சென்னை: சமீபத்தில் தான் நடிகர் சூர்யா, ஜோதிகா தங்களது 20வது திருமண நாளை பிரமாண்டமாக கொண்டாடி இருந்தார்கள். மீண்டும் இவர்கள் கிறிஸ்தவ முறையில் திருமணம் செய்து வெளியிட்ட வீடியோக்கள் கூட மீடியாவில் வைரல் ஆனது. இதுகுறித்து சமீபத்தில் நடிகர் சிவகுமார் பேசிய பேட்டி வைரலாகி வருகிறது.
சிவக்குமார் எப்போதுமே மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவார். அதனாலேயே சில சர்ச்சைகளிலும் சிக்கி விடுவார். அதுபோல அவருடைய குடும்பத்தை பற்றி ஏற்கனவே சில வதந்திகள் பரவி வருகிறது. அதாவது சிவகுமாருடன் சண்டை போட்டுக் கொண்டுதான் ஜோதிகா தனது கணவர் சூர்யாவை அழைத்துக் கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார் என்று பலரும் சொல்லி வரும் நிலையில் இதுகுறித்து முதல்முறையாக சிவகுமார் பேசி இருக்கிறார்.
அதில் அவர் பேசும்போது, சமீபத்தில் என்னுடைய மகன் சூர்யாவும், மருமகள் ஜோதிகாவும் 20வது திருமண நாளை கொண்டாடினாங்க. அதை பார்க்கும்போது எனக்கு சந்தேகமாக இருக்கு, இது நம்ம பிள்ளைங்க தானா என்று? ஏன்னா அவங்க அப்படி ஒரு திருமண நாளை கொண்டாடுவாங்க என்று நான் எதிர்பார்க்கல. ஆரம்பத்தில் ஜோதிகா மும்பை பெண்ணாக இருக்கு அந்த பொண்ணு எப்படி நம்ம குடும்பம் சேர்ந்து வாழும் என்று நினைத்தேன். ஆனால் அவங்க எங்க கூட 18 வருஷமா ஒண்ணா தான் வாழ்ந்தாங்க. இப்ப இருக்குற சில நடிகைகள் கல்யாணம் முடிந்ததும் குழந்தை பெத்துக்க மாட்டாங்க. ஆனால் ஜோதிகா கல்யாணம் முடிஞ்சதுமே குழந்தைகளை பெற்றுவிட்டு நல்லபடியாக வளர்ந்து, இப்போ மீண்டும் நடிக்க தொடங்கி இருக்காங்க. நடிகை நடிகர்கள் கல்யாணம் செய்து கொண்டு 20 வருடங்கள் சந்தோசமாக வாழ்வது பெரிய விஷயம். முதல் நாள் அவங்க ரெண்டு பேரும் எப்படி காதலித்தாங்களோ அதே காதல் இன்னும் குறையாமல் இருக்கிறார்கள் என்றால் அது எங்களுக்கு சந்தோஷம் தான் என்று சிவகுமார் வதந்திகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். ஏற்கனவே இந்த திருமண கொண்டாட்டத்தில் கூட கார்த்தியும் அவருடைய மனைவியும் போயிருக்கிறார்கள், அப்போது கூட சிவகுமாரும் அவருடைய மனைவியும் போகவில்லையே! அப்போ சிவகுமாருக்கும் ஜோதிகாவுக்கும் பிரச்சனை இருப்பது உண்மைதானா? என்ற கேள்விகள் எழுந்து வந்தது. ஆனால் சிவகுமார் இப்போது பேசுகையில் எந்த இடத்திலும் ஜோதிகாவை விட்டுக் கொடுக்காமல் பேசி இருக்கிறார்.20வது திருமண நாள் கொண்டாட்டம்
மீண்டும் கம் பேக்
வீரமணி பற்றி அப்பவே தனது புத்தகத்தில் எழுதிய நடிகர் சிவகுமார்.. இப்போ வந்தாச்சு சிக்கல்!
விட்டு கொடுக்காத சிவகுமார்