செருப்பை துடைங்க.. இல்லன்னா வெளியே போங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த விபரீதம்! கழுவி ஊற்றும் ரசிகர்கள்

  • சென்னை: பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதுமே பல விமர்சனங்கள் எழுந்து விட்டது. இதுவரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டு வந்த நிலையில் இனி காமன்மேனும் கலந்து கொள்ளலாம் என்று சொல்லி சோசியல் மீடியாவில் பிரபலமாக இருப்பவர்களை இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு கொடுத்த டாஸ்க் எல்லாம் இவ்வளவு மோசமாக இருக்கிறதே என்று பலரும் திட்டி வரும் நிலையில் இப்போது அக்கினி பரிட்சை 2 என்ற டாஸ்க் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    Advertisement

    அதாவது தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் நடந்த அக்னி பரீட்சை 2 டாஸ்க் தான் பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது. ஏற்கனவே தமிழில் 50 பேரை 2 பஸ்ஸில் ஏற்றிவிட்டு கொடுமைப்படுத்தி சண்டை போட வைத்து ரசித்தார்கள். ஆனால் தெலுங்கில் அதற்கு ஒரு படி மேலே போய் செருப்பை கழுவ வைத்திருக்கின்றனர்.

    Advertisement

    தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி

    அதாவது பிக் பாஸ் அக்னி பரீட்சை 2 என்ற நிகழ்ச்சி ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் ஓடிடியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை முன்னால் பிக் பாஸ் போட்டியாளர்களான நவநீத், அபிஜீத் துத்தாலா மற்றும் நடிகை பிந்து மாதவி ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள். அதில் தொகுப்பாளராக ஸ்ரீமுகி உள்ளார். ஆனால் போட்டியாளர்களை தேர்வு செய்யும் விதத்தில் கொடுக்கப்பட்ட சில டாஸ்க்கள்தான் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    போட்டியாளருக்கு கொடுத்த டாஸ்க்

    ஒரு முதலில் ஒரு ஆண் போட்டியாளர் வந்து தான் மிகவும் தைரியமானவர், எந்த சவாலையும் ஏற்றுக் கொள்வேன் என்று கூறியிருக்கிறார். அவ்வளவுதான் அப்படியா அப்போ புஷ்அப்ஸ் என்று என்று நவநீத் டாஸ்க் கொடுத்து இருக்கிறார். அதோட நிறுத்தாமல் முதலில் 10 கிலோ எடையை முதுகில் வைத்து புஷ் அப் எடுக்க செய்திருக்கிறார். பின்னர் எடையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 40 கிலோ வரை கொண்டு சென்றிருக்கிறார்.

    Advertisement

    போட்டியாளரும் விடாமல் புஸ் அப்ஸ் எடுத்து இருக்கிறார். இதை பார்த்த தொகுப்பாளர் ஆச்சரியப்பட்டு இருக்கிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று 8 மாதங்களாக ஜிம்முக்கு போன ஒரு பெண்ணுக்கு தான் நடிகை பிந்து மாதவி கொடுத்த டாஸ்க் சர்ச்சையின் மையமாக மாறி இருக்கிறது. 8 மாதமாக ஜிம் போய் ஒர்க் அவுட் செய்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன் என்று அந்த பெண் பெருமையாக சொல்லி இருக்கிறார்.

    கதறி அழுத பிரபலம்

    உடனே பிந்து மாதவி அங்கிருந்த செருப்பை எடுத்து சுத்தம் செய்ய சொல்லி இருக்கிறார். அதற்கு கேட்டு அதிர்ச்சியான அந்தப் பெண் இதை சொன்னால் செய்ய முடியாது, என்னை நானே அவமானம் படுத்திக் கொள்வது போல இருக்கும் என்று கூறியிருக்கிறார். அதற்கு அபிஜித் எந்த வேலையும் கேவலமானது கிடையாது என்று சொல்லி இருக்கிறார். பிறகு அந்தப் பெண் ஒரு வழியாக செருப்பை எடுத்திருக்கிறார். ஆனால் அதை சரியாக சுத்தம் செய்வதற்கு பதிலாக தண்ணீர் பக்கெட்டில் போட்டு இருக்கிறார்.

    Advertisement

    அவ்வளவுதான் உடனே டாஸ்க் கொடுத்த பிந்து மாதவிக்கு கோபம் வந்துவிட்டது. சூவை யாராவது இப்படி தண்ணீரில் முக்கி வாஷ் பண்ணுவாங்களா? என்று கேள்வி கேட்டு நான் கொடுத்த டாஸ்கை நீங்க சரியாக எடுத்துக்கல என்று ரெட் பிளாக் கொடுத்திருக்கிறார். இதனால் அந்த பெண் கண்ணீர் விட்டு அழ தொடங்கி விட்டார்.

    போட்டியாளரின் வருத்தம்

    ஆனால் இன்னொரு நடுவராக இருந்த அபிஜித் உலகில் எந்த வேலையும் கேவலமானது கிடையாது என்று சொல்லி தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்து சென்று அந்த போட்டியாளரின் காலிலிருந்து செருப்பை கழட்டி தானே துடைத்து விட்டிருக்கிறார். இதுதான் இப்போது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    Advertisement

    பொதுவாக பள்ளி கல்லூரிகளில் புதிதாக சேரும் மாணவர்களை ஈவ்டிசிங் செய்வதே தண்டனைக்குரிய குற்றம் இதுபோல யாரும் செய்யக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க் என்கிற பெயரில் போட்டியாளர்களின் மரியாதையை மற்றும் அவர்களுடைய மன நிலையை உடைக்கும் வகையில் மோசமான டாஸ்க் கொடுக்கிறார்கள் என்ற விவாதம் எழுந்திருக்கிறது.

    அடுத்தவரிடம் வேலை செய்தால் அடிமையா? Bigg Boss common man ஆடிஷனில் நடந்த விவாதம்! ஆரி கேட்ட கேள்வி
    ஏற்கனவே 10 சீசன்களாக பார்த்து பழகிய போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் போய் நாமளும் இப்படித்தான் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து சண்டை போட வேண்டும் என்று ஒரு விதமான நிலையின் வருகிறார்கள். உள்ளே வந்தவர்களை விடாமல் நீங்கள் பஸ்ஸில் சீட்டைப் பிடிக்க வேண்டும், ரூமுக்குள் இருக்கும் சேரை பிடிக்க வேண்டும் என்று சொல்லி உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்குள் இருக்கும் வன்மத்தையும் குரூரத்தையும் தூண்டிவிடுகிறார்கள்.

    Advertisement

    இதனால் போட்டியாளர்கள் கீழே விழுந்து அடிவாங்கி கோபத்தின் உச்சத்துக்கு போகிறார்கள். இதெல்லாம் பார்க்க நல்லாவா இருக்கு? என்று பலரும் திட்டி வருகின்றனர். ஒரு காலத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி விமர்சனங்களை சந்தித்தாலும் பிறகு பலருடைய திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு உதவியது. ஆனால் இப்போது இந்த நிகழ்ச்சியில் சண்டை சச்சரவுகள் மட்டும் தான் இருக்கிறது என்று பலரும் கூறுகிறார்கள்.

    English Summary

    Bigg Boss: Since the launch of Bigg Boss Common Man, many criticisms have arisen. So far only celebrities have participated as contestants in Bigg Boss, they have sent people who are famous on social media to this show saying that now common man can also participate. But when many people are criticizing that all the tasks given to them are so bad, now the task of Agni Paritchai 2 has created a debate.