சொக்கத்தங்கம் நடிகைக்கு 38 வயதில் இப்படி சோதனை? 10 ஆயிரத்தை திருப்பி தந்த நேர்மை நடிகை சுமித்ரா யார்

  • சென்னை: சொக்கத்தங்கம் நடிகை உமா சங்கரிக்கு 38 வயதே ஆகிறது.. இந்த இளம் வயதில் அவருக்கு இப்படி ஒரு நோய் பாதிப்பு ஏற்பட்டது ரசிகர்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இன்று மட்டும் விஜயகாந்த் உயிரோடு இருந்திருந்தால், உமாசங்கரியின் நிலைமையை கேள்விப்பட்டு, உடனடியாகத் தொடர்புகொண்டு அவருக்குத் தேவையான மனரீதியான ஆதரவையும் மருத்துவ உதவிகளையும் செய்திருப்பார் என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கருத்து தெரிவித்துள்ளார்.

    Advertisement

    Aramnaadu சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, புற்றுநோயுடன் போராடும் நடிகை உமாசங்கரி குறித்து பேசும்போது, "விஜயகாந்த் நடிப்பில் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான "சொக்கத்தங்கம்" படத்தில் நடிகை உமாசங்கரி நடித்து பெயர் பெற்றார்.. விஜயகாந்தின் தங்கையாக மிகவும் இயல்பான, அமைதியான மற்றும் இன்னசென்ட்டான ஒரு கிராமத்துப் பெண் கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தார்.

    Advertisement

    உமாசங்கரி, 100-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடப் படங்களில் நடித்த பிரபல நடிகை சுமித்ராவின் மகள் ஆவார். இவர் சத்யராஜ் நடித்த வீரநடை என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

    சொக்கத்தங்கம் நடிகை

    'சொக்கத்தங்கம்' படத்தில் அண்ணன்-தங்கை பாசத்தை மிகவும் பிரமாதமாக வெளிப்படுத்தியிருப்பார். அண்ணன்-தங்கை பாசக் கதைக்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்தப் படம் அமைந்தது. இந்த படத்தில் அவரது நடிப்பைப் பார்த்துப் பலரும் இவரை நிஜமாகவே விஜயகாந்தின் தங்கை என்று நினைக்கும் அளவுக்கு அடையாளம் கண்டுகொண்டனர்.

    2006-ஆம் ஆண்டு துஷ்யந்த் என்ற சாப்ட்வேர் என்ஜினியரை திருமணம் செய்து கொண்டு செட்டிலான பிறகு, அவர் சினிமா மற்றும் சீரியல்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். சுமார் 20 வருடங்களாக அவரைப் பற்றிய செய்திகள் எதுவும் வெளியாகாத நிலையிலும், அவரது சினிமா பாடல்கள், படங்கள் வரும்போதெல்லாம் ரசிகர்கள் அவரைப் பற்றி நினைவு கூர்ந்து தேடி வந்தனர்.

    Advertisement

    38 வயதில் சோதனை

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு உமாசங்கரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலையில் ஸ்கார்ப் அணிந்த போட்டோவை ஷேர் செய்து தனக்கு ஆரம்ப கட்ட மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், இப்போது கீமோதெரப்பி சிகிச்சை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    இந்தச் சோதனையான காலத்தில் குடும்பத்தினரின் ஆதரவும், ரசிகர்களின் பிரார்த்தனைகளும் தனக்கு பெரும் நம்பிக்கையைத் தருவதாக அவர் பதிவிட்டிருந்தார்.. சுமார் 38 வயதே ஆகும் இளம் வயதில் அவருக்கு இப்படி ஒரு நோய் பாதிப்பு ஏற்பட்டது ரசிகர்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று மட்டும் விஜயகாந்த் உயிரோடு இருந்திருந்தால், உமாசங்கரியின் நிலைமையை கேள்விப்பட்டு, உடனடியாகத் தொடர்புகொண்டு அவருக்குத் தேவையான மனரீதியான ஆதரவையும் மருத்துவ உதவிகளையும் செய்திருப்பார்..

    Advertisement

    உமாசங்கரி - கீமோ சிகிச்சை

    உமாசங்கரியின் அப்பா கன்னடத் திரையுலகில் 50-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் என்பதால், அவர்களுக்கு பணத் தேவை இருக்காது. ஆனால், நோய் பாதிப்பு நேரத்தில் திரையுலகினரின் மனரீதியான ஆதரவு மிக முக்கியம்.

    ஷூட்டிங் காலத்தில் ஒன்றாக சாப்பிட்டுப் பழகும் பல திரையுலகினர், படம் முடிந்ததும் ஒருவரையொருவர் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் விஜயகாந்த் அப்படிப்பட்டவர் கிடையாது. அவர் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் ஓடிவந்து உதவி செய்திருப்பார்.

    புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டறிந்தால் அறுவை சிகிச்சை, கீமோதெரப்பி அல்லது ரேடியோதெரப்பி மூலம் கட்டுப்படுத்த முடியும். இருந்தாலும் வாழ்நாள் முழுவதும் அவ்வப்போது பரிசோதனைகளும் மருந்தும் தேவைப்படும். இந்த சிகிச்சை முறை உடலளவிலும் மனதளவிலும் பெரும் அழுத்தத்தையும் சவால்களையும் தரக்கூடியது.

    Advertisement

    வருங்கால மனைவி

    கன்னட நடிகர் சிவராஜ்குமார், நடிகை மனிஷா கொய்ராலா போன்றோர் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்து வெற்றிகரமாக வாழ்ந்து வருகிறார்கள். அந்தவகையில் உமாசங்கரியும் தன்னம்பிக்கையுடன் இதிலிருந்து மீண்டு வருவார்..

    உமாசங்கரியின் அம்மாவும், பிரபல நடிகையுமான சுமித்ராவை பற்றி இங்கே சொல்லியாக வேண்டும்.. எனது அப்பா, ஆஸ்கார் மூவிஸ் பாஸ்கர் தயாரிப்பில் "வருங்கால மனைவி" என்ற படத்தில் நடிக்க சுமித்ராவுக்கு ₹10,000 முன்பணம் தரப்பட்டது; ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது. பல வருடங்களுக்கு பிறகு "பௌர்ணமி அலைகள்" படத்தில் நடித்து முடித்த சுமித்ராவுக்கு ₹50,000 பாக்கித் தொகை தரப்பட்டபோது, அதில் ₹10,000-ஐ திருப்பித் தந்தார்.. 'அன்று கைவிடப்பட்ட படத்திற்கு வாங்கிய அட்வான்ஸை இதில் கழித்துக் கொள்கிறேன் என்று நேர்மையுடன் சொன்னார்.

    Advertisement

    நட்சத்திர குடும்ப வாரிசு

    தயாரிப்பாளர் எவ்வளவோ வற்புறுத்தியும்கூட, அன்று வாங்கிய பணத்தை கழித்துக் கொள்கிறேன் என்று கறாராக சொல்லி, கட்டாயப்படுத்தி அந்த பணத்தை திருப்பி தந்தார்.. இப்படிப்பட்ட நல்ல எண்ணம் கொண்ட நடிகைகளை அன்றைய காலத்தில் காண்பது அரிது.

    உமாசங்கரி இப்படிப்பட்ட பாரம்பரியமும் நல்ல எண்ணமும் கொண்ட ஒரு நட்சத்திரக் குடும்பத்தில் இருந்து வந்தவர். அன்றைய காலத்திலேயே அவரது தாய் செய்த நல்ல காரியங்களும் நல்லெண்ணங்களும், இறைவனின் அருளால் உமாசங்கரிக்குத் துணையாக நின்று, அவர் புற்றுநோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்து நல்லபடியாகத் திரும்பி வர உதவும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Sokkathangam Actress Faces a Crisis at 38.. Who Is the Honest Actress Sumithra?