மனைவி மீது ஆப்பிளை உருட்டி.. வாயால் கவ்வி.. என்னங்க டாஸ்க் இப்படி இருக்கு! கடுப்பான நெட்டிசன்கள்

  • சென்னை: சோசியல் மீடியாவை திறந்தாலே இப்போது ஏதாவது ஒரு கப்பில் சேலஞ்ச் (couple challenge) கண்ணில் படுகிறது. கணவன் மனைவி சேர்ந்து விளையாடும் டாஸ்க் என்ற பெயரில் முன்பு புதிர் கேள்வி, பலூன் உடைப்பது, உணவு சாப்பிடுவது என்று இருந்தது. இப்போது சில விடியோக்களில் டாஸ்க் கொடுக்கிற விதமே வேற லெவலுக்கு போய்விட்டது. கணவன் மனைவி சவால்கள் சோசியல் மீடியாவில் தொடர்ந்து வைரலாகும் வகையிலும் இருக்கின்றன.

    Advertisement

    இப்போ கூட ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் பெண்கள் வரிசையாக படுத்திருக்கிறார்கள். அவர்களுடைய கால் பகுதியில் ஒரு ஆப்பிளை வைத்து கால் நுனிப்பகுதியில் இருந்து கணவன் வாயால் மெல்ல மெல்ல அந்த ஆப்பிளை உருட்டி மனைவியின் நெற்றிவரை கொண்டு வர வேண்டும். கடைசியில் அந்த ஆப்பிளை சாப்பிடுவது தான் டாஸ்க். வீடியோவை பார்த்த சிலர் இதை ஜாலியான கணவன் மனைவி விளையாட்டு என்று ரசித்து பார்க்கிறார்கள்.

    Advertisement

    புது டாஸ்க்

    இன்னும் சிலர் டாஸ்க் கண்டுபிடிக்கிறவங்க முதல்ல ஒரு நிமிஷம் யோசிப்பாங்களா? என்று கேட்கிறார்கள். இதை பார்க்கும் போது டாஸ்க் விளையாடுகிறார்களா? அல்லது கேமராவை மறந்து முதலிரவு கொண்டாடுகிறார்களா என்று யோசிக்க வைக்கிற அளவுக்கு தான் இந்த டாஸ்க் இருக்கிறது. மனைவியின் அந்தரங்க பகுதிகளில் ஆப்பிள் சிக்கிக் கொள்வது... பிறகு அதிலிருந்து கணவன் ஆப்பிளை முகத்தை வைத்து வெளியே எடுப்பது... உடல் பாகங்களின் ஏற்ற இறக்கங்களில் ஆப்பிள் நகர முடியாமல் தவிப்பதும், அப்போது கணவர் ஆப்பிளை முகத்தை வைத்தே முன்னேற்றிக் கொண்டு போவதை உற்றுப் பார்க்கும் ரசிகர்களுக்கு ஏதேதோ தோன்றுகிறதாம். அதையும் கமெண்ட்களில் கொட்டுகிறார்கள்.

    Advertisement

    கணவன் மனைவி சேலஞ்ச்

    இப்படி ஒரு டாஸ்கை வீட்டில் குழந்தைகள் முன்னாடி வைத்து விளையாட முடியுமா? அப்பா, அம்மா விளையாடுறாங்க என்று குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கும்போது இதுபோன்ற உடல் நெருக்கத்தை மையமாக வைத்த விளையாட்டுகளை எப்படி புரிந்து கொள்ளும்? இதை பார்க்கும் போது குழந்தைகள் மனநிலை என்னவாக இருக்கும்? என்பது பெரிய கேள்வி குறிதான்.

    ரகசியம் காக்கவும்

    கணவன் மனைவி அன்பாக இருப்பது தவறு என்று சொல்ல முடியாது. அன்பு வேறு, அதை எல்லோரும் பார்க்க வேண்டும் என்று நினைப்பது வேறு. இதுதான் இப்போ சோசியல் மீடியாவில் யோசிக்க வேண்டிய விஷயம். கணவன் மனைவியை கட்டிப்பிடிப்பது, மனைவி கணவனை முத்தம் இடுவது, இருவரும் சேர்ந்து சந்தோஷமாக இருப்பது இவை எல்லாம் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் ஒரு பகுதி. ஆனால் அதையே சேலஞ்ச், டாஸ்க், வைரல் கண்டண்ட் என்று மாற்றி இன்னும் இன்னும் கிளுகிளுப்பாக காட்ட வேண்டிய அவசியம் என்ன?

    Advertisement

    கவனிக்க வேண்டியது

    நேற்று வரை யார் அதிகமாக சாப்டாங்க? என்று டாஸ்க் போட்டாங்க. இன்று ஆப்பிளை எங்கே உருட்டுவது என்று வந்துட்டாங்க. நாளைக்கு என்ன டாஸ்க் வரப்போகுதோ என்று நெட்டிசன்களை பயப்படுகிறார்கள். கணவன் மனைவி உறவின் தனிப்பட்ட தருணங்களையே டாஸ்க் ஆக மாற்றிக் கொண்டு போனால் ஒரு கட்டத்தில் இது பொழுது போக்கா? அல்லது வெறும் வீயூஸ்க்காக செய்யப்படும் விஷயமா என்று கேள்வி வரதான் செய்யும்.

    வீட்டுக்குள் இருக்கும் சந்தோஷம் வீட்டுக்குள்ளேயே இருந்தால் அதன் மதிப்பு குறைந்து போய்விடாது. எல்லாவற்றையும் ரீல்ஸ் ஆக்கினால் ஒரு கட்டத்தில் ஏமாற்றமும் வெறுமையும் தான் வரும்.

    English Summary

    Social media: Open social media these days, and you are bound to come across some "couple challenge" or another. While these tasks—performed jointly by husbands and wives—used to involve simple activities like solving puzzles, popping balloons, or eating, the nature of the challenges in some recent videos has reached a whole new level. These couple challenges frequently go viral on social media.