர் 2 படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ரஜினிகாந்துக்கும் படக்குழுவினருக்கும் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே முதல் பாகம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதால், இரண்டாம் பாகத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    இப்போது படம் திரைக்கு வந்துள்ள நிலையில், ரசிகர்கள் முதல் நாள் காட்சிகளைப் பார்த்துவிட்டு தங்களுடைய விமர்சனங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஒரு பக்கம் படத்தின் முதல் பாதி குறித்த கருத்துகள் வெளியாகிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற பிரபலங்களின் வாழ்த்துப் பதிவுகளும் கவனம் ஈர்க்கின்றன.

    English Summary

    Jailer 2: Jailer 2 starring Rajinikanth and directed by Nelson, has been released in theaters today. As fans eagerly await the film, a post by actor Sivakarthikeyan extending his best wishes to Rajinikanth has garnered attention online. Similarly, actor Dhanush has also shared his own brief, one-line message of good wishes.