எஸ்ஜே சூர்யா சொன்ன வலி நிறைந்த வார்த்தை.. இது பலருக்கு பாடம்! வெற்றி அவ்வளவு எளிது இல்ல!

  • சென்னை: இன்றைய எஸ்ஜே சூர்யா என்றாலே ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது அவரது வித்தியாசமான நடிப்பு, தனித்துவமான மேனரிசமும் தான். ஹீரோவாக நடித்திருக்கிறார், வில்லனாக மிரட்டி இருக்கிறார், குணசித்திர கேரக்டரிலும் கலக்கி இருக்கிறார். இயக்குனராகவும் வெற்றி பெற்று இருக்கிறார். ஆனால் இந்த இடத்திற்கு வருவதற்கு முன்பு ஒரு சின்ன காட்சி கிடைத்தால் கூட அதை விடாமல் பிடித்துக் கொண்ட ஒரு இளைஞர்தான் அவர் இருந்திருக்கிறார். இப்போது அந்த பழைய சம்பவங்கள் தான் மீண்டும் சோசியல் மீடியாவில் கவனம் பெற்று வருகிறது.

    Advertisement

    சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசிக் கொண்டிருக்கும் போது கிழக்கு சீமையிலே படத்தில் ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்த போது கையில் சேவலை வைத்து கொண்டு எப்படியாவது ஒரு வாய்ப்பு கிடைத்து சினிமாவில் என்னை கவனிக்க வைத்து விட வேண்டும் என்ற தவிப்பில் வசனமே இல்லாத இடத்தில் வாயை அசைத்து கொண்டிருந்ததாக பேசியிருந்தார். அதை பார்த்த இயக்குனர் பாரதிராஜாவிடம் இருந்து திட்டும் வாங்கி இருக்கிறார்.

    Advertisement

    எஸ்ஜே சூர்யா பேட்டி

    இன்று அந்த சம்பவத்தை அவரே சிரித்துக் கொண்டு செல்லும் போது நமக்கு சிரிப்பு வருகிறது. ஆனால் அந்த நேரத்தில் அதை ஒரு காமெடி சம்பவமாக பார்க்க முடியாது. சினிமாவுக்குள் எப்படியும் நுழைந்து விட வேண்டும் என்று போராடிய ஒரு இளைஞனின் தவிப்பு அது. அதே மாதிரி இன்னொரு சம்பவத்தையும் அவர் பகிர்ந்து இருந்தார். ஆசை படத்தில் வரும் "ஷாக்கடிக்குது சோனா" பாடலில் எஸ்ஜே சூர்யா இரண்டு நொடிகள் வந்து ஆடி விட்டு போவார். உண்மையில் அந்த பாடலில் அவர் ஆடுவதற்கான சூழலே கிடையாதாம்.

    Advertisement

    ஆனால் எப்படியாவது இந்த பாட்டில் என்னை ஒரு இடத்தில் நிறுத்தி விட வேண்டும் என்ற ஆசையில் அந்த வாய்ப்பையும் அவரே உருவாக்கிக் கொண்டாராம். அந்த இரண்டு நொடிகளால் அப்போது அவருக்கு எந்த பெரிய புகழும் கிடைக்கவில்லை. ஆனால் இன்றைக்கு அதே இரண்டு நொடிகளையும், கிழக்கு சீமையிலே படத்தில் அவர் செய்த அந்த சின்ன சேட்டையையும் அவருடைய ரசிகர்கள் தேடிப் பார்த்து ரசிக்கிறார்கள்.

    ஆரம்ப காலம்

    எஸ்ஜே சூர்யாவின் சினிமா பயணம் மிகவும் எளிமையாக ஆரம்பித்துவிடவில்லை. லயோலா காலேஜில் படித்து முடித்த பிறகு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் சென்னைக்கு வந்தவர் ஆரம்பத்தில் வருமானத்திற்காக ஹோட்டலில் வேலை பார்த்து இருக்கிறார். ஒரு பேட்டியில் தனது முதல் சம்பளத்தில் சாப்பிட்ட சாப்பாட்டை நினைத்து அவர் கண்கலங்கியபடியே பேசி இருந்தார்.

    Advertisement

    ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆகவும் படப்பிடிப்பு தளங்களிலும் பல்வேறு வேலைகளையும் செய்திருக்கிறார். நெத்தியடி, கிழக்கு சீமையிலே, ஆசை போன்ற படங்களில் சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்தன. ஆசை படத்தின் காலகட்டத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார். அதாவது நான் ஹீரோவாகத்தான் நடிப்பேன் இல்லை என்றால் நடிக்க மாட்டேன் என்று காத்திருக்கவில்லை. இப்படித்தான் படிப்படியாக சினிமாவுக்குள் நுழைந்து கொண்டே வந்த எஸ் ஜே சூர்யாவை அஜித் கவனித்தார்.

    எஸ்ஜே சூர்யாவின் சினிமா பயணம்

    ஆசை, உல்லாசம் படங்களில் படப்பிடிப்பு அனுபவத்திற்கு பிறகு நல்ல கதை இருந்தால் தான் நடிக்க தயாராக இருப்பதாக அஜித் சொல்லி இருக்கிறார். அங்கிருந்து உருவானது தான் வாலி. ஒரு உதவி இயக்குனராக இருந்த எஸ்ஜே சூர்யா அஜித்தை வைத்து இயக்குனராக அறிமுகமானார். வாலி வெற்றி பெற்றதும் அடுத்ததாக விஜய்யை வைத்து குஷி கொடுத்து இன்னொரு பெரிய வெற்றியும் பெற்றார். அதற்கு பிறகு நியூ, அன்பே ஆருயிரே, இசை என இயக்குனராகம் தனது பாதையை உருவாக்கினார். ஆனால் அவருடைய மனதில் இருந்த நான் நடிகனாக வேண்டும் என்று ஆசை மட்டும் போகவே இல்லை.

    Advertisement

    நியூ மூலம் ஹீராவாக வந்தாலும் அதற்கு பிறகு அவருடைய பயணம் நினைத்த மாதிரி போகவில்லை. ஒரு கட்டத்தில் திரையுலகில் சறுக்களையும் சந்தித்தார். அதற்கு பிறகு ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்கவில்லை இறைவி வந்தது அதில் நடித்த எஸ் ஜே சூர்யாவை பார்த்த தமிழ் சினிமாவே இந்த ஆளுக்குள் இவ்வளவு நடிப்பு இருக்கா? என்று திரும்பி பார்த்தது. அதற்கு பிறகு மெர்சல், ஸ்பைடர், மாநாடு, டான், வாரிசு, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மார்க் ஆண்டனி என அவர் சென்ற பாதை வேராகிவிட்டது.

    முயற்சி வேண்டும்

    நாம வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்காக காத்துக் கொண்டே இருக்காமல் கிடைக்கிற சின்ன சின்ன கேப்பிலும் நம்முடைய திறமையை வெளிக்காட்டி கொண்டே இருக்க வேண்டும். எனக்கு எல்லாமே அதுவா வந்து கிடைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தால் எதுவும் நடக்காது. நமக்கான பாதையை நம்மால் தான் உருவாக்க முடியும் என்பது இவருடைய வாழ்க்கையை பார்க்கும் போதே தெரிகிறது.

    English Summary

    SJ Surya: When fans think of the SJ Surya of today, the first things that come to mind are his unconventional acting style and unique mannerisms. He has starred as a hero, delivered menacing performances as a villain, and excelled in character roles; he has also achieved success as a director. Yet, before reaching this position, he was a young man who would seize even the smallest opportunity that came his way and hold onto it firmly.