சென்னை: பிக் பாஸ் தமிழ் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன் குறித்து இன்ஸ்டாகிராம் பிரபலமான வாஹிதா அக்தர் வெளியிட்டு வரும் பதிவுகள் தொடர்ந்து பேசுபொருளாகி வருகின்றன. தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக நம்ப வைத்து முத்துக்குமரன் நெருக்கமாகப் பழகியதாக அவர் குற்றம்சாட்டியிருந்த நிலையில், தற்போது பகிர்ந்துள்ள புதிய பதிவு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கருப்பு நிறப் பின்னணியில் வாஹிதா பகிர்ந்திருக்கும் பதிவில், "Not rape, but false hope and promises" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, "இது பாலியல் வன்கொடுமை அல்ல; தவறான நம்பிக்கையும் வாக்குறுதிகளும்தான்" என்பதுதான் அதன் பொருள். மேலும் அந்த போஸ்ட்க்கு "That's all" என்றும் அவர் எழுதியிருக்கிறார்.
வாஹிதா புதிய பதிவு
இந்தப் பதிவில் முத்துக்குமரனின் பெயரை வாஹிதா நேரடியாகக் குறிப்பிடவில்லை. இருந்தாலும், ஏற்கனவே முத்துக்குமரன் பற்றி பல குற்றச்சாட்டுகளை வைத்து அடுத்தடுத்த வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். ஆனால் அந்த வீடியோக்களை திடீர்னு டெலிட் பண்ணுகிறார். மீண்டும் புது வீடியோ போடுகிறார், பிறகு அதையும் டெலிட் பண்ணுகிறார். இதுவே 2 நாட்களாக வாஹிதா செய்யும் வேலையாக இருக்கிறது.
ஏற்கனவே அவர் தற்கொலை முயற்சி செய்யும்போது எடுத்த வீடியோக்களை டெலிட் செய்தது பற்றி இன்று காலையில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் நான் பேசிய அந்த வீடியோக்களை டெலிட் செய்தது என்னை காப்பாற்றிய என்னுடைய நண்பர்கள்தான். நான் தற்கொலை முயற்சி செய்ததும் ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டு என் கையில் இருந்த போனிலிருந்து வீடியோக்களை எல்லாவற்றையும் அவர்கள் தான் டெலிட் பண்ணி விட்டார்கள் என்றும் சொல்லியிருந்தார். ஆனால் இப்போது மீண்டும் போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்.
முன்னதாக வெளியிட்ட வீடியோக்களில், தனக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது உள்ளிட்ட தனது கடந்த கால வாழ்க்கை முத்துக்குமரனுக்குத் தெரியும் என்றும், தன்னிடம் அன்பாகப் பேசி திருமணம் செய்துகொள்வதாக அவர் கூறியதாகவும் வாஹிதா தெரிவித்திருந்தார். அந்த வார்த்தைகளை நம்பித்தான் அவருடன் நெருக்கமாகப் பழகியதாகவும், பின்னர் திருமணம் குறித்துப் பேசியபோது அவர் மறுத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், நேரில் சந்தித்தபோது முத்துக்குமரன் தன்னிடம் அன்பாக நடந்துகொண்டதாகவும், தனது விருப்பம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டேன் என்று கூறியதாகவும் வாஹிதா பேசியிருந்தார். மாதவிடாய் காலத்தில் இருப்பதாகத் தெரிவித்தபோதும் தன்னுடன் உடலுறவில் ஈடுபட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் வாஹிதா தரப்பில் கூறப்பட்டவை. இந்த விவகாரம் தொடங்கியபோது, தானும் வாஹிதாவும் நல்ல நண்பர்களாகப் பழகி வந்ததாகவும், அவர் ஏன் இப்படிப் பதிவிட்டார் என்பது தனக்குப் புரியவில்லை என்றும் முத்துக்குமரன் விளக்கம் கொடுத்திருந்தார். இப்போது வாஹிதா பகிர்ந்துள்ள புதிய பதிவில், இந்த விவகாரத்தைத் தான் எப்படிப் பார்க்கிறார் என்பதைச் சுருக்கமாகத் தெரிவித்திருக்கிறார். பீரியட்ஸ் நேரத்தில் உடலுறவு.. அதுவும் எப்படி தெரியுமா? முத்துக்குமரன் பற்றி அடுத்த குண்டை போட்ட வாஹிதாமுத்துக்குமரன் மீது குற்றச்சாட்டு
தற்கொலை முயற்சி
1000 முத்தம், உறவு வைத்து கொண்டு பிக் பாஸ் முத்துக்குமரன் ஏமாத்திட்டாரு.. தற்கொலை முயற்சி செய்த பெண்!
அவர் கூறும் குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருக்க, நடந்த சம்பவங்கள் குறித்து முழுமையான தகவல்கள் வெளிவர வேண்டியிருக்கிறது. சமூக வலைதளப் பதிவுகளை மட்டுமே வைத்து யார் மீதும் முடிவுக்கு வந்துவிட முடியாது என்பதால், இந்த விவகாரத்தில் முத்துக்குமரனின் அடுத்தகட்ட விளக்கம் என்ன என்பதுதான் தற்போது கவனிக்கப்படுகிறது.