பாக்யராஜ் பற்றி சிவகுமார் சொன்ன வார்த்தை.. கதறி அழுத பூர்ணிமா.. சந்தோஷத்தில் பேசிய சாந்தனு

  • சென்னை: தமிழ் சினிமாவில் சிலருடைய இடத்தை யாராலும் அவ்வளவு எளிதாக நிரப்பி விட முடியாது. அந்த வரிசையில் ஒருவராக இருந்த இயக்குனரும் நடிகருமான பாக்யராஜின் மறைவு இப்போது பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது. அவருடைய மறைவுக்கு பிறகு பலரும் தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

    Advertisement

    இந்த நிலையில் தான் கோவையில் பாக்யராஜ்க்கு நினைவேந்தல் மற்றும் மலர் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பாக்யராஜின் மனைவியும் நடிகையுமான பூர்ணிமா பாக்கியராஜ், மகன் சாந்தனு உள்ளிட்ட குடும்பத்தினர்கள் நடிகர் சிவகுமார் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜ் பார்த்திபன் உட்பட பல இயக்குனர்கள் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    Advertisement

    பாக்யராஜ் நினைவேந்தல்

    அந்த நிகழ்ச்சியில் பாக்யராஜ் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து பாக்யராஜ் உடன் பழகியவர்கள் அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அப்போது நடிகர் சிவகுமார் பேசும் போது கண்கள் கலங்கியபடி, பாக்யராஜ் சினிமா சாதனைகள் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். கடந்த ஜனவரி 7ஆம் தேதி பாக்யராஜின் 50 ஆண்டுகால திரை உலக சாதனை விழா நடைபெற்றதை நினைவுபடுத்தி அந்த நிகழ்ச்சி நடந்த ஆறு மாதம் கூட முழுமையாக முடியாத நிலையில் இப்படி ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டியிருக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று வேதனையோடு பேசினார்.

    Advertisement

    மேலும் பாக்யராஜின் படங்கள் குறித்து பேசிய அவர், கதை திரைக்கதை வசனம் எழுதி தயாரித்து தானே நடித்து படங்களை உருவாக்குவது சாதாரண விஷயம் கிடையாது ஆனால் பாக்யராஜ் அதை செய்து காட்டியவர். அவர் உருவாக்கிய 25 படங்களும் ரத்தினங்கள் போன்றவை. இப்படி ஒரு சாதனையை பாக்யராஜால் மட்டுமே செய்ய முடியும் என்று உருக்கமாக பேசினார்.

    நடிகர் சிவகுமார் பேச்சு

    அந்த ஏழு நாட்கள், முந்தானை முடிச்சு போன்ற பாக்யராஜின் படங்கள் காலம் கடந்து பேசப்படும் என்றும் டார்லிங் டார்லிங் திரைப்படத்தை தான் இரண்டு முறை பார்த்திருப்பதாகவும் சிவகுமார் பேசினார். மேலும் பாக்யராஜின் படங்களில் இருக்கும் திரைக்கதையும் வசனங்களும் எத்தனை வருடங்கள் ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் அவரை வாழவைத்துக் கொண்டே இருக்கும் என்று கூறினார்.

    Advertisement

    கண்கலங்கிய பூர்ணிமா

    அதோடு பாக்யராஜுக்கு வாழ்க்கை துணையாக பூர்ணிமா கிடைத்தது அவருடைய பாக்கியம் என்றும் சிவக்குமார் கண் கலங்கியபடி கூறினார். அதை கேட்டு கொண்டிருந்த பூர்ணிமாவால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்திருந்தது. அப்போது அருகில் இருந்த சாந்தனுவும் அப்பாவை நினைத்து அழுது கொண்டு இருந்தார். ஆனாலும் அம்மாவிற்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.

    சாந்தனு பேச்சு

    பிறகு சிவகுமாரை தொடர்ந்து சாந்தனு பேசினார். அப்போது சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பது தான் என்று அப்பா அடிக்கடி சொல்லுவாரு. அப்பாவை நடிகராகவும் இயக்குனராகவும் பார்த்து வளர்ந்திருக்கிறேன். ஆனால் அவர் மறைந்த பிறகு தான் வாழ்க்கையில் பல பாடங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.

    Advertisement

    அப்பா இறந்த இரண்டு நாட்கள் என எல்லாவற்றையும் தாண்டி மக்களும் அவருடைய நண்பர்களும் வீட்டிற்கு வந்து ஆறுதல் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அதை எல்லாம் பார்த்து அப்பா இத்தனை பேரை சம்பாதித்து வைத்திருக்கிறார் என்று எனக்கு சந்தோஷமாக இருந்தது என்று உருக்கமாக சாந்தனு பேசினார்.

    English Summary

    K Bhagyaraj : Actor Sivakumar became emotional while speaking at K Bhagyaraj’s memorial event in Coimbatore.It was in this context that a memorial and floral tribute program was held for Bhagyaraj in Coimbatore. Bhagyaraj's wife and actress Purnima Bhagyaraj, son Shantanu, family members including actor Sivakumar, director R Sundarraj Parthiban, many directors and many celebrities from the film industry were present.