சென்னை: சோசியல் மீடியாவில் ரீல்ஸ் கலாச்சாரம் நாளுக்கு நாள் எந்த அளவுக்கு போய்க்கொண்டு இருக்கிறது என்பதற்கு இன்னொரு உதாரணமாக ஒரு வீடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது. கண்டன்டுக்காக என்ன கருமத்தை பண்றாங்க என்று சொல்ல வைக்கும் அளவிற்கு தான் மோசமான ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது.
அதாவது அந்த வீடியோவில் ஒரு ஆணும், பெண்ணும் கணவன் போல் மனைவி போல் நடித்து இருக்கிறார்கள். ஆரம்பத்தில் அந்த ஆண் பெண்ணின் டி-ஷர்ட்டுக்குள் எட்டிப் பார்த்து அவருடைய மார்பகம் சின்னதாக இருக்கிறது என்பது போல சைகை காட்டுகிறார். அதனால் அந்தப் பெண் கடுப்பாகி அவர் அணிந்திருக்கும் டிரவுசரைக்குள் எட்டிப் பார்த்து அவருடைய ஆணுறுப்பு விரல் சைஸுக்கு இருக்கிறது என்பது போல அவரும் சைகை காட்டி கிண்டல் செய்கிறார்.
இதனால் அந்த ஆண் கடுப்பாகி அந்த பெண்ணை ஒரு பாட்டிலை அடிக்க தூக்குவது போல அந்த வீடியோ இருக்கிறது. இது காமெடிக்காக செய்தது என்று அந்த ரீல்ஸ் வீடியோவில் இருக்கிறது. ஆனால் இதுவெல்லாம் காமெடியா? இப்படியா சோசியல் மீடியாவில் கேவலமாகவும், ஆபாசமாகவும் வீடியோ போடுவிங்க என்று பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். கணவன் மனைவி என்றால் ரூமுக்குள் செய்ய வேண்டிய விஷயங்களை எல்லாம் இப்போ கேமரா முன்பு ரீல்ஸில் செய்வதுதான் சிலருக்கு வாடிக்கையாக மாறிவிட்டது. இப்போது பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இது போன்ற ரீல்ஸ் பிரியர்களுக்கு லைக் வர வேண்டும் என்பதற்காக அடுத்தவர்களின் பாலுணர்வை தூண்டும் வகையில் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். இது ஸ்கிரிப்டட் வீடியோவாக இருந்தாலும் ஒரு வீடியோவை வைத்து என்ன மாதிரியான கண்டன்ட் உருவாக்குகிறோம் என்று சோசியல் மீடியாவில் வரைமுறை இல்லாதது, இதுபோன்ற ஆபாசமான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஏற்கனவே பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்குமே சமுதாயத்தில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது. பெண் குழந்தைகள் மட்டுமல்லாமல், ஆண் குழந்தைகளையும் வெளியே நம்பி விட முடியவில்லை. காம கொடூரர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் சமயத்தில் இதுபோன்ற வீடியோக்கள் வெளியிடுவதை தடுக்க சோசியல் மீடியாவிலும் சென்சார் வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இப்பதெல்லாம் சிலருக்கு ரிலீஸ் என்பது வெறும் பொழுதுபோக்கு இல்லை. லைக் எத்தனை, ஷேர் எத்தனை, வியூஸ் எவ்வளவு என்பது முக்கியமாகிவிட்டது. அதற்காக சிலர் ஆபாச உடை அணிந்து சப்ஸ்கிரைப் என்ற பெயரில் கல்லா கட்டி வருகிறார்கள். அதற்கு எதிராகவும் இப்போது குரல் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல கணவன் மனைவி என்கின்ற பெயரில் இது போன்ற நபர்கள் வெளியிடும் வீடியோக்களையும் தடை செய்ய வேண்டும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. வியூஸ் வரணும் என்பதற்காக எவ்வளவு கீழே போகப் போகிறோம் என்பதுதான் இப்போது சோஷியல் மீடியாவுக்கு முன்னாள் இருக்கும் பெரிய கேள்வியாக இருக்கிறது.ஆபாசமான ரீல்ஸ் வீடியோ
சோசியல் மீடியா பயன்பாடு
அனைவரின் எதிர்பார்ப்பு
கட்டுப்பாடு வேண்டும்